எல்லோர் வீட்டிலும் குழந்தைகளிடையே மோதல் ஏற்படுவது சாதாரண விஷயமே. குழந்தைப் பருவத்தில் உணர்வுகளை கட்டுப்படுத்துவது கடினம். பெற்றோர் சொல்லும் விஷயத்திற்கு நேர்மாறாக குழந்தைகள் நடந்து கொள்ளும். குழந்தைகளின் மோதல் கத்தி கூச்சலிடுவதில் ஆரம்பித்து அடிதடியாக கூட மாறலாம். குழந்தைகளிடையே ஏற்படும் சண்டையில் பெரும்பாலும் பெற்றோர் தலையிடாமல் இருப்பது நல்லது. இரண்டு குழந்தைகளும் தாங்களாக பிரச்னையை பேசி சரி செய்துவிடுகின்றனரா என கவனிக்க வேண்டும். எனினும் அடிதடியாக மாறி காயம் ஏற்படும் நிலை வரை பெற்றோர் காத்திருக்க கூடாது.
குழந்தைகளின் சண்டையை தடுத்தல்
- குழந்தைகளின் சண்டை எல்லை மீறும் போது இருவரையும் தனித்தனி அறைக்கு அழைத்து சென்று அமைதிப்படுத்த முயற்சிக்கவும்.
- சண்டைகளில் குழந்தைகள் உடனடி தீர்வு எதிர்பார்ப்பார்கள். பெற்றோராக நீங்கள் அவர்களை அமைப்படுத்தி அதன் பிறகே பிரச்னை பற்றி பேச வேண்டும்.
- சண்டையிடும் குழந்தைகளில் யாரேனும் ஒருவர் சமாதானம் செய்ய விரும்பினால் அல்லது பின்வாங்கினால் அக்குழந்தையை பாராட்டவும்.
- ஒரு பொம்மைகாக குழந்தைகள் சண்டையிட்டு கொண்டால் யாருக்கும் அந்தை பொம்மையை கொடுக்காதீர்கள்.
ஆக்கப்பூர்வமாக சண்டையை சமாளித்தல்
- வீட்டில் உள்ள குழந்தைகளை பாகுபாடு காட்டாமல் வழிநடத்தவும். 6 வயது குழந்தைகக்கும் 3 வயது குழந்தைக்கும் வேறுபாடு உண்டு. எனினும் சரியாக வழிநடத்தவும்
- எப்போதுமே குழந்தைகளிடம் ஒரு சில வார்த்தைகளை சொல்லக் கூடாது. நீ தான் மூத்தவன் ஒழுங்காக நடக்க வேண்டும் அல்லது நீ தான் பிரச்னைக்குரியவன் என ஒரு குழந்தையை காட்டமாக விமர்சிக்காதீர்கள். இதனால் அக்குழந்தை பாதிக்கப்படும்.
- எந்த பிரச்னையாக இருந்தாலும் முதலில் காரணத்தை கண்டறியவும். குழந்தைகள் சண்டையிடுவதை பெற்றோரால் வேடிக்கை பார்க்க இயலாது. எனவே சண்டை மட்டுமே தீர்வு என நினைக்கும் குழந்தையிடன் கவனம் செலுத்துங்கள்.
- சின்ன சின்ன விஷயங்களில் குழந்தைகளிடம் எடுத்து சொல்லி பிரச்னை பெரிதாகாமல் முடித்துவிடவும்.
சண்டையிட்ட பின் தீர்வு
- சில பிரச்னைகளில் குழந்தைகளிடம் மோதல் ஏற்பட்ட பிறகே நமக்கு தெரிய வரும். அப்போது எப்படி இருவரையும் சேர்த்து வைப்பது என யோசிக்கவும்.
- குழந்தைகள் சண்டையிட்டு முடித்து பேசிக் கொள்ளாமல் இருந்தால் அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்யவிடாதீர்கள். பிரச்னைக்கு தீர்வு கண்ட பிறகே அடுத்த காரியத்தை தொடங்க அனுமதிக்கவும்.
- எந்தவொரு பிரச்னையிலும் இரு பக்கத்தின் நியாயத்தை குழந்தைகளிடம் எடுத்துக் கூறி அதை தீர்த்து வைக்கவும்.
- ஒவ்வொரு பிரச்னையிலும் குழந்தைகளின் எதிர்பார்ப்புகளை தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
- நீங்கள் ஆலோசனை அளிக்கும் முன்பாக குழந்தைகளால் அப்பிரச்னையை சமாளிக்க முடிகிறதா என பாருங்கள். அதன் பிறகு நீங்கள் தலையிட்டு பிரச்னைக்கு விடை தேடவும்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation