herzindagi
valentines day quotes

Valentines Day Wishes : கவிதைகள் வழியே காதலைச் சொல்லுங்கள்!

காதலர் தினத்தில் காதலி தனது அன்பான காதலனிடம் எதிர்பார்ப்பது உணர்வுப்பூர்வமான வார்த்தைகளையும் தான். காதலியின் மனம் கவர்ந்திட உதவும் கவிதைகள், வாழ்த்துகள் இங்கே...
Editorial
Updated:- 2024-02-13, 21:25 IST

காதலர் தினம் என்பது அன்பின் கொண்டாட்டமாகும். இந்த நாளில் உங்கள் அன்புக்குரிய நபரிடம் பாசத்தை அர்த்தமுள்ள வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்துவது அவசியமாகும். பரிசளிப்பது மட்டுமே காதலர் தின கொண்டாட்டத்தில் நிறைவை தராது. காதல் உறவுக்கு இதயப்பூர்வமான கவிதைகள், காதல் தின வாழ்த்துக்களை பகிர்வதும் அன்பின் வெளிப்பாடாக அமையும். காதலர் தின வாழ்த்தில் அன்புக்குரியவரிடம் என்ன சொல்வது என்று தெரியாவிட்டால் உங்கள் காதல் பயணத்தை முழுவதுமாக நினைவில் கொண்டு வந்து வாழ்த்து எழுத முயற்சியுங்கள்.

 valentines day messages

உறவாக யாரும் வேண்டாம்... உயிராக நீ மட்டும் போதும்... இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்

காதலும் கூட சில நேரங்களில் பொறாமை கொள்கிறதடி சகியே, உன் மீது நான் காட்டும் காதலைக் கண்டு...

ரோஜா இதழ்களும் தலை குனிந்ததோ... உன் இதழிடம் தோற்ற சோகத்தில்... காதலர் தின நல்வாழ்த்துகள்

சுகத்தை பகிர்ந்து செல்லும் அன்பை விட சோகத்தை பகிர்ந்து கொள்ளும் அன்பு என்றும் உண்மையானது... இனிய காதலர் தின வாழ்த்துகள்

காதல் காற்றை போன்றது... நம்மால் அதைப் பார்க்க முடியாது... ஆனால் அதை உணர முடியும்

எந்த நிலையிலும் வரலாம்... எந்த வயதிலும் வரலாம்... அது ஒன்றல்ல ஒன்றிரண்டு மூன்று நான்கென்று எண்ணிக்கை ஏறலாம்... ஆனால் என்னதான் அது என்ற இருதயத் துடிப்புக்கும்... எப்போதுதான் நேரும் என்ற உடல் தவிப்புக்கும் இடைவெளியில் நேருகின்ற துன்பம் குழைத்த இன்பம்தான் காதல்..

முதுமையானாலும் வாழ்க்கை புதுமையாகவே இருக்கும்... மனதிற்குள் உண்மையான காதல் இருந்தால்..!

என் வாழ்வில் எவ்வளவு துன்பம் வந்தாலும் தாங்கிக் கொள்வேன் ஆறுதல் கூற நீ துணையாய் இருக்கும் போது...

நீ தூங்குவதற்கு சிறந்த இடம் என் இதயம் என்றால் உனக்காக என் இதயத்துடிப்பையும் நிறுத்திவைப்பேன்... நீ விழிக்கும் வரை!

உன் கண் அசைவில் மயங்கிப் போனேன் நான்... மயக்கம் தெளியாமல் உன்னிடமே உன் நெருக்கத்தில் அடங்கிப் போகிறேன் நான்....

காதலுக்கும் கவிதைக்கும் வித்தியாசம் என்னவெனக் கேட்டாய்... உன்னோடு பேசினால் அது காதல்...! உன்னை பற்றி பேசினால் அது கவிதை...!

சொல்லத் துடிக்கும் உதடுகளுக்கும் சொல்லாமல் தவிக்கும் இதயத்திற்கும் இடைப்பட்ட உணர்வே காதல்!

மேலும் படிங்க காதலர் தினம்… நெஞ்சம் நிறையுதே காண்பதெல்லாம் காதலடி!

குடும்ப உறவுகளிடமும் காதலை வெளிப்படுத்தலாம். அதற்கான காதலர் தின வாழ்த்துகள் இதோ...

  • இன்று நான் இந்த நிலையில் இருப்பதற்கு நீயும் காரணம். நம் குடும்பத்திற்காக நீ செய்த அனைத்து தியாகத்திற்கும் நன்றி என் அன்பே. காதலர் தின வாழ்த்துக்கள்
  • நாம் சந்தித்த நாள் முதல் ஒவ்வொரு நாளும் என்னை சிரிக்க வைத்து கொண்டே இருக்கிறாய். காதலர் தின வாழ்த்துக்கள் என் ஆருயிரே...

மேலும் படிங்க காதலியை கட்டிப்பிடித்தால் அதிகரிக்கும் காதல் ஹார்மோன்

இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com