தமிழகம், இந்தியாவின் தென் மாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் பொங்கல் திருநாள் முதன்மையானது. அறுவடை திருநாளாக பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் அறுவடை திருநாள் சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் தமிழர்களின் மரபு சார்ந்த விழா ஆகும். இந்த நாளில் நண்பர்கள், குடும்பத்தினர், உறவுகளுடன் பகிர வேண்டிய பொங்கல் பண்டிகை வாழ்த்து, கவிதை, குறுஞ்செய்தி இங்கு பகிரப்பட்டுள்ளது.
பொங்கல் வாழ்த்து 2025
- தரணியெங்கும் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாளில் அனைவரது மனதிலும் இன்பம் பொங்க... இனிய பொங்கல் வாழ்த்துகள்
- இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்... இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
- மங்களகரமான பொங்கல் திருநாள் அனைவரது வாழ்விலும் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கட்டும்...
- நல்லதொரு வாழ்வு பொங்கிட அஷ்ட லட்சுமிகளும் இல்லத்தில் தங்கிட இந்நாளை போல எந்நாளும் தித்தித்திட தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்
- மங்களம் பொங்கட்டும்… மகிழ்ச்சி வெள்ளம் பெருகட்டும்… எண்ணியது ஈடேற… தமிழர் திருநாள்… தைப்பொங்கல் வாழ்த்துகள்…
- புதுப்பானையில் பொங்கட்டும் தை பொங்கல்... வீட்டினிலே நிறையட்டும் சொந்தங்கள்... மனதினிலே தீரட்டும் சங்கடங்கள்... இனிய பொங்கல் வாழ்த்துகள்
- கரும்பின் சுவை போல உங்கள் வாழ்க்கை என்றென்றும் தித்திக்கட்டும்… இனிய பொங்கல் வாழ்த்துகள்
- பொங்கல் பானை பொங்கி வழிவது போல உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சியிலும், செல்வமும் பொங்கி வழியட்டும்... அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துகள்
- உறவுகளின் வீட்டில் புன்னகை பொங்க… இனம் புரியா இன்பம் மனதில் பொங்க… நண்பர்கள் சூழ மகிழ்ச்சி பொங்க… பொங்கட்டும் தைப்பொங்கல்
- அன்பும் ஆனந்தமும் பொங்கிட… அறமும் வளமும் தளைத்திட… இல்லமும் உள்ளமும் பொங்க… இனிய தமிழர் திருநாளாம்… பொங்கல் நல்வாழ்த்துகள்
- உழவனுக்கு ஒரு திருநாளாம்.. உலகம் போற்றும் நன்னாளாம்... சூரியனை வணங்கி விட்டு... சுருக்குப் பையில் காசு எடுத்து தித்திக்கும் கரும்பு வாங்கி தெவிட்ட தின்னும் திருநாளாம்… அனைவருக்கும் தைப் பொங்கல் நல்வாழ்த்துகள்
- காசுக்கு கரும்பு வாங்கி... அதை கால் பாகமாக உடைத்து... கடவாய் பல்லில் கடித்து... தித்திப்போடு கொண்டாடுவோம்... இந்த பொங்கல் திருநாளை... இனிய பொங்கல் வாழ்த்துகள்
- இல்லங்களைத் தூய்மைபடுத்தி, அரிசி மாவில் கோலம் போட்டு மாவிலை தோரணமிட்டு, புத்தாடை உடுத்தி காய்கறி, பழம், கரும்பு, இஞ்சி மஞ்சள் கொத்துடன் கதிரவனுக்கு நன்றி செலுத்துவோம்... இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
- தைத்திருநாளில் நாம் உண்ண உணவு அளிக்கும் இயற்கை அன்னைக்கும், உழவர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம்... இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
- அறுவடையைக் கொண்டாடும் இந்த பண்டிகை புதிய நம்பிக்கைகளையும் புதிய தொடக்கங்களையும் கொண்டுவரட்டும்... பொங்கல் நல்வாழ்த்துகள்
மேலும் படிங்கPongal 2025 : தமிழர் திருநாளில் பொங்கல் வைக்க நல்ல நேரம்; தை பிறந்தால் வாழ்வில் வழி பிறக்கும்
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation