பெண்களின் எதிர்காலத்திற்கு எத்தனையோ சேமிப்பு திட்டங்களை மத்திய - மாநில அரசுகளும், தனியார் அமைப்புகளும் செயல்படுத்தும் நிலையில் ஆண் குழந்தைகளின் நலனுக்காகவும் அற்புதமான சேமிப்பு திட்டம் ஒன்று உல்ளது. 2015ஆம் ஆண்டில் தமிழக அரசால் அஞ்சல் அலுவலகங்கலில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. திட்டத்தின் பெயர் பொன்மகன் பொதுவைப்பு சேமிப்பு திட்டம். பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கும் ஆண் மாணவர்களின் நலன் கருதி இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த பதிவில் பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டத்திற்கு விண்ணபிப்பது எப்படி, தகுதி என்ன, வட்டி விகிதம் உள்ளிட்ட விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டத்தில் கணக்கு தொடங்க 100 ரூபாய் போதுமானது. இந்தத் திட்டத்தை அஞ்சல துறை செயல்படுத்தி வருகிறது. பெற்றோர் அல்லது குழந்தையின் பாதுகாவலர் இத்திட்டத்தில் குழந்தையின் பெயரின் வருடத்திற்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் செலுத்துவது அவசியம். அதிகபட்சமாக ஒரு வருடத்தில் 1.5 லட்சம் ரூபாய் செலுத்தலாம். நீங்கள் கணக்கை ஒரு இடத்தில் தொடங்கி வேறு இடத்திற்கு மாறி இருந்தாலும் அங்குள்ள அஞ்சல் அலுவலகத்தில் க்ணக்கை மாற்றிக் கொள்ளலாம். பணம் அல்லது காசோலையாக செலுத்த அனுமதி உண்டு. அதே நேரம் கணக்கிற்கு நாமினி போட்டு கொள்ளலாம்.
பொன்மகன் திட்டத்தின் வட்டி விகிதம்
அரசாங்கம் பொன்மகன் பொதுவைப்பு திட்டத்தின் வட்டி விகிதத்தை தீர்மானிக்கிறது. 7.1% இருந்து தற்போது 9.7% ஆக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த வட்டி விகிதம் அதிகரிக்கப்படும்.
பொன்மகன் திட்டத்திற்கான தகுதி
- ஆண் குழந்தை தமிழகத்தில் பிறந்தவராக இருப்பது அவசியம்
- தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி அல்லது அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரியில் பயில்வது முக்கியம்
- பொருளாதாரத்தில் நலிந்த பிரிவை சேர்ந்தவராக இருப்பது அவசியம்
- கல்விக்காக அரசிடம் இருந்து வேறு எந்த நிதி உதவியையும் பெறக் கூடாது.
- வீட்டில் உள்ள ஒரு ஆண் குழந்தைக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும்
- 10 வயதிற்கு மேற்பட்ட ஆண் குழந்தையாக இருந்தால் கணக்கை குழந்தையின் பெயரிலேயே தொடங்கலாம்
- 10 வயதிற்கு உட்பட்டு இருந்தால் பெற்றோர் மற்றும் பாதுகாவலர் ஒப்புதல் அவசியம்
பொன்மகன் திட்டத்திற்கு விண்ணப்பம்
வீட்டின் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டத்தின் விண்ணப்பத்தைப் பெறவும்
அதில் குறிப்பிட்டுள்ள தேவையான ஆவணங்களை இணைக்கவும்
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தொகையைச் செலுத்தி அஞ்சல் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும்
விவரங்களை சரிபார்த்த பிறகு கணக்கு தொடங்கப்படும்.
தேவையான ஆவணங்கள்
- குழந்தையின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
- பெற்றோரின் வருமான வரி சான்றிதழ்
- கல்வியில் பயிலும் சான்றிதழ்
- குழந்தையின் வங்கிக் கணக்கு விவரம்
- இருப்பிட சான்றிதழ் (ரேஷன் அல்லது ஆதார்)
திட்டத்தின் முதிர்வு காலம்
பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகளாகும். அதன் பிறகு ஒரு முறை மட்டும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யலாம். இந்ததிட்டத்தை முன்கூட்டியே மூடிவிட முடியாது. எனினும் அவசர தேவைகளுக்காக 7வது நிதி ஆண்டில் இருந்து குறிப்பிட்ட தொகையை எடுக்கலாம். 3வது நிதி ஆண்டிற்கு பிறகு கடன் பெறலாம்.
நிதி பங்களிப்பு
கணக்கு தொடங்க : ரூ 100
ஆண்டுக்கு குறைபட்ச டெபாஸிட் : ரூ 500
ஆண்டுக்கு அதிகபட்ச டெபாஸிட் : ரூ 1.5 லட்சம்
பொன்மகன் திட்டத்தின் பயன்கள்
- மற்ற சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை விட பொன்மகன் திட்டத்தில் வட்டி விகிதம் அதிகம்.
- இந்த திட்டத்தை பயன்படுத்தி வருமான வரி செலுத்துவதில் இருந்து 1.50 லட்சம் ரூபாயை விலக்காக பெறலாம்.
- பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு இது அற்புதமான திட்டமாகும்.
- குழந்தையின் கல்விக்கு இந்த திட்டம் மிகுந்த பயனுள்ளதாக அமையும்.
- பொன்மகன் திட்டத்தில் கிடைக்கும் வட்டிக்கும் வரி விலக்கு உண்டு.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation