Fussy Baby : கத்தி கதறி அழும் குழந்தையை சமாதானப்படுத்தும் சூட்சுமம்

குழந்தை அழுது கொண்டே இருந்தால் உரிய காரணத்தை கண்டறியாமல் வயிற்று வலி என பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டாம். குழந்தையை எளிதாக சமாதானப்படுத்தும் வழிகள் இங்கே…

calming techniques for a crying baby

குழந்தை வயிற்றில் இருக்கும் வரை எப்போது பிறக்கும் கொஞ்சி விளையாடலாம் என காத்திருக்கும் பெற்றோர் அது பிறந்த பிறகு அழும் சத்தத்தை கேட்டு ஏன் அழுகிறது என்று புரியாமல் பெற்றெடுக்காமல் இருந்திருக்கலாம் என புலம்புவது உண்டு. பயங்கரமாக கத்தி அழும் குழந்தையை சமாதானம் செய்வது போல நமக்கு கடினமான விஷயம் எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை.

குறிப்பாக முதல் குழந்தையை பெற்றெடுக்கும் தம்பதிகள் நடுராத்திரியில் அந்த குழந்தை அழும் போது என்ன செய்வதென்று புரியாமல் விடிய விடிய அழுகையை நிப்பாட்ட முயற்சித்து கொண்டே இருப்பார்கள். சில சமயங்களில் குழந்தைக்கு என்ன ஆனது என புரியாமல் தாய்மார்களும் அழுவார்கள். குழந்தையின் அழுகையை கட்டுபடுத்த பல வித்தைகளை கையாண்ட பிறகும் அது தொடர்ந்து அழுவதற்கும் வாய்ப்புகள் உண்டு.

குழந்தை அழுது கொண்டே இருக்கிறது என்பதற்காக மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை. மருத்துவரிடம் சென்ற உடனேயே நாமாக குழந்தைக்கு கொடுத்த உணவுகளை பட்டியலிட்டு இதனால் எதுவும் பாதிப்பு இருக்குமோ என உளறக் கூடாது. முக்கியமாக மருத்துவரை அணுக வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

calm a crying baby in few seconds

குழந்தை அழுகிறது என்றால் வயிறு வலியாக இருக்கலாம் என நினைக்கிறோம். இது தவறான விஷயம். பெரும்பாலான குழந்தைகள் வயிறு வலியினால் அழுவதில்லை. வயிறு வலியினால் தான் குழந்தை அழுகிறது என நாமாக முடிவு செய்யக் கூடாது.

மேலும் படிங்கஆறு மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்

காரணமின்றி கூட சில குழந்தைகள் அழக் கூடும். இதற்கு colic என்று பெயர். இந்த பிரச்சினைக்காக குழந்தையை மருத்துவர்களிடம் அழைத்துச் செல்ல தேவையில்லை. பெரும்பாலான குழந்தைகளின் தூக்கம் பகல் நேரத்தில் இருக்கிறது. பகலில் தூங்கும் குழந்தைகள் இரவில் முழித்திருக்கின்றன. இரவில் நாம் அனைவரும் தூங்கும் போது இருட்டில் தாயை தேடும் குழந்தை யாரும் இல்லை என அழுக ஆரம்பிக்கிறது.

  • குழந்தையை சில நிமிடங்களுக்கு தோளில் போட்டு தட்டிக் கொடுத்தால் அழுகையை நிறுத்தலாம்.
  • அதன் பிறகும் குழந்தை அழுதால் தாய்ப்பால் கொடுக்கவும். தாய்ப்பால் கொடுத்த பிறகும் குழந்தை அழுதால் தாய்ப்பால் போதவில்லை என நினைக்க வேண்டாம்.
  • குழந்தையை காற்றாட வெளியே அழைத்து சென்றால் இயற்கையாக குழந்தை அழுகையை நிறுத்தி தூங்கிவிடும்.
  • குழந்தைக்கு சளி பிடித்து, மூக்கு அடைப்பு ஏற்பட்டு மூச்சு விட முடியாமல் போனால் அழுக கூடும்.
  • காது வலி, குடல் பிசைந்து இருந்தால் குழந்தை அழும். எனவே முதலில் குழந்தை அழுவதற்கான காரணத்தை தெரிந்து கொண்டு மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.

இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP