பிப்ரவரி மாதம் வந்ததுமே நம் எண்ணங்களில் தோன்றுவது பிப்ரவரி 14ஆம் தேதி உலங்கெங்கும் உள்ள காதல் ஜோடிகளால் கொண்டாடப்படும் காதல் தினம் தான். காதலர் வாரத்தில் ஹக் டே, கிஸ் டே, ப்ராமிஸ் டே என விதவிதமான கொண்டாட்ட நாட்கள் இருந்தாலும் காதல் ஜோடிகள் காதலர் தினத்தையே மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடுகின்றனர். இதில் நீங்கள் அறிய வேண்டிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே...
காதலர் வாரம் முடிவுக்கு வரும் நிலையில் உலகம் முழுவதும் உள்ள காதல் ஜோடிகள் பிப்ரவரி 14 அன்று காதலர் தினத்தைக் கொண்டாட தயாராகி வருகின்றனர். காதலர் தினம் என்பது காதலர் வாரத்தின் கடைசி நாளாகும். தங்கள் அன்பை வெளிப்படுத்த பரிசுகள், வாழ்த்து அட்டை உள்ளிட்டவற்றை இந்த நாளில் காதலன் தனது காதலிக்கும், காதலி தனது காதலனுக்கும் கொடுத்து மகிழ்ச்சியின் உச்சத்திற்கு செல்கின்றனர். காதலர் தினத்தை காதல் ஜோடிகள் மட்டுமே கொண்டாட வேண்டும் என சட்டம் கிடையாது.
காதலிக்காத சிங்கிள்ஸும் காதலர் தினத்தை சுய காதல் (SELF LOVE) நாளாகக் கருதி சுய கவனிப்பில் ஈடுபடுவதன் மூலமாகவோ அல்லது தாங்கள் விரும்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலமாகவோ தங்களைக் தாங்களே மகிழ்ச்சியடைக் வைக்கலாம். காதலர் தின கொண்டாட்டம் உலகின் மூலை முடுக்கெங்கும் பரவி இருந்தாலும் பலருக்கு காதலர் தினத்தின் தோற்றம் மற்றும் முக்கியத்துவம் தெரியாது. நீங்கள் அந்த நபர்களில் ஒருவராக இருந்தால் இந்த கட்டுரையைத் தவறாமல் படியுங்கள்.
காதலர் தினத்தின் தோற்றத்திற்குப் பின்னால் பல கதைகள் உள்ளன. மிகவும் பிரபலமான புராணக்கதைகளில் ஒன்றின்படி காதலர் தினம் பிப்ரவரி மாதத்தின் மத்தியில் நடைபெற்ற ரோமானிய திருவிழாவான லூபர்காலியாவில் இருந்து வருகிறது. வசந்த காலத்தின் துவக்கத்தின் போது கொண்டாடப்படும் இந்த திருவிழாவில் பெண்கள் ஆண்களுடன் லாட்டரி மூலம் ஜோடியாக இணைக்கப்பட்டனர்.
மேலும் படிங்க தூரத்தில் இருந்தாலும் ஹக் தினத்தில் காதலியை கட்டிப்பிடிக்கலாம்!
போப் கெலாசியஸ் I இந்த பண்டிகையை புனித காதலர் தினமாக மாற்றியதாக நம்பப்படுகிறது. ரோமானிய புராணங்களின்படி வீனஸின் மகனான காதல் மற்றும் அழகின் தெய்வமாகப் பார்க்கப்பட்டான். மன்மதனின் வில் மற்றும் அம்பு இதயத்தைத் துளைத்து காதல் மந்திரத்தை வெளிப்படுத்துவதை சித்தரிக்கிறது. எனவே இந்த திருவிழா காதல் உணர்வைக் கொண்டாடுவதாகும்.
நவீன காலத்தில் காதலர் தினம் வணிகமயமான பண்டிகையாக மாறிவிட்டது. காதலர் தினத்தன்று காதலர்கள் ஒருவருக்கொருவர் ஆடம்பரமான பரிசுகளைக் கொடுத்து அன்பை வெளிப்படுத்துகின்றனர். அப்போது கட்டிப்பிடித்தல், முத்தம் கொடுத்தல் போன்றவற்றின் மூலம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள். காதலர் தின கொண்டாட்டத்தில் இதயப்பூர்மான பரிசுகளை அளிப்பவர்களுக்கு மட்டுமே அது என்றென்றும் நிலைத்து நிற்கும். ஆடம்பரமாகச் செலவு செய்து பரிசு வழங்க வேண்டும் என அர்த்தம் கிடையாது.
மேலும் படிங்க காதல் உறவில் அர்ப்பணிப்பை உணரத்தும் ப்ராமிஸ் டே
காதல் உறவுக்காக கைவினை பொருட்களைத் தயாரிக்கலாம், பிடித்தமான உணவை நாமே சமைத்து கொடுக்கலாம், வாழ்த்து அட்டையில் கவிதைகள் எழுதி அன்பை வெளிப்படுத்தலாம். இப்படி ஏராளமான வழிகள் உள்ளன.
காதலில் வெற்றி தோல்வி என்பது ஒரு மாய வார்த்தை. திருமணத்தில் முடிந்தால் மட்டுமே காதல் வெற்றி பெற்றதாக அர்த்தம் இல்லை. ஒருவர் மீது நாம் வைக்கும் அன்பு வாழ்நாள் முழுவதும் நிலைத்திருந்தால் அது தான் உண்மையான காதல். இது தற்போது அரிதினும் அரிதாகி விட்டது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com