Vinayagar Chaturthi Wishes 2024: தடைகளை தகர்க்கும் விநாயகரை கொண்டாடும் சொந்தங்களுக்கு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!

செப்டம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி பகிர வேண்டிய வாழ்த்துகள், குறுஞ்செய்திகள் இங்கு பகிரப்பட்டுள்ளன... 

vinayagar chaturthi messages

இந்தியா முழுவதும் விசேஷமாக கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி இந்தாண்டு செப்டம்பர் 7ஆம் தேதி அமைந்திருக்கிறது. வடமாநிலங்களில் பத்து நாட்களுக்கு இந்த பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும். இந்த நல்ல நாளில் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிர வேண்டிய வாழ்த்துகள் இங்கு பகிரப்பட்டுள்ளன.

விநாயகர் சதுர்த்திஆசைகள் (Vinayagar Chaturthi Wishes 2024)

vinayagar chaturthi quotes

  • வினைகள் அகலட்டும், தடைகள் உடையட்டும், வெற்றிகள் குவியட்டும், மகிழ்ச்சி பொங்கட்டும்... அன்புடனுன் நட்புடனும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
  • விநாயகர் சதுர்த்தி நாளில் நல்ல தொடக்கம் அமைந்து வாழ்வில் மென்மேலும் உயர... அனைத்து வளமும் நலமும் பெற்றிட மனமார்ந்த வாழ்த்துகள்
  • நிறைந்த செல்வமும் நீண்ட ஆயுளும் பெற்று நலமுடன் வாழ இனிய விநாயகர் நல்வாழ்த்துகள்
  • அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும் கணபதியைக் கைகொழுதக் கால்... இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  • ஓம்கார வடிவமாக விளங்கும் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த தினத்தில் உலகில் அன்பும் அமைதியும் நிலவ... நலமும் வளமும் பெருக... கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
  • அளவில்லா அன்பும் குறைவில்லா செல்வமும் உங்கள் இல்லத்தில் பெருகி நலமுடன் வாழ இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
  • வாழ்வில் அமைதி, செழிப்பு, நல்லிணக்கம், நல்ல உடல்நலத்தை இத்திருநாள் வாரி வழங்கிட அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
  • வினைகளைத் தீர்க்கும்... வெற்றிகளைத் தரும்... வேண்டுதலுக்கு செவிசாய்க்கும் எளிமையான கடவுள் விநாயகனை கொண்டாடி மகிழும் சொந்தங்களுக்கு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
  • தடைகளை தகர்க்கும் விநாயகரை கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  • அனைவரது வாழ்விலும் இன்னல் நீங்கி, சுபிட்சம் பெருகி, வளமான எதிர்காலம் அமைய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  • அருகம்புல் பிரியனே, உன்னைநினைத்தே வாழ்கிறோம்! எங்கள் வினைதீர்த்து அருள் புரிவாய் கணபதியே! இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  • கேட்கும் வரத்தைக் கொடுக்கும் வேழமுகத்து விநாயகப் பெருமானின் திருவருளால் நலமும் வளமும் பெற்று பெருவாழ்வு வாழ விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்...
  • அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  • அனைவரது வாழ்விலும் தடைகள் நீங்கி அன்பு, அமைதி, ஆரோக்கியம் செழித்திட விநாயகரின் அருள் துணை நிற்கட்டும்!
  • செயல்களின் துவக்கமானவனுக்கு தமிழ்கடவுளின் தனயனுக்கு பெற்றோரை உலகமாக்கியவனுக்கு விழா எடுக்கும் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  • விநாயகனே வினை தீர்ப்பவனே... வேழ முகத்தோனே ஞால முதல்வனே... குணாநிதியே குருவே சரணம்... குறைகள் களைய இதுவே தருணம்... இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP