குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டும் என்பது பெற்றோர்களுக்கு மிகவும் சவாலான காரியங்களில் ஒன்று. சமூகத்தில் அங்கீகாரத்துடன் கம்பீரமாக வாழ வேண்டும் என்பதற்காக குழந்தைகளின் மீது பல சுமைகளை ஒவ்வொரு பெற்றோர்களும் வைக்கத்தொடங்குகிறார்கள். இவற்றை ஒழுங்காக செய்யாத போது தான் கோபமும், விரக்தியும் அதிகரிக்கிறது.
குழந்தைகளை நெறிப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்களை அடிப்பது மற்றும் கொடூரமான பல செயல்களில் ஈடுபடுவது போன்ற வழிமுறைகளையெல்லாம் பெற்றோர்கள் பின்பற்றத் தொடங்கிவிட்டனர். இச்செயல்களில் ஈடுபடுவது பெற்றோர்களுக்கு தோல்வியைத் தான் தரக்கூடும் எனவும் குழந்தைகள் தவறான பாதைக்கு செல்ல வழிவகுக்கும் என குழந்தை நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
குழந்தைகளை அடிக்கக் காரணம்?
எந்தவொரு பெற்றோர்களும் ஆசையாக வளர்க்கும் தங்களது குழந்தைகளை அடிக்கவோ, திட்டவோ விரும்ப மாட்டார்கள். தனக்குக் கீழ்ப்படியாத போதும், கட்டுக்கடங்காமல் சேட்டைகளை செய்வதும், சொல்வதைக் கேட்காமல் திமிராக பேசுவது போன்ற பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெற்றோர்கள் அடிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒழுக்கம் மற்றும் பகுத்தறிவை வளர்க்க வேண்டும் என்பதற்கான, பெற்றோர்கள் தங்களது பலத்தைப் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள். நாளடைவில் சிறிய தவறுகள் செய்தாலும் உடனே குழந்தைகளைத் தாக்குவது பெற்றோர்களுக்குப் பழக்கமாகிவிடுகிறது.
பாதிப்புகள் என்ன?
மற்றவர்கள் திட்டுவதற்கு வாய்ப்பளித்தல்:
உங்களது பிள்ளைகளை அடிப்பதன் மூலமோ அல்லது அவரைக் கத்துவதன் மூலமோ திருத்தலாம் என பெற்றொர்கள் நினைப்பது இயல்பான ஒன்று. இதனால் அவர்களை உடனடியாக திருத்திவிட முடியாது. தனியாக இருக்கும் போது உங்களது குழந்தைகளை என்ன வேண்டுமானாலும் நீங்கள் பேசிக்கொள்ளலாம். இதுவும் தவறான நடைமுறை என்றாலும் மற்றவர்கள் முன்னிலையில் பேசுவது மிகப்பெரிய தவறாகிவிடும். உங்களைப் போன்று மற்றவர்களும் உங்களது குழந்தைகளைத் திட்ட ஆரம்பித்துவிடுவார்கள். இது குழந்தைகளுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து விடாதீர்கள்.
தவறான பாதைக்குச் செல்லுதல்:
ஒரு குழந்தையை அடிக்கும் செயல் அவர்களை உடல் ரீதியாக மட்டுமல்ல, உணர்ச்சி ரீதியாகவும் பாதிக்கிறது. நீஙகள் தொடர்ச்சியாக இந்த விஷயங்களை மேற்கொள்ளும் போது, உங்களுக்குப் பயந்து தவறான பாதைக்குச் செல்ல ஆரம்பித்துவிடுவார்கள். மேலும் நான் என்ன செய்தாலும் தவறாகத் தான் போகிறது நான் நல்லவர் இல்லை கெட்டவன் என்ற மனநிலையைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்திவிடும். எனவே முடிந்தவரை அன்பாக பேசுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
தன்னம்பிக்கையை இழத்தல்:
குழந்தைகள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான திறமைகள் ஒளிந்திருக்கும். நிச்சயம் ஒரு நாள் அதில் வெற்றி வாகை சூடுவார்கள். அதற்கு முன்னதாக ஏன் தோல்வியடைந்தாய்? உன்னை நான் இப்படி தானா பண்ண சொன்னோன்? ஏன் இப்படியெல்லாம் பண்ணுகிறாய்? என கேள்விகளும் திட்டல்களும் குழந்தைகளை உடலளவில் மட்டுமல்ல, மனதளவிலும் பாதிக்கச் செய்வதோடு, தன்னம்பிக்கையை இழக்கச் செய்துவிடும்.
கோபம் அதிகரிக்கும்:
ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டும் என்பதற்கான குழந்தைகளை அடிக்கும் போது ஆரம்பத்தில் அமைதியாக இருப்பார்கள். ஆனால் தொடர்ச்சியாக அடிக்கும் பழக்கத்தைப் பெற்றோர்கள் மேற்கொள்ளும் போது கோபம் அதிகரிக்கும். இது பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையே விரிசல்களை ஏற்படுத்தும்.
சமூக விரோத செயல்களில் ஈடுபடுதல்:
இன்றைய குழந்தைகள் அனைத்தும் சோசியல் மீடியாவின் வாயிலாக அனைத்தையும் அறிந்துக் கொள்கின்றனர். நல்லா படி, அதை செய், இதை செய் என அவர்கள் வளரும் போது உடல் ரீதியான தண்டனைகள் கொடுக்கும் போது, சமூக விரோத செயல்களில் ஈடுபட பெற்றோர்களே வழிவகுத்து தருவதாக அமையும்.
மேலும் படிக்க:உங்களது குழந்தைகளுக்குக் கட்டாயம் கற்றுக்கொடுக்க வேண்டிய சாலை பாதுகாப்பு விதிகள் இது தான்!
குழந்தைகளை அடித்து திருத்தி விடலாம் என்று நினைப்பதை நிறுத்திவிட்டு, ஒழுக்கத்துடனும்,பண்புடனும் வளர்வதற்கு கொஞ்சம் அன்பை செலவழித்தாலே போதும் என குழந்தை நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation