
இந்திய ரயில்வே துறையில் லெவல் - 1 குரூப் D பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி ரயில்வேயில் பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 32,438 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான விண்ணப்ப காலம் ஜனவரி 23ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 22ஆம் தேதி நிறைவடையவுள்ளது. எனவே அதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட முழு விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.
விண்ணப்பம் தொடங்கிய நாள் முதல் விண்ணப்பப் படிவத்தில் திருத்தங்களைச் செய்யும் நாட்கள் வரை உள்ள முக்கியமான தேதிகள் அட்டவணையில் உள்ளன.
அறிவிப்பு |
தேதி |
| விண்ணப்பம் தொடங்கும் நாள் | 23 ஜனவரி 2025 |
| விண்ணப்பம் நிறைவு பெரும் நாள் | 22 பிப்ரவரி 2025 |
| விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான நாள் | 23 ஜனவரி முதல் 25 பிப்ரவரி |
| விண்ணப்பப் படிவத்தில் திருத்தங்களைச் செய்யும் நாட்கள் | பிப்ரவரி 25 முதல் மார்ச் 06 வரை |
தடப் பராமரிப்பாளர், பாய்ண்ட்ஸ்மேன், உதவி டிஆர்டி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் லெவல் 1 பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. மொத்தம் 32,438 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இவற்றில் அதிகபட்சமாக தடப் பராமரிப்பாளர் பதவிக்கு 13,187 காலிப்பணியிடங்கள் உள்ளன. அடுத்தபடியாக பாய்ண்ட்ஸ்மேன் பதவியில் 5058 காலிப்பணியிடங்கள் உள்ளன.
மேலும் படிக்க : டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு; தேர்வு முடிவுகள் விவரம்
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பு / ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
2025 ஜனவரி 1 இன்படி விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும் அதிகபட்ச வயது 36 ஆகவும் இருக்க வேண்டும்.
மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
வங்கி டெபிட்/கிரெடிட் கார்டுகள் அல்லது UPI சேவை மூலம் விண்ணப்ப கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் செலுத்தலாம்.
RRB குரூப் D தேர்வு செயல்முறை நான்கு நிலைகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு நிலையிலும் தேர்ச்சி பெறுவது அவசியம்.
இவற்றில் முதல் நிலையான கணினி அடிப்படையிலான சோதனை தேர்வில் 100 கேள்விகள் கேட்கப்படும்.
| பாடத்திட்டம் | கேள்விகள் | மதிப்பெண்கள் |
| பொது அறிவியல் | 25 | 25 |
| கணிதம் | 25 | 25 |
| பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு | 30 | 30 |
| பொது விழிப்புணர்வு மற்றும் நடப்பு விவகாரங்கள் | 20 | 20 |
கணினி அடிப்படையிலான சோதனை தேர்வில் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 1/3 மதிப்பெண் கழிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அடிப்படை ஊதியமாக மாதம் ரூ.18,000 வழங்கப்படும் மற்றும் DA, HRA, TA, போன்ற சலுகைகளும் உள்ளன.
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான rrbcdg.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து பிப்ரவரி 22 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
குறிப்பு : விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விருப்பமான தேர்வு மொழியை தேர்வு செய்ய வேண்டும் மற்றும் விண்ணப்ப செயல்முறையின் போது சரியான புகைப்பட அடையாள விவரங்களை வழங்க வேண்டும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com