Happy Diwali 2024 : வாழ்க்கையில் மத்தாப்பாய் மகிழ்ச்சி பொங்கிட இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

Diwali Wishes In Tamil : தீப ஒளித் திருநாள் என்றாலே அன்பை பகிர்வது தான். இந்த நன்நாளில் உங்கள் அன்புக்குரியவர்கள், நண்பர்கள் மற்றும் குடும்ப உறவுகளுக்கு தீபாவளி வாழ்த்துகளை பகிருங்கள். ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒளி ஏற்றும் பண்டிகையாக தீபாவளி அமையட்டும். தீபாவளிக்கு பகிர வேண்டிய வாழ்த்து, கவிதை, குறுஞ்செய்தி, வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இங்கு பகிரப்பட்டுள்ளது.
image

தீபங்களின் திருவிழா என்றழைக்கப்படும் தீபாவளி பண்டிகையை உலகெங்கிலும் வாழும் இந்து மக்கள் கோலாகலமாக கொண்டாடித் தீர்க்க மிகுந்த ஆவலுடன் உள்ளனர். தீபாவளி கொண்டாட்டம் வீட்டை அலங்கரித்தல், லட்சுமியை வழிபடுதல் புத்தாடை அணிவித்தல், இனிப்புகளை சுவைத்தல், பட்டாசுகளை வெடித்து மகிழ்வதோடு மட்டும் நிறைவடைவதில்லை. அன்புக்குரியவர்களுடன், நண்பர்களுடனும் தீபாவளி திருநாள் வாழ்த்துகளையும் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும். அந்த வகையில் தீபாவளி பண்டிகைக்கான வாழ்த்துகள் இங்கு பகிரப்பட்டுள்ளது.

diwali wishes

தீபாவளி வாழ்த்து & கவிதை

தீபாவளி தங்களின் வாழ்விலும் இல்லத்திலும் வளத்தையும் நலத்தையும் மலரச் செய்யட்டும்... இனிய தீபாவளி வாழ்த்துகள்

சூழ்ச்சிகளும் தீமைகளும் தறிகெட்டு ஓட, நன்மையும், அன்பும் நாடி வர இன்பமாய் கொண்டாடுவோம் தீபாவளியை...

மத்தாப்புகள் சிதற, பட்டாசுகள் வெடிக்க வீடெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க கொண்டாடுவோம் இந்த தீபாவளியை... தீபாவளி நல்வாத்துகள்

பட்டாசுகள் சிதறுவதுபோல உங்கள் கவலைகள் சிதறட்டும்... மத்தாப்பாய் மகிழ்ச்சி பொங்கட்டும்... இனிப்பு பண்டங்களை போல வாழ்க்கை தித்திக்கட்டும்... இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

இந்த தீபாவளி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கொண்டு வரட்டும்... தீபாவளி திருநாள் வாழ்த்துகள்

மனமும் மனையும் இன்பத்தால் ஒளிர... தீபாவளி வாழ்த்துகள்

தீமைகள் ஒளிந்து நன்மை ததும்பட்டும்... இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

புத்தாடை பளபளக்க... பட்டாசு படபடக்க... விதவிதமாய் பண்டங்கள் நாவெல்லாம் சுவைகொடுக்க.. தீப ஒளி திருநாள் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், வளத்தையும் பெருக்கிட தீபாவளி நல்வாழ்த்துகள்

அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்

மத்தாப்பு போல மனம் மகிழட்டும் பட்டாசு போல துன்பம் சிதறட்டும்... இனிவரும் நாளெல்லாம் உங்கள் வாழ்வில் இன்ப ஒளி பரவட்டும்... இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

அனைவர் வாழ்விலும் இருள்நீங்கி ஒளி பிறக்கவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விடவும் தீபாவளி நல்வாழ்த்துகள்

இந்த இனிய நாளில் நம் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கிட, எல்லா வளமும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்வு அமைந்திட தீப ஒளி நல்வாழ்த்துகள்

அறியாமை இருள் நீங்கி அறிவுச் சுடரொளி எங்கும் பரவட்டும்! இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்

தித்திக்கும் இந்த தீபாவளித் திருநாளில், துன்பங்கள் நீங்கி என்றும் இன்பங்கள் மலரும் தீப ஒளியாக இந்த தீபாவளி அமையட்டும்.

உங்களுடைய வாழ்வில் இல்லாமை இருள் விலகி இன்ப ஒளி நிறையவும் தீப ஒளி வகை செய்யட்டும்... தீபாவளி நல்வாழ்த்துகள்

பட்டாசுகள் சிதறுவது போல கவலைகள் சிதறட்டும்... மத்தாப்பாய் மகிழ்ச்சி பொங்கட்டும்... இனிப்புகளை போல வாழ்க்கை தித்திக்கட்டும்... இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

வீடெங்கும் மகிழ்ச்சி பொங்க மத்தாப்போடும், பட்டாசோடும் கொண்டாடுவோம் தீபாவளியை... தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்

மேலும் படிங்கVinayagar Chaturthi Wishes 2024: தடைகளை தகர்க்கும் விநாயகரை கொண்டாடும் சொந்தங்களுக்கு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP