இயற்கையாகவே, குழந்தைகள் மிகவும் நிலையற்றவர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு குழந்தையின் இயல்பும் முற்றிலும் வேறுபட்டதாகவே இருக்கும். சில குழந்தைகள் மிகவும் கூச்ச சுபாவமுள்ளவர்களாகவும், சில குழந்தைகள் கூடுதல் குறும்புக்காரர்களாகவும் இருப்பார்கள். அதே சமயம், ஒரு சில குழந்தைகள் அதிக மனநிலை மாறுபாடுகள் உடையவர்களாகவும் இருப்பார்கள். உதாரணமாக, இந்த குழந்தைகளைத் திட்டியோ, கோபத்தை காட்டியோ சமாதானப்படுத்தி ஒருவேலையை செய்ய வைக்க முடியாது. அவர்களின் மனநிலையை பொறுத்தே அவர்கள் அவ்வேலையை செய்வார்கள்.
இத்தகைய குழந்தைகளைக் கையாளுவது மிகவும் கடினம், ஏனென்றால் சில சமயங்களில் அவர்கள் மிகவும் உற்சாகமாகக் காணப்படுகிறார்கள். ஆனால் சில சமயங்களில், அவர்கள் யாருடனும் பேசவோ, வேலை செய்யவோ விரும்புவதில்லை. ஒரு சில குழந்தைகள் இயற்கையாகவே இந்தக் குணாதிசயங்களுடன் இருப்பார்கள். இத்தகைய மனநிலை மாற்றங்களுடன் இருக்கும் குழந்தைகளைக் கையாளுவதற்கான சில எளிய வழிகளை இப்பதிவில் படித்தறிந்து பின்பற்றுங்கள்.
மனநிலை மாறுபடுகளுடன் இருக்கும் ஒரு குழந்தைக்கு தன்னை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பைக் கொடுக்க வேண்டியது அவசியம். அவர்கள் எவ்வித தயக்கமும், பயமும் இன்றி தங்களின் ஆசைகள் அல்லது தேவையை வீட்டில் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் கொடுக்க வேண்டும். உதாரணமாக உங்கள் குழந்தை சோகமாக இருந்தால் அல்லது அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால், அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தட்டும். இவ்வாறு வெளிப்படுத்தியவுடன் அவர் நிம்மதியாக உணருவார்.
இயற்கையாகவே மனநிலை மாற்றங்களுடன் இருக்கும் குழந்தைகளுக்குத் தங்களை சரியாக வெளிப்படுத்திக் கொள்வதில் சிக்கல்கள் இருக்கலாம். சில சமயங்களில் இதன் காரணமாக தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்காகத் தவறான முறையில் நடந்து கொள்கிறார்கள். இத்தகைய சூழலில் குழந்தையிடம் அருகில் அமர்ந்து பேசுங்கள். அவர்கள் வித்தியாசமாக உணரும் போதெல்லாம் கோபம் அல்லது அவமானப்படுவதற்குப் பதிலாக, அந்த விஷயம்குறித்து உங்களுடன் பேசும்படி ஊக்கப்படுத்துங்கள். எந்த விஷயமாக இருப்பினும், பெற்றோரிடம் தயக்கமின்றி சொல்லலாம் என்ற தைரியத்தை கொடுங்கள்.
இது ஒரு எளிய தந்திரம் ஆனால் குழந்தைகளின் மனநிலையை கையாள்வதற்கான சிறந்த யுக்தி. குழந்தை செய்யும் நல்ல வேலைகளுக்கு அவர்களைப் பாராட்ட மறக்காதீர்கள். இப்படி பாராட்டுவது மனநிலை மாறுபாடுகளுடன் இருக்கும் குழந்தைக்கு ஊக்கத்தை அளிக்கிறது. ஆகையால் உங்கள் வாயிலிருந்து வரும் பாராட்டுகளைக் கேட்பதற்காகவே அவர்கள் நல்ல முறையில் நடந்து கொள்ள முயலுவார்கள்.
பெரும்பாலும் மனநிலை மாறுபாடுகளுள்ள குழந்தைகளைக் கையாளும்போது, நாம் அனைவரும் குழந்தையை மட்டுமே கவனம் செலுத்துகிறோம். குழந்தையுடன் சேர்த்து, வீட்டின் சூழலையும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வீட்டில் அதிகமான பதற்றம் நிலவினாலோ அல்லது வீட்டில் சிறு சிறு சண்டைகள் நடந்தாலோ, அது உங்கள் குழந்தையின் மனநிலையை பாதிக்கும். இது உங்கள் குழந்தையை மேலும் எரிச்சலடையச் செய்யலாம்.
இந்த பதிவும் உதவலாம்: டீன் ஏஜ் காதலை கையாள்வது எப்படி?
எனவே, வீட்டின் சூழலை இனிமையாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள், அது குழந்தைக்கு நேர்மறையான விளைவை ஏற்படுத்தும். முக்கியமாக, குழந்தையுடன் பேசும்போது கொஞ்சம் நிதானமாகப் பேசுங்கள். குழந்தை சிறிது எரிச்சல் அல்லது கோபமுடன் இருந்தாலும், நீங்கள் கட்டுப்பாட்டை இழக்காமல் பொறுமையாகக் கையாளுங்கள்.
நீங்களும் இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றி, மனநிலை மாறுபாடுகளுள்ள குழந்தையை எளிதாகச் சமாளிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: என் மகன் மூக்கில் விரல் வைக்கிறான், எப்படி தடுப்பது?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com