Safety Tips For Children: குழந்தைகளுக்கு சொல்லி தரவேண்டிய பாதுகாப்பு டிப்ஸ் இதோ!

வளரும் குழந்தைகளுக்கு சொல்லி தரவேண்டிய சில பாதுகாப்பு டிப்ஸ் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

WEBSITE ()

வளரும் குழந்தைகளுக்கு தங்களது பெற்றோர்கள் சில பாதுகாப்பு அறிவுரைகளை கண்டிப்பாக சொல்லித் தர வேண்டும். உதாரணமாக முன்பின் தெரியாத நபர் அல்லது அறிமுகம் இல்லாத நபர்கள் சாக்லேட் அல்லது பிஸ்கட் கொடுத்தாலும் வாங்கி சாப்பிடக்கூடாது போன்ற விஷயங்களை கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியம். ஏனென்றால் முன்பின் தெரியாத நபர்கள் கொடுக்கும் உணவு அல்லது பொம்மை பொருட்கள் குழந்தைகளின் ஆசையை தூண்டினாலும் அதை வாங்கிக் கொள்ளும் போது அவர்கள் குழந்தைகளை கடத்தி செல்வதற்கு வாய்ப்பு உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது பெற்றோர்களின் முதல் கடமை. அந்த வரிசையில் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டிய சில அடிப்படை பாதுகாப்பு அறிவுரைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மேலும் படிக்க: குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் விஷயங்கள் இவை தான்!

குழந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்:

  • உங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் பெயர், வீட்டு முகவரி, பெற்றோர் மொபைல் நம்பர் போன்ற அடிப்படை தகவல்களை கற்று கொடுக்க வேண்டும். இது அவர்கள் தொலைந்து விட்டால் உடனே கண்டுபிடிக்க இந்த தகவல்கள் பயன்படும்.
  • அதே போல முன் பின் தெரியாத நபர்கள் அழைக்கும் போதோ அல்லது அம்மா உன்னை கூட்டிட்டு வர சொன்னாங்க என்று கூறும் தெரியாத நபர்களுடன் செல்லக் கூடாது என்று சொல்லி கொடுப்பது அவசியம். ஒரு சில நபர்கள் குழந்தைகளிடம் வந்து அம்மா கூப்பிட்றாங்க அப்பா கூப்பிட்றாங்க என்று சொல்லி ஏமாத்தி கூட்டி செல்வார்கள்.
  • வளரும் குழந்தைகள் சாலையை கடக்கும் போது இரு பக்கமும் வாகனம் வருகிறதா என்ற கவனம் தேவை. அதே போல குழந்தைகளை பைக்கில் கூட்டி செல்லும்போது குழந்தைகளுக்கும் ஒரு குட்டி ஹெல்மெட் போட்டு விடுங்கள். இது அவர்களின் பாதுகாப்புக்கு உதவுகிறது.
Parenting Tips
  • கத்தி, கத்திரிக்கோல், வத்திப்பெட்டி போன்ற ஆபாத்தான பொருட்களுடன் குழந்தைகள் விளையாட கூடாது என்று சொல்லி கொடுப்பது அவசியம். இது போன்ற ஆபத்தான பொருட்களுடன் விளையாடினால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று சொல்லிக் கொடுங்கள்.
  • அதே போல குழந்தைகளை சூப்பர் மார்க்கெட், கடற்கரை, பார்க் போன்ற கூட்டமான பொது இடங்களுக்கு அழைத்து செல்லும்போது துலைந்து விட்டால், அதே இடத்தில் பெற்றோர் வரும் வரை நிற்க வேண்டும் என்று கூறுங்கள்.
  • முன் பின் தெரியாத நபர்களிடம் குழந்தை படிக்கும் பள்ளி பெயர், வீட்டு முகவரி, மொபைல் நம்பர் போன்ற தனிப்பட்ட தகவல்களை பகிர கூடாது என்று பெற்றோர்கள் குழந்தைகளிடம் சொல்லி கொடுப்பது மிகவும் அவசியம்.
  • மிக முக்கியமாக குழந்தைகளிடம் குட் டச் எது பேட் டச் எது என்று கற்று கொடுக்க வேண்டும். அம்மா அப்பாவாக இருந்தாலும் சரி குடும்பத்தினராக இருந்தாலும் சரி யாரேனும் பேட் டச் செய்தால் உடனே பெற்றோரிடம் இதை பற்றி கூற வேண்டும் என்று சொல்லி கொடுங்கள்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP