herzindagi
image

Pongal 2025 : தமிழர் திருநாளில் பொங்கல் வைக்க நல்ல நேரம்; தை பிறந்தால் வாழ்வில் வழி பிறக்கும்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையன்று வீட்டில் பொங்கல் வைக்க நல்ல நேரம், வழிபாடு முறை, பொங்கல் பண்டிகையின் சிறப்பு அம்சங்கள் குறித்து இங்கு விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
Editorial
Updated:- 2025-01-11, 15:27 IST

ஆண்டின் தொடக்கத்திலேயே ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் உற்சாகத்தை அளிக்ககூடிய பொங்கல் மிகவும் பிடித்தமான பண்டிகையாகும். உழவு தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்த முன்னோர்கள் உழக்கு உதவும் சூரிய பகவானுக்கும், உழவுக்கு உதவும் மாடுகளுக்கு நன்றி சொல்வதற்காக பயன்படுத்திய அழகான அறுவடை திருநாளே பொங்கல். இந்தியாவின் தென் மாநிலங்களில் பொங்கல் பண்டிகையை ஒவ்வொரு விதமாக கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு பொங்கல் திருநாள் 14ஆம் தேதி அமைந்திருக்கிறது. பொங்கலுக்காக வீடு முழுவதையும் சுத்தம் செய்து வெள்ளை அடிப்பது வழக்கம்.

Pongal significance

பொங்கல் வைக்க நல்ல நேரம்

14ஆம் தேதி சூரிய பொங்கல் வைப்பதாக இருந்தால் காலை 5 மணி முதல் 6 மணிக்குள் பொங்கல் வைத்து சூரிய உதயம் ஆகும் போது பொங்கலை நெய் வேத்தியம் செய்யலாம்.

சூரிய பொங்கல் நேரத்தை தவறவிடும் நபர்கள் காலை 6 மணிக்கு மேல் ஆரம்பித்து 8.50 மணிக்குள் பொங்கல் வைத்து படைத்துவிடுங்கள்.

காலையில் தாமதமாக எழுந்து இந்த இரண்டு நேரத்தையும் தவற விடுவோர் காலை 10.35 மணிக்கு பொங்கல் வைக்க ஆரம்பித்து 12 மணிக்குள் படையலிடுங்கள்.

பொங்கல் பண்டிகை முக்கியத்துவம்

ஒரு ஆண்டு பிறக்கிற போது நம் எல்லோருக்கும் அந்த ஆண்டு வளமாக மகிழ்ச்சியாக அமைவதற்காக தித்திப்புடன் பொங்கல் கொண்டாட ஆரம்பித்தனர். பானையில் பொங்கல் பொங்கினால் 365 நாட்களும் சிறப்பாக அமையும் என்பதை நம்பிக்கை. வீட்டுக்கு வெளியே முற்றத்தில் சுத்தம் செய்து விரகு அடுப்பில் பாரம்பரிய முறையில் பொங்கல் வைப்பது சிறப்பு. நகர வாழ்வியலில் உள்ள நபர்கள் கேஸ் அடுப்பில் பித்தளை பானை வைத்து சர்க்கரை பொங்கல் தயாரியுங்கள். இறைவனுக்கு படையிலிட்டு வழிபட்ட பிறகு நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், வீட்டின் அருகே உள்ள அனைவருக்கும் பொங்கலை பரிமாறு அன்பை வெளிப்படுத்துங்கள்.

மேலும் படிங்க  Pongal Timings : பொங்கல் வைப்பதற்கான நல்ல நேரம் 

பொங்கல் பண்டிகை சிறப்பு

பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் எனவே தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கலை முழு மனதோடு கொண்டாடி மகிழுங்கள். குலதெய்வத்தை வேண்டி சூரியனை பார்த்து பொங்கல் வைக்க ஆரம்பிக்கவும். பொங்கல் தெற்கு பக்கம் பொங்கினால் எதிரிகள், தேவையில்லாத தடைகள் அன்றோடு விலகும். அனைத்து திசைகளிலும் பொங்கல் ஒரே நேரத்தில் பொங்கினால் உங்களுடைய குடும்பத்திற்கு மேன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com