herzindagi
image

காந்தி ஜெயந்தி பேச்சு போட்டியில் மகாத்மா காந்தி பற்றி குறிப்பிட வேண்டிய விஷயங்கள்; மாணவர்களே உங்களுக்காக

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒவ்வொரு பள்ளியிலும் மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்ட வரலாறு, தியாகம் குறித்து கட்டாயம் பேச்சுப்போட்டி நடத்தப்படும். தேசத்தின் தந்தை என்று போற்றப்படும் காந்தியை பற்றி இன்றைய தலைமுறை தெரியடுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இதையொட்டி பள்ளிகளில் நடத்தப்படும் பேச்சுப்போட்டியில் மகாத்மா காந்தி பற்றி பேசுவதற்கு முக்கியமான விஷயங்களை இந்த கட்டுரையில் பகிர்ந்துள்ளோம்.
Editorial
Updated:- 2024-10-01, 18:57 IST

காந்தி ஜெயந்தி 2024 : தேச பிதா, தேச தந்தை, தேச தந்தை என போற்றப்படும் மகாத்மா காந்தி உலகெங்கும் சுதந்திர போராட்டம் நடத்தும் நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியான தலைவராக திகழ்பவர். அவரது 155வது பிறந்தநாள் அக்டோபர் 2ஆம் தேதி கொண்டாடப்படும் நாட்டின் சுதந்திரத்திற்கு அளித்த பங்களிப்பை நினைவு கூற வேண்டியுள்ளது. பேச்சு போட்டியில் பங்கேற்கும் மாணவர் சுதந்திரம் பெற காந்தி எடுத்த அனைத்து முயற்சிகளையும் சக மாணவர்கள் கற்பிப்பது அவசியம். அகிம்சை பாதையின் வழிகாட்டியாக காந்தியை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே காந்தி ஜெயந்தியையொட்டி நடத்தப்படும் பேச்சுப்போட்டியில் காந்தி குறித்து குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயங்கள் இந்த கட்டுரையில் பகிரப்பட்டுள்ளன.

காந்தி ஜெயந்தி பேச்சுப் போட்டி

அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும், மாணவர்களும் மற்றும் நண்பர்களுக்கும் முதற்கண் வணக்கம்

அக்டோபர் 2ஆம் தேதியான இன்று நாம் அனைவரும் மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு இங்கு கூடியுள்ளோம். இவர் தேசத்தின் தந்தை அல்லது தேச பிதா என அறியப்படுகிறார். மகாத்மா காந்தி 1869ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் போர்பந்தரில் பிறந்தவர். இவரது முழு பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.

காந்தி உண்மையையும், அகிம்சையையும் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆயுதங்களாக கருதினார். உலகில் பெரிய பெரிய மாற்றங்களை வன்முறையின்றி நிகழ்த்த முடியும் என நமக்கு நிரூபித்தவர். இவரது தலைமையில் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முக்கியமான போராட்டங்களை எதிர்கொண்டது. ஒத்துழையாமை இயக்கம், தண்டி யாத்திரை மற்றும் வெள்ளையனே வெளியேறு முழக்கம் ஆகியவை காந்தியின் சாதனைகளாகும்.

இந்தியாவில் சாதி, மத, இன பேதமின்றி மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என காந்தி விரும்பினார். அனைவரும் சமமாக மதிக்கப்படுவது அவசியம் என்றும் ஆசைப்பட்டார். வறுமையில் தவித்த பொதுமக்களுக்கு பெரிதும் உதவினார். அவரிடம் இருந்து நாம் பல விஷயங்களை கற்கலாம். எளிமை, தன்னம்பிக்கை மற்றும் சத்தியத்தின் பாதையில் நடக்கும் தைரியம் போன்றவற்றை காந்தியிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்.

காந்தியின் வாழ்க்கை படிப்பினை ஒவ்வொரு மாணவரையும் கட்டாயம் ஊக்குவிக்கும். இந்தநாளில் காந்தியின் கொள்கைகளை பின்பற்றி அவர் காட்டிய அகிம்சை பாதையில் நடப்போம் என உறுதி ஏற்க வேண்டும். காந்தியின் சிந்தனைகள் இந்தியாவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகிற்கும் உத்வேகம் அளிக்ககூடியது.

இந்த நாளில் காந்தியின் பங்களிப்பை நினைவு கூர்ந்து அவருடைய கொள்கைகளை நம் வாழ்க்கையிலும் பின்பற்றி நடப்போம்... நன்றி!

பல ஆண்டுகளுக்கு முன்பே காந்தி மறைந்திருந்தாலும் சுதந்திர இந்தியாவை உருவாக்க எடுத்த முயற்சிகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தொடர்ந்து கற்பித்து கொண்டே இருக்க வேண்டும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com