herzindagi
image

உங்கள் மனநலனை பாதுகாக்க உதவும் 5 குறிப்புகள்; நோட் பண்ணுங்க மக்களே

உங்கள் மனநலனை பாதுகாக்க உதவும் விதமான 5 குறிப்புகளை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். இவை அனைத்தையும் உங்கள் அன்றாட வாழ்வில் செயல்படுத்துவதன் மூலம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை நீங்கள் உணர முடியும்.
Editorial
Updated:- 2025-12-04, 18:58 IST

நம்முடைய மனநலனை பாதுகாப்பது என்பது மனதிற்கு புத்துணர்வூட்டும் எளிய மற்றும் அர்த்தமுள்ள முயற்சியாகும். பிஸியான வாழ்க்கைக்கு இடையே உங்களின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க உதவும் ஐந்து குறிப்புகளை பார்க்கலாம்.

மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் குறிப்புகள்:


முதலில் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் அவசியத்தை புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய மனநலன் சீராகவும், மன அழுத்தம் இல்லாமலும் இருந்தால் தான், நம்முடைய அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியும். அதற்கு உதவும் குறிப்புகள் தான் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.


தியானம் செய்தல்:

 

தியானம் செய்வது என்பது உங்களை சுற்றியுள்ள பதற்றங்களை அமைதிப்படுத்தி, உங்கள் மனம் கூறுவதை கேட்க உதவும் ஒரு ஆற்றல் மிகுந்த பயிற்சியாகும். தியான பயிற்சி மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கும். இது பல வேலைகளை ஒரே நேரத்தில் திறமையாக செய்ய உதவும். அத்துடன், முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தவும் துணைபுரிகிறது. தினமும் 5 முதல் 10 நிமிடங்கள் அமைதியான இடத்தில் அமர்ந்து இதனை மேற்கொள்ளலாம்.

 

மேலும் படிக்க: Pregnant women health tips: நோய் தொற்று அபாயத்தை தடுக்க கர்ப்பிணி பெண்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்

 

நாட்குறிப்பு எழுதுதல்:

 

உங்கள் உணர்வுகள் மற்றும் எண்ணங்களை நாட்குறிப்பில் எழுதுவது, மனதை குழப்பத்திலிருந்து விடுவிக்கும் ஒரு சிறந்த வழியாகும். ஒரு பேனா மற்றும் காகிதத்தை எடுத்து, அன்றாட நிகழ்வுகள், அதனால் ஏற்பட்ட உணர்வுகள் மற்றும் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். இந்த செயல் உங்கள் மனதைக் குழப்பத்திலிருந்து விடுவிக்க உதவுகிறது. அத்துடன் மன அழுத்தம், பதற்றம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றை கையாள உதவுகிறது.

Journaling

மேலும் படிக்க: Postpartum depression: பிரசவத்திற்கு பின்னர் பெண்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு; தடுப்பதற்கான எளிய வழிமுறைகள்

 

நீரேற்றத்தின் அவசியம்:

 

உடல் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் அத்தியாவசியமானது. போதுமான நீரேற்றத்துடன் இருப்பது, உடலின் அனைத்து செயல்பாடுகளையும் சீராக பராமரிக்க உதவுகிறது. எனவே, நீங்கள் நீரேற்றத்துடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தினமும் குறைந்தபட்சம் 6-7 கிளாஸ் தண்ணீர் குடிப்பது உங்கள் உடல் மற்றும் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

 

தவறாமல் உடற்பயிற்சி செய்தல்:

 

உடற்பயிற்சி உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியம். இது உங்களுக்கு மகிழ்ச்சியையும் கொடுக்கிறது. வழக்கமான உடற்பயிற்சி உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் பல உடல்நல அபாயங்களை குறைக்கிறது.

Exercise

 

இயற்கை சூழலில் நேரத்தை செலவிடுதல்:

 

சிறிது நேரம் இயற்கை சூழலில் சென்று காற்றை சுவாசிப்பது அன்றைய தினத்தை பெரிய அளவில் மாற்றியமைக்கும். சூரிய ஒளி மூலம் நமக்கு வைட்டமின் டி கிடைக்கிறது. இது எலும்பு மற்றும் தசைகளின் வலிமை, பல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு அமைப்பு, அழற்சி எதிர்ப்பு ஆகியவற்றை மேம்படுத்த உதவுகிறது . தினமும் சிறிது நேரம் இயற்கை சூழலில் நேரத்தை செலவிடுவது புத்துணர்ச்சியை அளிக்கும்.

 

இவை அனைத்தையும் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் நம்முடைய மனநலனை ஆரோக்கியமாக பராமரிக்க முடியும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com