herzindagi
image

அகிம்சையத் தவிர உலகில் வேறொன்றுமில்லை என முழங்கிய மகாத்மாவின் பொன்மொழிகளின் சில

ஆங்கிலேயர்களின் அடக்கு முறைகளை எதிர்த்து அமிச்சை வழியில் போராடி வெற்றி கண்ட முக்கிய சுதந்திர போராட்ட வீரர்களில் முக்கியமானவராக விளங்கினார் மகாத்மா காந்தி.    
Editorial
Updated:- 2024-10-01, 22:47 IST

மற்றவர்களை வெல்ல என்னிடம் அன்பைத்தவிர வேறொன்றும் இல்லை என நாட்டை அடிமைப்படுத்தி இருந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக தைரியமாக அறவழி போராட்டத்தை முன்னெடுத்தவர் காந்தி. இதுபோன்று இன்றைய இளைஞர்களுக்காக அப்போதே பல பொன்மொழிகளைக் கூறிய பெருமைக்குரியவர் காந்தி.

 gandhi ji slogans

ஆங்கிலேயர்களின் அடக்கு முறைகளை எதிராக நாடே போராட்டக் களத்தில் இறங்கி வன்முறையை ஒருபுறம் கையாண்ட போது, எந்த சூழலிலும் தன்னுடைய அறம் தவறாமலும், அகிம்சை என்ற ஒற்றை குரலோடு அறவழியில் போராடிய மகாத்மா காந்தியின் பிறந்த தினம் அக்டோபர் 2 அன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இன்றைய நாளில் ஒருமுறையாவது காந்திஜியின் பொன்மொழிகளைக் கட்டாயம் நினைவு கூற வேண்டும்.

 

அதிலும் நாளுக்கு நாள் வன்முறை சம்பவங்கள் அதிகமாகி வரக்கூடிய நம்முடைய இந்திய திருநாட்டில் அகிம்சை வழியைப் பின்பற்ற காந்தியின் பொன்மொழிகள் கொஞ்சம் மாற்றத்திற்கு உதவியாக இருக்கும். அதிலும் இன்றைய இளைஞர்கள் கட்டாயம் அறிந்துக் கொள்ள வேண்டிய சில பொன்மொழிகள் மற்றும் காந்தி மேற்கோள் காட்டிய சில வாசகங்களை இங்கே உங்களுக்காகப் பகிர்கிறோம்.

 

slogan for gandhi ji

மேலும் படிக்க: Gandhi Jayanti 2024 : உண்மை, அகிம்சையின் உருவமான காந்தியின் பிறந்தநாளில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்

மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்:

 

  • நீ எந்தவிதமான உலகத்தைப் பார்க்க விரும்புகிறாயோ, அதை போல நீ மாறு
  • எவன் தன்னிடம் உள்ள குறைகளை மறைக்கிறானோ, அவனே குருடன்
  • ஒருவனிடம் ,துக்கமும், தூக்கமும் எப்போது குறைகிறதோ? அப்போது அதன் நிச்சயம் மேதை ஆவான்
  • பணிவு இல்லாத வாய்மை செருக்கு இல்லாத கேலி சித்திரம்
  • பலவீனமானவன் எப்போதும் மன்னிக்க மாட்டான். மன்னிப்பது என்பது பலமுடையோரின் குணம்
  • மனதில் தீயவற்றை சிந்திப்பன், தீயவற்றை செய்பவனுக்கு சமம்.
  • மற்றவர்களைக் கெட்டவன் என்று சொல்வதில் நாம் நல்லவராகி விட முடியாது
  • அன்புள்ள இடத்தில் தான் இறைவன் இருக்கிறான்
  • கண்பார்வை அற்றவன் குருடன் அல்ல, தன்னுடைய குற்றங்களை மறைப்பவனே குருடன்
  • நீங்கள் எதை சிந்தித்தாலும் அதை உங்களது உள்ளத்திற்கும், உலகத்திற்கும் உண்மையாகவே நடந்துக் கொள்ளுங்கள்
  • வாழ்க்கையில் செய்யும் தவறுகளை ஒப்புக் கொள்வதை விட பெரிய அவமானம் ஏதுமில்லை
  • எது முழுமையானதாகவும், உண்மையாகவும் இல்லாமல் இருக்கிறதோ, அதை பெயர் சொல்லி அழைப்பதில் எவ்வித பலனும் இல்லை.
  • எல்லாவற்றிற்கும் அறம் தான் அடிப்படை, அந்த அறத்துக்கே உண்மை தான் அடிப்படை
  • மனிதனாக இருப்பது அல்ல மனிதம், மனிதாபிமானத்துடன் இருப்பதே மனிதம்

மேலும் படிக்க: காந்தி ஜெயந்தி பேச்சு போட்டியில் மகாத்மா காந்தி பற்றி குறிப்பிட வேண்டிய விஷயங்கள்; மாணவர்களே உங்களுக்காக

  • அன்பு அச்சமில்லாதது, அன்புள்ள இடத்தில் தான் கடவுள் இருக்கிறான்
  • தியாகம் செய்துவிட்டு வருந்துபவன் தியாகி அல்ல
  • மிருகங்களைப் போன்று நடந்துக் கொள்பவன் சுதந்திர மனிதனாக இருக்க முடியாது.
  • வாய்மையே வெல்லும்
  • மற்றவர்களை வெல்ல என்னிடம் அன்பைத்தவிர வேறொன்றும் இல்லை
  • பிறரை அழிக்க நினைப்பவன், தன்னைத்தானே அழித்துக் கொள்ள முயல்கிறான்

mahatama

இதுபோன்ற தன்னுடைய வாழ்நாளில் மக்களின் நலன்களுக்காக தன்னுடைய பொன்மொழிகளின் வாயிலாக குரல் கொடுத்த உன்னத தலைவர்களில் ஒருவர் மகாத்மா. இவருடைய பிறந்த நாள் மட்டுமல்ல, வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் காலத்தால் அழியாத காந்திஜியின் பொன்மொழிகளைப் பினபற்ற வேண்டும்.

Image source- Google

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com