குழந்தைகளில் சிலர் அதிகம் கோபப்படக் காரணம் என்ன தெரியுமா?

குழந்தைகள் என்றாலே சேட்டைக்குப் பஞ்சம் இல்லாதவர்கள். சில நேரங்களில் இவர்களின் கோபமும் எல்லையற்றதாக மாறிவிடும்.  
image

பெற்றோர்கள் என்ன சொல்கிறார்களோ? செய்கிறார்களோ? அதைத் தான் குழந்தைகளும் செய்வார்கள். அவர்கள் நல்ல முறையில் வளர்வதற்கும், கெட்ட வழியில் செல்வதற்கும் முதற்காரணமாக அமைவது பெற்றோர்களின் பழக்க வழக்கங்கள். சில நேரங்களில் என்ன தான் பெற்றோர்கள் நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தாலும் குழந்தைகளின் நடத்தையில் பல மாற்றங்களைக் காண நேரிடும். குறிப்பாக சில குழந்தைகள் அடம்பிடிப்பதோடு அதீத கோபம் கொள்வார்கள்.



குழந்தைகளின் கோபத்திற்கானக் காரணங்கள்:


90 கிட்ஸ்கள் அதிகம் சொல்லக்கூடிய வார்த்தைகளில் ஒன்று ' நாங்கள் எல்லாம் எப்படி வாழ்ந்தோம்?' என்பதாகத் தான் இருக்கும். அந்த காலக்கட்டத்தில் பெற்றோர்கள் கோபப்படுவதைக் கண்டு குழந்தைகள் அச்சம் கொள்வார்கள். ஆனால் இன்றைக்கு நிலை முற்றிலும் மாறிவிட்டது. குழந்தைகளின் கோபத்தைப் பார்த்து பெற்றோர்கள் அச்சம் கொள்கிறார்கள்.

child

குழந்தைகளை அதிக நேரம் வெளியில் விளையாட விடாமல் இருப்பது, நண்பர்களுடன் பேச விடாமல் எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு டீயூசன் சென்டர் அனுப்பி வைப்பதில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இத்தகைய செயல்முறைகளை வெறுப்பதோடு சில நேரங்களில் அதிகமாக கோபமும் கொள்கிறார்கள்.



சகிப்புத்தன்மையின்மை:

குழந்தைகள் சிறுவயதில் சேட்டைகள் செய்வதை ரசித்தாலும், ஏதாவது வேலையில் இருக்கும் போது தொந்தரவு செய்தால் பெற்றோர்கள் கோபம் கொள்வார்கள். சில நேரங்களில் அவர்கள் சகிப்புத் தன்மையை இழந்து அடிப்பார்கள். இத்தகைய செயல்களால் ஒரு கட்டத்தில் குழந்தைகள் பெற்றோர்களை எதிர்ப்பதாடு அதிகம் கோபம் கொள்கிறார்கள்.

குழந்தைகளைப் படிக்க வைப்பது முதல் ஏதாவது திறமைகளை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுத்தினாலும் எப்போதும் அவர்களைக் கட்டாயப்படுத்தாதீர்கள். அவர்களுக்கு எந்த விஷயத்தில் ஆர்வம் அதிகமோ? அதை செய்வதற்கு அவர்களை ஊக்கப்படுத்தவும்.
அதை செய், இதை செய் என குழந்தைகளைக் கட்டாயப்படுத்த வேண்டாம். இதன் மேலான வெறுப்பு தான் கோபத்திற்கு முதற்காரணமாக அமையும்.

beating child

மொபைல் பயன்பாட்டைத் தவிர்த்தல்:

இன்றைய குழந்தைகள் எழுந்தது முதல் தூங்குவது வரை மொபைலை அதிகளவில் பார்க்கிறார்கள். தொந்தரவ செய்கிறார்கள் என ஆரம்பத்தில் அனைத்து பெற்றோர்களும் கொடுத்துவிடுவோம். ஒரு கட்டத்தில் மொபைலில் அதிக நேரத்த செலவிடும் போது எப்படியாவது மாற்ற வேண்டும் என பல முயற்சிகளை எடுக்கின்றோம்.. இதற்காக மொபைலைத் தராமல் ஒளித்து வைக்கும் போது கோபம் எல்லை மீறிவிடுகிறது. அனைத்தையும் தூக்கி எறிவது போன்ற நடைமுறைகளில் ஈடுபடுவார்கள். எனவே ஆரம்பத்திலேயே கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.

குழந்தைகளுக்கு செல்லம் கொடுக்கலாம். அதற்காக என்ன செய்தாலும் நம்ம குழந்தை தானே என்று கண்டு கொள்ளாமல் இருப்பது தவறு. விளையாட்டு பொருட்கள் முதல் சாப்பிடுவதற்கான உணவுப் பொருட்களை ஆசைப்படுகிறார்கள் என்பதற்காக, கேட்டதையெல்லாம் வாங்கியும் கொடுக்கிறோம். சில நேரங்களில் பொருளாதார சூழல் போன்ற பல காரணங்களால் வாங்கிக் கொடுக்க முடியாத நிலை ஏற்படும். இந்த ஏமாற்றம் குழந்தைகளின் கோபத்திற்கு ஒரு காரணமாக அமைகிறது.

குழந்தைகளுக்கு மன நிம்மதி இருந்தால் மட்டுமே குழந்தைகளுக்கு கோபம் குறைந்து எந்தவொரு செயலையும் சரியாக செய்வார்கள். எனவே குழந்தைகளை எப்போதும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும் சூழலை பெற்றோர்கள் ஏற்படுத்தித் தர வேண்டும்.

Image source - Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP