
சாக்லேட் தினம் 2024: சாக்லேட் என்பது உலகம் முழுவதும் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய இனிப்புகளில் ஒன்றாகும். சாக்லேட் தினம் என்பது காதலர் வாரத்தின் மூன்றாவது நாளாகும். இந்த நாளில் காதல் ஜோடிகள் சாக்லேட் பரிமாறி அன்பை அன்பை வெளிபடுத்துகின்றனர். நம்முடைய கல்லூரி பருவத்தில் பல பெண்கள் சாக்லேட்டும் கையுமாக சுற்றுவதை பார்த்திருக்கலாம். அது பெரும்பாலும் அவர்கள் வாங்கி இருக்க வாய்ப்பில்லை. தோழனோ அல்லது காதலனோ அன்பின் வெளிப்பாடாகக் கொடுத்திருக்க வாய்ப்புண்டு.
இதைத் தெரிந்து கொண்ட சாக்லேட் நிறுவனங்கள் காதலர்கள் பரிமாறிக் கொள்வதற்காகவே இதய வடிவிலான சாக்லேட்களை தயாரித்தனர். 70 ரூபாயில் ஆரம்பித்து 150 முதல் 300 ரூபாய் வரை விலைக்கு ஏற்ப இதய வடிவம் பொறித்த சாக்லேட்களை விற்றனர். உங்கள் அன்புக்குரியவருடன் சாக்லேட் தினத்தைக் கொண்டாட தயாராகி வந்தால் இந்த தினத்தின் முழு விவரத்தைத் தெரிந்து கொண்டு சாக்லேட் வாங்குங்கள்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9ஆம் தேதி சாக்லேட் தினம் காதலர்களால் கொண்டாடப்படுகிறது. இனிப்பான இந்த தினம் 2024ல் வெள்ளிக்கிழமை வருகிறது.
சாக்லேட் ஒரு கசப்பான கோகோ பீனில் இருந்து கிடைக்கிறது என்றாலும் அது தயாரிக்கப்பட்ட பிறகு மக்களின் இதயங்களில் இடம்பிடித்து விடுகிறது. சாக்லேட் தினத்தன்று காதலன் தனது காதலிக்கு விருப்பமான சாக்லேட்டை வாங்கி அவளுக்கு அன்பின் வெளிப்பாடாகப் பரிசளிக்கிறான்.
மேலும் படிங்க மனம் கவர்ந்த காதலிக்கு இதயப்பூர்வமான ப்ரோபோஸல்
சாக்லேட் ஒரு நபரின் மனநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது மற்றும் அவர்களை மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் ஆக்குகிறது. சாக்லேட் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் முதன்மை மூலப்பொருளான கோகோ பீன்ஸ் அவற்றின் ஆரோக்கிய நலன்களுக்காகவும் அறியப்படுகிறது.
சாக்லேட் மீதான காதலுக்கு வயது அல்லது பாலினம் தேவையில்லை. இது அனைத்து தலைமுறையினராலும் விரும்பப்பட்டு ரசிக்கப்படும் இனிப்பாகும். சாக்லேட் தினத்தைக் கொண்டாடுவதற்கான சிறந்த வழி நம் அன்புக்குரியவர்களுடன் ஒரு சாக்லேட்டைப் பகிர்வதாகும். சாக்லேட்டை பரிசாக வழங்குவதும், அவர்கள் மீதான பாசத்தையும் அன்பையும் நிரூபிக்கும் ஒரு நாளாக சாக்லேட் தினம் அமைகிறது. இது நிச்சயமாக ஒருவரை நாள் முழுவதும் பிரகாசமாகவும் சிறப்பாகவும் வைத்திருக்கும்.
மேலும் படிங்க காதலியிடம் எப்படி ப்ரோபோஸ் பண்ணலாம்?
பெண்களுக்குப் பொதுவாகவே சாக்லேட் பிடிக்கும். அதனால் நீங்கள் சாக்லேட் வழங்குவதில் குழப்பம் வேண்டாம். ஆனால் வழக்கமான சாக்லேட்களை வழங்குவதற்கு பதிலாக வீட்டில் தயாரித்த சாக்லேட் அல்லது சாக்லேட் உற்பத்திக்குப் பெயர் பெற்ற ஊட்டி அல்லது பெல்ஜியம், சுவிட்ஸர்லாந்து, ஈகுவேடார், இத்தாலி, இலங்கை போன்ற நாடுகளில் தயாரிக்கப்படும் சுவைமிக்க சாக்லேட்டை ஆன்லைனின் ஆர்டர் செய்து அவற்றை காதலிக்கு கொடுத்து அன்பை வெளிப்படுத்தலாம்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com