மே 21,1991ல் தமிழகத்திற்கு தேர்தல் பரப்புரைக்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் கொலை செய்தனர். இச்சம்பவத்தை Ninety days the true story of the hunt for rajiv gandi assassins என்ற தலைப்பில் அனிருத்யா மித்ரா புத்தகமாக எழுதி வெளியிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் The Hunt என்ற வெப் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஜூலை 4ஆம் தேதி வெளியானது. வாருங்கள் இந்த வெப் தொடரின் விமர்சனத்தை பார்ப்போம்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய அப்போதைய பிரதமர் சந்திர சேகர் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படுகிறது. சென்னையில் முகாமிட்டு அக்குழு ராஜீவ் காந்தி கொலையில் குற்றவாளிகள், தொடர்புடையவர்களை கண்டுபிடித்து விசாரிக்கின்றனர். குற்றவாளிகளை எவ்வாறு கண்டுபிடித்தனர் ? அதில் சந்தித்த சவால்களை ஆறு எபிஸோட் கொண்ட வெப் தொடராக எடுத்துள்ளனர்.
தங்களுக்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் வெப் தொடர் எடுக்கப்பட்டுள்ளதால் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. ராஜீவ் காந்தி கொலைக்கு மூளையாக செயல்பட்ட சிவராசனை நெருங்கியும் எப்படி உயிருடன் பிடிக்க முடியாமல் கோட்டை விட்டனர் என்பதையும் காட்டியுள்ளனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களில் தற்போது யாரும் சிறையில் இல்லை எனினும் அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்பதை மறுக்க முடியாது. ராஜீவ் காந்தியை கொலை செய்ததன் நோக்கத்தையும் காண்பித்து இருந்தால் தி ஹன்ட் பரபரப்பாக பேசப்பட்டு இருக்கும். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் தோற்றத்தில் நடிக்க வைக்க சரியான நபரை கூட தேர்ந்தெடுக்கவில்லை.
ராஜீவ் காந்தி கொலை வழக்கை பற்றிய முழு தகவல்களை அறிய ஜெயின் கமிஷன் அறிக்கையை படிக்கவும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com