குழந்தைகளின் தூக்கத்தை முறைப்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியது!

குழந்தைகள் தூங்குவதற்கு மிகவும் சிரமப்படுவதை நீங்கள் உணரும் பட்சத்தில், கட்டாயம் குழந்தை நல மருத்துவரின் ஆலோசனையைக் கேட்பது நல்லது. 

bedtime routine follow by children
bedtime routine follow by children

குழந்தைகளின் உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு பெற்றோர்கள் பெரும் மெனக்கெடுகிறார்கள். ஊட்டச்சத்துள்ள உணவுகள் வழங்குவது முதல் எதிர்கால தேவைகளை நிறைவேற்ற என்னென்ன செய்ய வேண்டும்? என்பது குறித்த நிச்சயம் ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் இருக்கும். அதிலும் இன்றைய தலைமுறை குழந்தைகளின் செயல்திறன் அபரிமிதமாக இருக்கும். இந்த சூழலில் குழந்தைகளைக் கட்டுப்பாடுடனும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க பல வழிமுறைகளைப் பெற்றோர்கள் மேற்கொள்வார்கள். இவற்றில் முக்கியமானதாக உள்ளது தூக்கம்.

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் மூழ்கிப்போன குழந்தைகளுக்கு மொபைல் மற்றும் கணினி பயன்படுத்தும் நேரம் அதிகமாகிவிட்டது. இந்த பழக்கம் அவர்களின் தூக்கத்தைக் கெடுப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிப்பதாக அமையும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் தூங்குவது தான் பெரும் சிக்கல்கள். அதிலும் குழந்தைகளைத் தூங்க வைப்பது என்பது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் ஒரு போர்க்களம் தான். குழந்தைகள் தூங்காவிடில் உரிய நேரத்தில் உங்களாலும் தூங்க முடியாமல் பெற்றோர்களின் உடல் நலத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே முறையான தூக்கத்தைப் பின்பற்ற கற்றுக்கொடுப்பது ஒவ்வொரு பெற்றோர்களின் பணிகளில் முதன்மையானது.

bedtime routines

குழந்தைகளைத் தூங்க செய்யும் முறைகள்:

  • பள்ளிக்குச் செல்லக்கூடிய குழந்தைகள் தினமும் இரவில் 9 மணி முதல் 11 மணி நேரம் வரை தூக்கம் அவசியம். மூளையிள் செயல்திறனை சுறுசுறுப்பாக வைத்திருப்பதற்கு சரியான நேரத்தில் தூங்குவதோடு தூங்கும் நேரத்தையும் அதிகப்படுத்த வேண்டும்.
  • பொதுவாக தூக்கத்திற்கு மெலடோனின் பங்கு மிகவும் முக்கியமானது என்பதால்,,குழந்தைகள் தூங்குவதற்கு குறைந்தது 2 மணி நேரத்திற்கு முன்னதாக மொபைல் பயன்பாடுகள் மற்றும் டிவி போன்றவற்றை அணைத்து வைக்க வேண்டும். இவ்வாறு நீங்கள் மேற்கொள்ளும் போது உரிய நேரத்தில் குழந்தைகள் தூங்குவார்கள்.
pareting tips to help children
  • பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகளின் வீட்டுப்பாடங்கள் முடிந்த பின்னதாக, வெளிப்புற விளையாட்டுகளில் அதிக நேரம் ஈடுபடுத்த முயற்சி செய்ய வேண்டும். உடல் அலுப்புடன் இருக்கும் போது குழந்தைகள் விரைவில் தூங்கிவிடுவார்கள்.
  • உடல் ஆரோக்கியம் மற்றும் தூக்க மேலாண்மையை முறைப்படுத்த வேண்டும். உங்களது குழந்தைகளுக்கு தியானம் மற்றும் ஆழ்ந்த சுவாச பயிற்சியை செய்வதற்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
  • இரவு நேரத்தில் தூங்காமல் அழும் குழந்தைகளுக்கு பாட்டு பாடுவது, இசையைக் கேட்க செய்வது, புத்தகங்களைப் படிப்பது போன்ற செயல்பாடுகளில் அவர்களை ஈடுபட செய்யவும்.
parents using book reading for children

இது போன்ற முறைகளை நீங்கள் பின்பற்றினாலும் குழந்தைகள் தூங்குவதற்கு மிகவும் சிரமப்படுவதை நீங்கள் உணரும் பட்சத்தில், கட்டாயம் குழந்தை நல மருத்துவரின் ஆலோசனையைக் கேட்பது நல்லது. முறையான தூக்கம் இல்லாதது குழந்தைகளைப் பல்வேறு விதமான உடல் நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP