கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான உணவுகள்

கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவுமுறையை கடைபிடிப்பது குழந்தையை சுகப்பிரசவத்தில் பெற்றெடுக்க உதவும். பத்து மாதங்களுக்கு என்ன சாப்பிடலாம், எவ்வளவு சாப்பிடலாம் உள்ளிட்ட விவரங்கள் இங்கே...  

foods to eat when you are pregnant
foods to eat when you are pregnant

ஒரு பெண் கர்ப்பம் தரித்த உடனேயே அவளிடம் வயிற்றில் குழந்தை வளர்வதால் இரண்டு நபர்களுக்கு சாப்பிட வேண்டும் என சொல்வார்கள். இரண்டு ஆட்களுக்கு சாப்பிட்டால் ஆளே மாறி உடல் பருமன் ஆகிவிடுவார்கள். இதனால் குழந்தை பிறந்த பிறகு நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு சிரமத்திற்கு ஆளாவார்கள். பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்கள் வீட்டில் இருக்கும் பாட்டி, அத்தை ஆகியோரிடம் ஆலோசனை கேட்டு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவார்கள்.

pregnancy nutritions

கர்ப்ப கால உணவுமுறை

வயிற்றில் கரு வளர்வதால் பெண்ணுக்கு கூடுதல் சத்து தேவை. அதாவது கர்ப்ப காலத்தின் பத்து மாதங்களிலும் கூடுதலாக கலோரிகள் எடுக்க வேண்டும். முதல் மூன்று மாதங்களுக்கு கர்ப்பிணிகளுக்கு கூடுதல் கலோரிகள் தேவையில்லை. வழக்கமான உணவுமுறையை பின்பற்றினாலே போதும்.

அடுத்த மூன்று மாதங்களில் கூடுதலாக 300 கலோரிகள் தேவை. 300 கலோரிகளை பெரிதாக நினைக்க வேண்டாம். ஒரு இட்லி 100 கலோரிகளை கொண்டது. எனவே 300 கலோரிகள் கிடைக்க நீங்கள் பருப்பு சாம்பாருடன் இரண்டு இட்லி அல்லது 50 கிராம் வேர்க்கடலை அல்லது நட்ஸ் அல்லது பாலில் பழங்கள் சேர்த்து மில்க் ஷேக் குடித்தால் 300 கலோரிகள் கிடைக்கும்.

ஏழு முதல் ஒன்பது மாதங்களில் கூடுதலாக 400 கலோரிகள் தேவை. இதே உங்களுக்கு இரட்டை குழந்தையாக இருந்தால் 600 கலோரிகள் தேவை. கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமான இனிப்புகள் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள். இது கர்ப்ப கால நீரிழிவு நோய் அல்லது பிரவசத்திற்கு பிந்தய நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும். மாவுச்சத்து உணவுகளை தேவையான அளவே உட்கொள்ள வேண்டும் இல்லையெனில் உடல் பருமன் ஏற்படும்.

ஒல்லியாக இருக்கும் பெண்கள் கர்ப்பம் தரித்தால் கர்ப்ப காலத்தில் பத்து முதல் 12 கிலோ எடை அதிகரிக்கலாம். இயல்பான எடையில் உள்ள பெண்கள் அல்லது உடல் பருமனாக இருக்கும் கர்ப்ப காலத்தில் ஐந்து கிலோவுக்கு மேல் எடை அதிகரிக்க கூடாது. ஒரு மனிதனுக்கு சராசரியாக தினமும் 60 கிராம் புரதச்சத்து தேவை. அதுவே கர்ப்ப காலத்தில் கூடுதலாக 25 முதல் 30 கிராம் புரதம் தேவை. இதற்கு ஐந்து முட்டை சாப்பிடலாம். ஒரு முட்டையில் ஆறு கிராம் புரதம் உள்ளது.

100 கிராம் சிக்கன் சப்பிட்டால் உங்களுக்கு 25 கிராம் புரதம் கிடைத்துவிடும். நீங்கள் சைவமாக இருந்தால் 100 கிராம் சுண்டலை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால் கூடுதலாக 30 கிராம் புரதம் கிடைத்துவிடும். கர்ப்ப காலத்தில் தாய்மார்களுக்கு புரதச் சத்தும் தேவை. கருவின் மூளை வளர்ச்சிக்கு கொழுப்புச்சத்து கொண்ட ஒமேகா 3 அமிலம் பங்களிக்கிறது. இதற்கு கர்ப்பிணிகள் மீன் சாப்பிடலாம். வால்நட், ஆளி விதை ஆகியவற்றிலும் ஒமேகா 3 அமிலம் இருக்கிறது.

கர்ப்பிணிகள் இவற்றை சாப்பிட்டால் தான் கொழுப்புச்சத்து கிடைக்குமா ? அந்த காலத்தில் கர்ப்பிணிகள் இவற்றையெல்லாம் சாப்பிட்டார்களா என்ற சந்தேகம் வரலாம். பால் பொருட்களிலும் ஒமேகா 3 அமிலங்கள் உள்ளன.

இரும்புச் சத்து

சராசரியாக ஒரு மனிதனுக்கு தினமும் 15 கிராம் இரும்புச்சத்து தேவை. அதுவே கர்ப்பிணிகளுக்கு 27 கிராம் இரும்புச்சத்து தேவை. நீங்கள் அசைவம் சாப்பிடும் நபராக இருந்தால் ஆட்டுக்கறி சாப்பிட்டு இரும்புச்சத்து பெறலாம். சைவம் சாப்பிடும் நபராக இருந்தால் கீரை வகைகள், முளைகட்டிய பயறு வகைகள் சாப்பிடலாம். ராகியிலும் இரும்புச்சத்து இருக்கிறது. அசைவ உணவுகளில் இருக்கும் இரும்புச் சத்தை நமது உடல் எளிதில் உறிஞ்சிவிடும்.

கால்சியம் சத்து

ஒரு கர்ப்பிணிக்கு தினமும் ஆயிரம் முதல் ஆயிரத்து 500 மில்லி கிராம் கால்சியம் சத்து தேவை. 100 மில்லி லிட்டர் பாலில் இருந்து 120 மில்லி கிராம் கால்சியம் சத்து கிடைக்கும். பன்னீர், ராகி ஆகியவற்றில் அதிகளவு கால்சியம் சத்து இருக்கிறது.

ஃபோலிக் அமிலம் கர்ப்ப காலத்தில் மிகவும் முக்கியமான ஒன்று. இதற்கு நீங்கள் கீரை வகைகளை உணவுமுறையில் சேர்க்க வேண்டும். கோலின் - முட்டையின் மஞ்சள் கரு மூலம் இது நமக்கு கிடைக்கிறது. நிலக்கடலையிலும் கோலின் இருக்கிறது. அயோடின் சத்தை பற்றி கவலைப்பட தேவையில்லை. உணவின் உப்பு சேர்ப்பதே போதுமானது. வைட்டமின் ஏ, டி, சி ஆகியவை கிடைக்க கேரட், நெல்லிக்காய் மற்றும் வழக்கமாக உட்கொள்ளும் பழங்களைச் சாப்பிடலாம்.

இவற்றை சரியாக சாப்பிட்டாலே குழந்தையை ஆரோக்கியமான பெற்றெடுக்கலாம்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP