herzindagi
mental stress for children

Child Care: உங்களது குழந்தைகளிடம் இந்த மாறுதல்கள் உள்ளதா? இதெல்லாம் மன அழுத்தத்தின் அறிகுறிகளாம்

<p style="text-align: justify;">நன்றாக படிக்கும் குழந்தைகளாக இருந்தால் படிப்பில் நாட்டமின்மை ஏற்படுவதும் மன அழுத்தத்தின் அறிகுறிகளாகும்.
Editorial
Updated:- 2024-02-13, 16:44 IST

குழந்தை வளர்ப்பது என்பது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் சவாலான விஷயம். அதிலும் பெற்றோர்கள் இருவரும் பணிக்குச் செல்பவராக இருந்தால்? குழந்தைகளின் நிலைமை கேள்விக்குறி தான். அவர்களுக்கு என்ன பிடிக்கும்? எதில் ஆர்வம்? என்பதைக் கூட முழுமையாக அறிந்துக் கொள்ள முடியாது. இத்தகைய செயல்களால் குழந்தைகள் பல நேரங்களில் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். நேரில் பார்க்கும் போதும், அவர்களுடன் நேரம் செலவழிக்கும் போது தெரியாது. அவர்களின் நடத்தையில் பல மாற்றங்கள் ஏற்படும். இதை வைத்தே பெற்றோர்கள் குழந்தைகளில் மன அழுத்தத்தில் இருக்கிறீர்களா? என்பதை எளிதில் கண்டறிய முடியும். இதுவரை உங்களால் குழந்தைகளின் மன அழுத்தத்தை எப்படி கண்டறியவது என்பது தெரியவில்லையா? இதோ எப்படி என இங்கே அறிந்துக் கொள்வோம் வாருங்கள்.

depressing child

குழந்தைகளின் மன அழுத்தத்தைக் கண்டறியும் முறை:

  • குழந்தைகள் மன அழுத்தத்தில் இருந்தால் அவர்களது நடவடிக்கைளில் பல மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக இரவில் குழந்தைகள் சரியான நேரத்திற்கு தூங்க மாட்டார்கள். ஒருவேளை தூங்கினாலும் எனக்கு கெட்ட கனவு வருகிறது போன்று கூறினாலும் குழந்தைகளுக்க மன அழுத்தம் உள்ளது என அர்த்தம். தூங்கும் போது திடீரென எழுந்திருத்தலும் குழந்தைகளின் மனநிலையை பாதிக்கிறது.
  • குழந்தைகள் மற்றவர்களை அடித்து விளையாடுவது என்பது இயல்பான ஒன்று. ஆனால் வழக்கத்திற்கு மாறாக உங்களது குழந்தைகள் மற்றவர்களை அதிகமாக தாக்குவது, திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டாலும் மன அழுத்த்தில் உள்ளார்கள் என்பதை அறிந்து அவர்களுக்கு ஏற்ப உங்களது செயல்முறைகளில் மாற்றத்தைக் கொண்டு வரவும்.
  • மன அழுத்தத்தில் இருக்கும் குழந்தைகளின் உணவுப் பழக்கத்தில் திடீர் மாற்றம் ஏற்படும். ஒருவேளை குறைவாக சாப்பிடுவார்கள்? அல்லது அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும் மன அழுத்தத்தின் மற்றொரு அறிகுறிகளாகும். 
  • சின்ன விஷயங்களைக் கூட தாங்கிக் கொள்ள முடியாமல் சட்டென்று கோபமடைவது, அடம் பிடிப்பது போன்ற செயல்களில் குழந்தைகள் ஈடுபடுவார்கள் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

Mental stress for kids

  • உங்களது குழந்தைகளிடம் மற்ற குழந்தைகள் பற்றி பேசும் போது சட்டென்று கோபம் வந்தாலும் மன ரீதியாக அவர்கள் ஏதோ பாதிப்பில் உள்ளார்கள் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்.
  • உங்களது குழந்தைகளுக்கு தொடர்ந்து தலைவலி, வயிற்றுவலி போன்ற உடல் நல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிட்டாலும் அவர்கள் ஏதோ மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். 
  • நன்றாக படிக்கும் குழந்தைகளாக இருந்தால் படிப்பில் நாட்டமின்மை ஏற்படுவதும் மன அழுத்தத்தின் அறிகுறிகளாகும்.

 headache for kids

இது போன்ற பிரச்சனைகள் இருந்தால் உங்களது குழந்தைகளின் மீது தனி கவனம் செலுத்தி அவர்களை முறையாக பெற்றோர்கள் கையாள வேண்டும். மேலும் தங்களிடம் என்ன பிரச்சனைகள் உள்ளது என்பதை குழந்தைகளுக்கு சொல்லத் தெரியாது. அவர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் இருந்தால் உடனே அவர்களிடம் அமைதியாக பேசி என்னவென்று தெரிந்துக் கொள்ளுங்கள்.

ஒருவேளை உங்களது உங்கள் குழந்தைகளுக்குப் பள்ளியில் நண்பர்களுடன் பிரச்சனை இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால் அவர்களது ஆசிரியர்களிடம் பேசி தீர்வு காண்பதற்கு முயற்சி செய்யுங்கள். இதோடு என்ன பணிச்சுமை உங்களுக்கு இருந்தாலும் குழந்தைகளிடம் மாதத்திற்கு ஒருமுறையாவது வெளியில் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல மறந்துவிடாதீர்கள்.

 Image credit - Freepik

 

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com