herzindagi
image

முகத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க வைட்டமின் ஈ எண்ணெய்யைப் பயன்படுத்தும் முறை!

பெண்களின் சருமம் எப்போதும் பளபளப்பாகவும், ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும் என்றால் அதற்கு வைட்டமின் ஈ எண்ணெய்யைப் பயன்படுத்தலாம் என அழகுக்கலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Editorial
Updated:- 2025-11-04, 00:02 IST

 

இன்றைக்கு உள்ள மோசமான உணவுப்பழக்கம் மற்றும் வாழ்வியல் முறைகள் போன்றவற்றால் சருமத்தில் பல விதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. முகப்பருக்கள், கரும்புள்ளிகள், நிறம் மங்குதல் போன்ற பல்வேறு காரணங்களால் சருமம் பொலிவின்றி காணப்படும். குளிர்காலம் மற்றும் வெயில் காலங்களில் சருமத்தில் ஈரப்பதம் குறைவதாலும் முகம் வறண்டு போய்விடும். இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால் சருமத்தை எப்போதும் நீரேற்றமாக வைத்திருப்பதோடு, அவற்றிற்குத் தேவையான வைட்டமின்களைப் பயன்படுத்த வேண்டும். இதோ இன்றைக்கு சருமத்தைப் பொலிவாக்க எப்படி வைட்டமின் ஈ எண்ணெய்யைப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.


மேலும் படிக்க: உங்கள் உதடுகள் வறண்டு போவதை தடுக்க உதவும் இயற்கையான வீட்டு வைத்திய முறை


வைட்டமின் ஈ எண்ணெய்யைப் பயன்படுத்தும் முறை:

40 வயதிலும் இளமையானத் தோற்றத்தைப் பெற வேண்டும் என்றால் வைட்டமின் ஈ எண்ணெய்யைப் பயன்படுத்தலாம். வைட்டமின் ஈ எண்ணெய்யுடன் சிறிதளவு கற்றாழை ஜெல்லை எடுத்து நன்கு கலந்துக் கொள்ளவும். இவற்றைத் தூங்குவதற்கு முன்னதாக சருமத்தில் தேய்க்கவும். 20 நிமிடங்களுக்குப் பின்னதாக முகத்தைக் குளிர்ந்த நீரைக்கொண்டு கழுவினால் போதும் வைட்டமின் ஈ உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் சருமத்திற்கு எப்போதும் பொலிவைத் தருகிறது.


மேலும் படிக்க: முதுமை தோற்றத்தை தாமதப்படுத்தி இளமையாக காட்சியளிக்க வேண்டுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க

 வைட்டமின் ஈ எண்ணெய்யின் நன்மைகள்:

வைட்டமின் ஈ எண்ணெய்யில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் முகத்தில் சுருக்கங்களைக் குறைக்கவும். இளம் வயதிலேயே ஏற்படக்கூடிய வயதானத் தோற்றத்தைத் தவிர்க்கவும் உதவுகிறது. மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் நிறமிகளை மறைய செய்வதோடு சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com