குழந்தைகளை நேசிக்காத பெற்றோர்களே இருக்க முடியாது. அடம் பிடித்து அழுதாலும், படிப்பில் சிறந்து விளங்கினாலும் இல்லையென்றாலும் அவரவர் குழந்தைகள் எப்போதுமே பெற்றோர்களுக்கு தனி பொக்கிஷம் தான். சிலர் பெற்றோர்கள் குழந்தைகளை நேசிப்பதோடு நிறுத்திவிடுகிறார்கள். இது தவறான செயல். குழந்தைகளை நேசிப்பது மட்டுமே அவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்துவிடாது. நல்ல படிப்பும், நல்ல பழக்கவழக்கங்களும் அவர்களை வாழ்வில் சிறந்து விளங்க செய்யும். அதற்காக புத்தக அறிவை மட்டும் குழந்தைகளை சிறப்பாக தந்துவிடக்கூடாது. மாறாக குழந்தைகளைப் பொறுப்புடனும், சமூக அக்கறையுடனும் வளர்க்க வேண்டும் என்றால், சிறு வயதில் இருந்தே சில பழக்க வழக்கங்களைக் கட்டாயம் கற்றுக் கொடுக்க வேண்டும். அவற்றில் சிலவற்றைக் குறித்து இந்த கட்டுரையின் வாயிலாக விரிவாகத் தெரிந்துக் கொள்ளலாம்.
குழந்தைகளைப் பொறுப்புடன் வளர்க்க பெற்றோர்கள் செய்ய வேண்டியது:
ஒவ்வொரு வீடுகளிலும் ஓடி ஆடி விளையாடும் குழந்தைகளுக்கு, இளம் வயதில் இருந்தே ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும். குறிப்பாக காலையில் எந்த நேரத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முதல் என்னென்ன விஷயங்களை நாள் முழுவதும் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த அட்டவணையை குழந்தைகளுடன் இணைந்து உருவாக்க பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும். இதோடு மட்டும் நிறுத்திவிடாமல், அட்டவணையின் அடிப்படையில் அந்த பணிகளை சரியான நேரத்தில் முடிப்பதற்கும் அவர்களுக்கு முயற்சி செய்ய வேண்டும்.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக, எந்த வேலையையும் அவர்களிடம் சொல்ல மாட்டார்கள். இது தவறான செயல். இவ்வாறு செய்யும் போது குழந்தைகளுக்குப் பொறுப்புணர்ச்சியும், கடமை உணர்வும் ஏற்படாது. முடிந்தவரை அவர்களிடம் சின்ன சின்ன வேலைகளைச் செய்ய சொல்லவும்.
மேலும் படிக்க:குளிர்காலத்தில் குழந்தையின் ஆரோக்கியத்தை பராமரிக்க; இந்த 5 விஷயங்களை ட்ரை பண்ணுங்க
மகனாக இருந்தாலும், மகளாக இருந்தாலும் பாரபட்சம் இன்றி வீட்டை சுத்தம் செய்வது முதல் அவர்கள் இருக்கும் அறைகள் என அனைத்தையும் சுத்தப்படுத்த சொல்ல வேண்டும். வீட்டை முறைப்படுத்தும் போது பொருட்களைக் கவனமாக கையாள்வார்கள். அதை தொடாதே, இதை தொடாதே என எதையும் செய்யவிடாமல் தடுக்காதீர்கள். அப்படி செய்யும் போது குழந்தைகளுக்கு வேலையின் மீதான ஆர்வம் குறையக்கூடும்.
குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் எது நல்லது? எது கெட்டது? என அடையாளம் காண கற்றுக்கொடுக்க வேண்டும். தெரியாமல் ஏதேனும் தவறுகள் நடக்கும் பட்சத்தில் அதை எப்படி முறைப்படுத்துவது? என அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதோடு வாழ்க்கையில் எப்போதும் முன்னேற்றத்தை அடைவதற்கு, நேரத்தை மதிக்க அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். இதோடு ஒவ்வொரு வேலையையும் சரியான நேரத்தில் செய்ய கடிகாரத்தைப் பின்பற்றும் முறையை இளம் வயதில் இருந்தே கற்றுக்கொடுக்கும் போது எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும்.
Image source - Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation