herzindagi
house hold cleaning big

இப்படி கூட நாற்காலியையும், வீட்டில் உள்ள பொருட்களையும் நம்மால் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியுமா!!!

நாற்காலி போன்ற பல பொருட்களை கிருமிகள் எதுவுமின்றி சுத்தமாக வைத்துக்கொள்ள இதனை படித்தறிந்து பயன் பெறவும்.
Editorial
Updated:- 2022-11-29, 12:38 IST

உங்கள் வீட்டு பொருட்களை கிருமிகள் எதுவுமின்றி சுத்தமாக வைத்திருக்க நீங்கள் நினைத்தால், இந்த குறிப்புகளைப் பின்பற்றுங்கள்.

நாம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களிலும் கிருமிகள் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், நமக்கே தெரியாமல் மேசை, சோபா போன்ற மர சாமான்களிலும், வீட்டு உபயோக பொருட்களிலும் கிருமிகள் பரவுகின்றன. இது போன்ற நிலையில், சில குறிப்புகளைப் பயன்படுத்தி நீங்கள் வீட்டிலிருக்கும் கிருமிகளை எளிதாக அகற்றலாம். எல்லோரும் வீட்டை சுத்தமாக வைத்திருக்கிறார்கள். பல நேரங்களில் நாற்காலி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களில் கிருமிகள் நிறைந்திருப்பது நமக்கே தெரிவதில்லை.

பாத்திரங்களை கவனித்துக்கொள்ளுதல்

உங்கள் வீட்டு பாத்திரங்கள் பராமரிப்பில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நாம் சமையலறையில் பயன்படுத்தும் பாத்திரங்களில் நம் கண்ணுக்கே தெரியாத கிருமிகள் உள்ளது. பாத்திரங்களை நீண்ட நேரம் பேசினில் போட்டு வைத்திருக்காதீர்கள்.

தரையை துடைத்தல்

house hold cleaning

உங்கள் வீட்டின் தரையை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். வீட்டின் தரையை சுத்தம் செய்ய நீங்கள் வினிகர் அல்லது எலுமிச்சையை கூட பயன்படுத்தலாம். அதேபோல், அம்மோனியாவைப் பயன்படுத்தியும் உங்கள் வீட்டு தரையை எளிதாக சுத்தம் செய்யலாம்.

மர சாமான்களை கவனித்து கொள்ளுதல்

மிச்சமான பொருட்களை சோபா, மேசை போன்ற மர சாமான்கள் மீது போடாதீர்கள். மர சாமான்களை நன்றாக சுத்தம் செய்யுங்கள், குறிப்பாக அதன் மீது ஈரமான துணியை போட வேண்டாம். இல்லையெனில், நமக்கே தெரியாமல் கிருமிகள் பரவிவிடும்.

தேவையற்ற பொருட்களை சேகரித்து வைத்தல்

house hold cleaning

அதிகப்படியான பொருட்களை வைத்திருப்பதால் வீட்டை சுத்தம் செய்வது மிகவும் கடினமாகிவிடுகிறது, மேலும் அதிக பொருட்கள் இருக்குமிடம் கிருமிகளின் கூடாரமாக மாறிவிடும். நம் வீட்டை சுத்தம் செய்ய நம் சமையலறையில் இருந்து தொடங்க வேண்டும். நம் சமையலறையில் தான் நிறைய தேவையற்ற பொருட்களை வைத்திருப்போம். அதனை அப்புறப்படுத்துவது நல்லது.

கதவு கைப்பிடிகளை சுத்தம் செய்தல்

house hold cleaning

உங்கள் வீட்டு கதவின் கைப்பிடிகளை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். சில நேரங்களில் நீங்கள் அவசர அவசரமாக சுத்தம் செய்யும்போது கதவின் கைப்பிடிகளை சுத்தம் செய்ய மறந்துவிடுகிறீர்கள். அத்தகைய சூழ்நிலையில், அவை கிருமிகளின் கூடாரமாக மாறிவிடும்.

குழந்தைகளின் பொம்மைகளில் சிறப்பு கவனம் செலுத்துதல்

house hold cleaning

நம் குழந்தைகள் விளையாடும் பொம்மைகளிலும் கிருமிகள் நிறைந்திருக்கும். அதனால்தான், நம் வீட்டின் தரையை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால், நமக்கே தெரியாமல், வீட்டில் கிருமிகள் பரவும். எனவே நீங்கள் மேற்கூறியவற்றை பின்பற்றி வீட்டில் உள்ள கிருமிகளை எளிதாக அகற்றலாம்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit: freepik, shutterstock

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com