கர்ப்ப காலத்தில் பெண்கள் உட்கொள்ளும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்களை சாப்பிடுவது அவசியம். குழந்தையின் ஆரோக்கியத்திற்காகவும் நலனுக்காகவும் சில உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் மன நிலை மாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு உணவு ஒரு முக்கிய காரணம் ஆக உள்ளது. கர்ப்ப காலத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த வழிமுறைகளை பின்பற்றலாம்.
முழு ஊட்டச்சத்து உணவு:
தானிய வகைகள், பழங்கள், காய்கறி வகைகள், பால், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை உடலுக்கு தேவையான சம அளவில் உட்கொள்ள வேண்டும். இந்த உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான புரதம், கால்சியம், நார்ச்சத்து போன்ற அணைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது.
போலிக் அமிலம் மாத்திரை:
பெண்கள் கர்ப்பகாலத்தில் மருத்துவரின் அறிவுரைப்படி போலிக் அமிலம் மாத்திரைகளை சாப்பிட்டு வரலாம். பெண்களின் முது கெலும்பில் ஏற்படும் குறைபாட்டைத் தடுக்க போலிக் அமிலம் உதவுவதால் சுகாதார அமைப்புக்களில் இதை பலரும் பரிந்துரைக்கின்றனர். கீரை வகைகள், புரோக்கோலி, தானியங்கள் சேர்க்கப்பட்ட உணவு வகைகள் மற்றும் இறைச்சி போன்ற உணவுகளில் போலிக் அமிலம் நிறைந்துள்ளது.
மேலும் படிக்க: கர்ப்பிணி தாய்மார்கள் இந்த சத்தான ரெசிபிகளை ட்ரை பண்ணுங்க!
தவிர்க்க வேண்டிய உணவு:
கர்ப்பகாலத்தில் பெண்கள் பதப்படுத்தப்படாத சீஸ், நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சி, அவிக்கப்படாத முட்டை போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் லிஸ்டீயா, சால்மனெல்லா போன்ற கிருமிகளால் பரவும் நோய்களைத் தடுக்கலாம். மேலும் வைட்டமின் ஏ மாத்திரைகள் மற்றும் ஈரல் போன்ற வைட்டமின் ஏ நிறைந்த உணவுப்பொருட்களை தவிர்ப்பதன் மூலம் குழந்தைக்கு பிறப்பில் ஏற்படும் குறைபாடுகளைத் தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.
ஓய்வு நேரம் அவசியம்:
சிறிது நேரம் கூட ஓய்வு எடுக்காமல் வேலை செய்து வரும் பெண்களுக்கு குறைமாதப் பிரசவம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே கர்ப்பிணி பெண்கள் ஓய்வு எடுப்பது அவசியமாகும். தினமும் தியானம் செய்தல், யோகாசனம் போன்றவை உங்களுக்கும், உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் சிறந்தது. தினமும் எளிய உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் இருப்பதுடன் சுகப் பிரசவமாகவும் உதவும். சிலருக்கு தவிர்க்க முடியாத சில காரணங்களால் உடற்பயிற்சி யைத் தவிர்க்கும்படி மருத்துவர் ஆலோசனை கூறியிருந்தால் இதை தவிர்க்கலாம்.
மருந்துகள்:
கர்ப்பகாலத்தின் போது மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் கடைகளிலே வாங்கி மருந்துகள் ஏதும் உட்கொள்ளக் கூடாது. நீங்கள் நீண்டகால மருந்து மாத்திரை பயன்படுத்துபவராக இருந்தால் கர்ப்பம் தரித்த உடனேயே மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியம். போதை மாத்திரைகள் பழக்கம் இருந்தால் அதை நிறுத்த வேண்டும்.
மருத்துவரை அணுகுங்கள்:
உங்கள் உடல்நலனைப் பற்றி ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டாலும், நீர்கசிதல், கைகால் முகம் வீக்கம், பார்வையில் ஏதேனும் மாற்றம் அல்லது அதிக ஒளி வீசுவது போன்ற உணர்வு, வயிற்றுவலி அல்லது தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே உங்கள் மகப்பேறு மருத்துவரை அணுகவும்.
மதுப்பழக்கம் கூடாது:
அதிக அளவில் மது அருந்தினால் குழந்தையின் மூளை பாதிக்கப்படும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இதனால் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மதுப்பழக்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.
புகைபிடித்தலைத் தவிர்க்க வேண்டும்:
குறிப்பாக வெளிநாடுகளில் வாழ்ந்து வருவோர் இதனை கருத்தில் கொள்ள வேண்டும். கர்ப்பம் தரிக்க வேண்டும் என்று தீர்மானிக்கும்போதே புகை பிடிப்பதை நிறுத்திவிடுவது நல்லது. புகைபிடித்தலினால் குழந்தைக்கு ஆபத்து மட்டுமின்றி குறை மாதப்பிரசவம் ஆகவும் வாய்ப்புகள் உள்ளது.
வாந்தியை கட்டுப்படுத்த:
கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்கள் வரை அதிகாலையில் வாந்தி வருவது வழக்கமான ஒரு அறிகுறியாகும். உலர் சீரியல் வகைகள் போன்ற உணவுகளைக் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக உட்கொண்டால் வாந்தி குறையும். அதே போல உணவுகளை சிறிய அளவில் அடிக்கடி சாப்பிட்டு வருவதாலும் பொரித்த உணவுகளை தவிர்ப்பதாலும் வாந்தியைக் கட்டுப்படுத்தலாம்.
மேலும் படிக்க:அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாளிக்க சில டிப்ஸ் இதோ!
தடுப்பூசி:
சிறு வயதில் தடுப்பூசி போடப்படாமல் இருந்தால் நீங்கள் கர்ப்பமாக வேண்டும் என தீர்மானிக்கும் முன்னே உங்கள் மருத்துவரை அணுகி தடுப்பூசியைப் பெற்றுவிட்டு கர்ப்பமாவது அவசியம். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation