குழந்தைகளைப் பாதுகாப்புடன் வளர்ப்பது என்பது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமைகளில் முக்கியமானது. என்ன தான் வேலைப்பளு அதிகமாக இருந்தாலும், முறையாக குழந்தைகளைக் கவனிக்கவில்லையென்றால் வாழ்நாள் முழுவதும் வருத்தம் தான் நீடிக்கும். இதனால் தான் குழந்தைகள் உடல் வளர்ச்சி, மன வளர்ச்சியில் எப்போதும் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்பார்கள். இதோ இன்றைக்கு குழந்தைகளின் மூளை மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதுகாப்புடன் வைத்திருக்க நீங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்பது குறித்து இங்கே விரிவாக அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் பழக்கவழக்கங்கள்:
- குழந்தைகள் எப்போதும் ஆரோக்கியத்துடனும், சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றால் மூளையின் செயல்திறன் ஆக்டிவ்வாக இருக்க வேண்டும். குறிப்பாக ஓடி ஆடி விளையாடும் குழந்தைகளின் மூளையின் வளர்ச்சி மற்றும் செயல்திறனை அவ்வப்போது கண்காணிப்பது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமையாகும்.
- குழந்தைகள் நீண்ட நேரம் குறைவான வெளிச்சத்தில் சில செயல்பாடுகளை மேற்கொள்ளும் போது தலைவலி அதிகளவில் ஏற்படும். குறிப்பாக குழந்தைகளின் இயற்கையான சர்காடியம் ரிதமை பாதிப்பதோடு மூளை வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
- குழந்தைகளின் மனதை எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும். மனதிற்கு வருத்தம் அளிக்கக்கூடிய விஷயங்கள் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இத்தகைய செயல்கள் மூளையின் வளர்ச்சியைப் பாதிப்பதோடு, அவர்களைத் தவறான பழக்கத்திற்கு ஆளாக்குகிறது.
- இன்றைய குழந்தைகளுக்குக் கையில் மொபைல் இருந்தால் வேறு எதுவும் தேவையில்லை. இத்தகைய செயல்களைத் தவிர்க்காவிட்டாலும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுத்தும். குறிப்பாக தனிமையில் இருக்க விடக்கூடாது. நண்பர்கள், உறவினர்கள், நண்பர்களுடன் பேசி மகிழ்ந்து விளையாட அனுமதிக்கவும். இது குழந்தைகளை மகிழ்விப்பதோடு அவர்களின் மூளையின் செயல்திறனையும் எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
- மனதிற்குப் பதட்டம் தரக்கூடிய விஷயங்களில் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது. மூளையில் அழுத்தம் ஏற்பட்டு மனச்சோர்வு ஏற்படும்.
- ஹெட்போன்களின் மூலம் அதிக பாடல்கள் மற்றும் வீடியோ கேம்களைத் தொடர்ச்சியாக விளையாடினாலும் காதின் உள்பகுதி சேதமடைந்து மூளையின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அதிக நேரம் தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க செய்ய வேண்டும். இது குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்திற்குப் பயனுள்ளதாக இருக்கும்.

பெற்றோர்கள் செய்ய வேண்டியது?
குழந்தைகளின் மூளை செயல்பாட்டை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும் என்றால், உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடிய ஊட்டச்சத்துள்ள உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும். பால், முட்டை, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகளவில் டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் ஒரு நாளைக்கு 9 மணி நேரத்திற்கு மேல் தூங்க வேண்டும். இதுபோன்ற விஷயங்களைக் கடைப்பிடித்தாலே நிச்சயம் குழந்தைகளின் வளர்ச்சியில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation