காந்தி ஜெயந்தி 2024 : மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தேச தந்தையான காந்தியின் அகிம்சை பாதை மற்றும் உண்மையை நிலைநாட்டுவதில் அவர் காட்டி உறுதியை உலகிற்கு எடுத்துரைப்பது அவசியமாகும். இந்த ஆண்டு இந்தியா பாபு என்றழைக்கப்படும் காந்தியின் 155வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. இந்தியாவில் அக்டோபர் 2ஆம் தேதி அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதே நேரம் உலகெங்கும் இந்த நாள் சர்வதேச அகிம்சை தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறது.
தேசப் பிதாவான மகாத்மா காந்தி 1869ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தரில் பிறந்தவர். தேசத்தின் சுதந்திர போராட்டத்தில் காந்தியின் பங்களிப்பு அளப்பரியது. கொடுங்கோல் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அகிம்சை பாதையைக் கடைபிடிக்க வைத்து இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்தவர். 1947ல் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு அவர் எடுத்த தொடர் முயற்சிகளும் பல சுதந்திர போராட்ட வீரர்களை ஒருங்கிணைத்து வழிநடத்தியதும் முக்கிய காரணமாகும். உண்மையையும், அகிம்சையையும் எப்போதும் கடைபிடிக்க வேண்டும் என்ற அவருடைய தத்துவம் உலகில் பெரும்பாலானோருக்கு ஊக்கம் அளித்துள்ளது.
1948, மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு அவரது பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி தேச விடுமுறை அளிக்கப்படுகிறது. மகாத்மா காந்தியை பெருமைப்படுத்துவதற்கு மட்டுமல்ல அவருடைய அமைதி மற்றும் நல்லிணக்க கருத்துகளை மக்களிடையே ஊக்குவிப்பதற்கு இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. காந்தி ஜெயந்தி இந்தியர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். இந்த நாளில் பாபு சொல்லிக் கொடுத்த விஷயங்களை மக்களுக்கு கற்பிக்க வேண்டும். அவற்றை வாழ்க்கையில் செயல்படுத்தி சுதந்திரம் பெறுவதற்கு சுதந்திர போராட்ட வீரர்கள் பட்ட கஷ்டங்களை எடுத்துரைத்து தேசத்தை பாதுகாப்பது நம் கடமை என உணர வைப்பது அவசியம். நீதியை பெறுவதற்கு வன்முறை பாதையில் நகராமல் அமைதி காத்து உரிய நியாயத்தைப் பெற வேண்டும்.
காந்தி ஜெயந்தி அன்று கலாச்சார மற்றும் பாபுவை நினைவுகூறும் நிகழ்வுகளை நடத்துவது முக்கியம். தலைநகர் டெல்லியில் பாரத தேசத்தின் பிரதமரும், குடியரசு தலைவரும் காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துவார்கள். கல்வி நிறுவனங்களில் மகாத்மா காந்திக்கு பிடித்தமான ரகுபதி ராகவ ராஜாராம் பஜனையை மாணவர்கள் பாடுவார்கள். அதே போல காந்தியின் வாழ்க்கை வரலாறு திரைபடமும் ஒளிபரப்படும்.
இத்தனை தியாகங்களை காந்தி செய்திருந்தாலும் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்ததில்லை. 2007ஆம் ஆண்டு முதல் காந்தி ஜி பிறந்தநாளை ஐநா சர்வதேச அகிம்சை தினமாக கடைபிடித்து வருகிறது.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com