பெண் கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் “புதுமைப் பெண்” திட்டம்

நீங்கள் அரசுப் பள்ளி மாணவியாக இருந்தால் உயர்கல்வியை எந்தவித சிக்கலும் இன்றி தொடருவதற்கு தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டத்தில் விண்ணப்பித்து பயனடையுங்கள்.

pudhumai penn scheme apply online
pudhumai penn scheme apply online

நாட்டின் வளர்ச்சிக்கு பெண் கல்வி முக்கியம் என்பதை உணர்ந்த தமிழக அரசு பெண்கள் எந்தவொரு சிக்கலுமின்றி கல்வி செல்வத்தை பெறுவதற்காக புதுமைப்பெண் திட்டத்தைக் கடந்த 2022ஆம் ஆண்டில் தொடங்கி வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது.

பொருளாதார சூழ்நிலை, குழந்தை திருமணங்கள் போன்ற பிரச்சினைகளால் பெண்களுக்கு கல்வி தடைபடுவதை கண்டறிந்த தமிழக அரசு அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் பெண்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தைத் தொடங்கியது. பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்க மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றப்பட்டது.

கொரோனா பேரிடர் மனித உயிர்களை கொத்து கொத்தாக கொன்றது மட்டுமின்றி மாணவர்களின் கல்விச் செல்வத்தையும் அழித்தது என்றால் அது மிகையல்ல. கொரோனா பேரிடர் ஏற்படுத்திய வாழ்வாதார இழப்பில் இருந்து மீள முடியாத குடும்பத்தினர் தங்கள் வீட்டு பெண்களின் கல்வியை நிறுத்திவிட்டு வேலைக்கு அனுப்பினர். ஒரு சில வீடுகளில் படித்தது போதும் என திருமணத்திற்கு பெண்களை கட்டாயப்படுத்தினர்.

இது தொடர்பாக ஆய்வு நடத்திய தமிழக அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் பெண்கள் இளங்கலைப் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ படிப்புகளை தடையின்றி முடிக்க மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி வருகிறது. ஏற்கெனவே பிற உதவித்தொகைகளை பெற்று வந்தாலும் இந்த திட்டத்திலும் பயன்பெறலாம்.

ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து பெண் மாணவர்களுக்கு இது மாதந்தோறும் வழங்கப்படும்.'பெண்கல்வி' என்ற ஆன்லைன் தளத்தில் மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் பெண்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிங்கதமிழக பட்ஜெட்டில் மகளிருக்கான முக்கிய அறிவிப்புகள்

வங்கி கணக்கு இல்லாத மாணவர்களுக்கு இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் எஸ்பிஐ ஆகிய வங்கிகள் மூலம் மாணவர்களுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கி டெபிட் அட்டை வழங்கப்படுகின்றன

திட்டத்தின் அம்சங்கள்

  • பெண் மாணவர்களுக்கு நிதி சலுகைகளை வழங்குவதன் மூலம் இளம் வயது திருமணங்கள் மற்றும் உயர்கல்வியில் சேர்வதில் குறைந்த விகிதம் தடுக்கப்படுகிறது.
  • பெண் மாணவர்களின் கல்வி நிலை, பாலின சமத்துவத்தை மேம்படுத்துவது உட்பட பொருளாதார மற்றும் சமூகத் துறைகளில் சிறந்த அடித்தளத்தை உருவாக்கி உயர்கல்வியைத் தொடர மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் உந்துதலை அளிக்கிறது.

கல்வியை இடைநிற்றல் இல்லாமல் தொடருவதற்கு உதவும் இந்த திட்டத்திற்கு நடப்பு நிதிநிலை அறிக்கையில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பெண்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP