சந்திர கிரகணம் 2022: தெரிந்து கொள்ள வேண்டிய பல பயனுள்ள தகவல்கள்

சந்திர கிரகணம் பற்றிய சுவாரஸ்யமான தகவலையும், கிரகணத்தின் போது பின்பற்ற வேண்டிய விஷயங்கள் குறித்தும் இப்போது பார்ப்போம்.

lunar eclipse big

சந்திர கிரகணம் 2022:

இந்த ஆண்டின் கடைசி மற்றும் இரண்டாவது சந்திர கிரகணம் நவம்பர் 8 ஆம் தேதி நிகழ உள்ளதாக நாசா தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு முழு சந்திர கிரகணம் ஏற்படாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் எங்கே நிகழும்?

நவம்பர் 8, 2022 செவ்வாய்க்கிழமை அன்று முழு சந்திர கிரகணம் நிகழும். இது 2022 ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் ஆகும். இந்தியாவில், இது பிற்பகல் 2.48 மணிக்குத் தொடங்கி மாலை 06:18 மணிக்கு முடிவடையும்.

இந்தியா மட்டுமின்றி மற்ற ஆசிய நாடுகளும் இந்தக் கிரகணத்தை காண முடியும். இருப்பினும், இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் மட்டுமே முழு சந்திர கிரகணத்தை காண முடியும். டெல்லி, கொல்கத்தா, சிலிகுரி, பாட்னா, ராஞ்சி மற்றும் கவுகாத்தி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் முழு சந்திர கிரகணத்தைக் காணலாம். இந்தியாவில் மற்ற பகுதிகளில் வசிப்பவர்கள் பகுதி கிரகணத்தை மட்டுமே காண முடியும்.

சந்திர கிரகணம் 2022: எப்படி பார்ப்பது?

lunar eclipse

  • விஞ்ஞானத்தின்படி, சந்திர கிரகணத்தின்போது சந்திரனின் மேல் பூமியின் நிழல் காணப்படுவதால் அது இரத்தம் கலந்த சிவப்பு நிறமாகத் தெரிகிறது.
  • சந்திர கிரகணத்தைப் பார்க்க, உங்களுக்குச் சிறப்பு உபகரணங்கள் எதுவும் தேவையில்லை. சந்திர கிரகணத்தை நேரடியாகக் கண்களால் பார்க்க முடியும்.
  • தொலைநோக்கியின் பயன்பாடு சந்திர கிரகணத்தின் பார்வையை மேம்படுத்தும்.
  • நேரடியாகப் பார்க்க முடியாதவர்கள், நாசா உள்ளிட்ட பிற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் வெளியிடும் நேரலை வீடியோக்களையும் பார்க்கலாம்.

சந்திர கிரகணத்தின்போது செய்யக்கூடாதவை

lunar eclipse

ஜோதிட நம்பிக்கையின்படி இவை அறிவுறுத்தப்பட்டாலும், இதைப் பின்பற்றுவது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பமாகும்.

  • கிரகணத்திற்கு ஒன்பது மணி நேரத்திற்கு முன்பு சமைத்த உணவைச் சாப்பிடக் கூடாது என்பது நம்பிக்கை. இருப்பினும் கிரகண நேரத்தின்போது சமைப்பதையும், சாப்பிடுவதையும் தவிர்த்திடவும்.
  • கிரகணத்தின்போது பயணத்தை முடிந்த வரை தவிர்க்க வேண்டும்.
  • ஜோதிடத்தை நம்புபவர்கள், கிரகண காலத்தின் போது முக்கிய ஒப்பந்தங்களைத் தவிர்க்கிறார்கள்.
  • கிரகணத்தின்போது கோவில்களில் இறை வழிபாடுகள் தடைசெய்யப்பட்டுள்ளது.கோவில்களின் கதவுகளும் மூடப்பட்டிருக்கும். அத்தகைய சூழ்நிலையில், வீட்டின் பூஜையறையின் கதவுகளையும் மூட வேண்டும்.
  • கர்ப்பிணிப் பெண்கள் கருவில் இருக்கும் குழந்தையின் நலன் கருதி வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
lunar eclipse
  • முடிந்த வரை கிரகணத்தின்போது தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும்.
  • கிரகணத்தின்போது தூங்கக் கூடாது.
  • கிரகணத்தின்போது உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்ற கருத்தும் நிலவுகிறது.

ஒரு சிலரால் இவை கடைப்பிடிக்கப்பட்டாலும், மூடநம்பிக்கையாகக் கருதுபவர்கள் இதை ஏற்றுக்கொள்வதில்லை. பெரும்பாலான கருத்துக்கள் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும் கிரகணத்தின்போது உங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபடலாம்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP