herzindagi
image

குழந்தைகள் தின சிறப்பு பேச்சு தமிழில் ; மாணவர்களே உங்களுக்காக

நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்படும் குழந்தைகள் தினத்தையொட்டி ஒவ்வொரு பள்ளியிலும் பேச்சு போட்டி நடத்தப்படும். குழந்தைகள் தினம், ஜவஹர்லால் நேரு குறித்து பேசுவதற்கான முக்கிய விஷயங்கள் இந்த கட்டுரையில் பகிரப்பட்டுள்ளது.
Editorial
Updated:- 2024-11-12, 18:03 IST

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமரான நேரு குழந்தைகள் மீது மிகுந்த பாசம் கொண்டவராகவும் அவர்களை இந்தியாவின் எதிர்காலமாகவும் நம்பினார். தன்னுடைய பிறந்தநாளை குழந்தைகள் மீது அன்பு செலுத்தும் நாளாகவும் அவர்களுக்கான கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை உரிமைகளை பெற்றுத் தரும் நாளாகவும் கொண்டாட நேரு விரும்பினார். குழந்தைகள் தினம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் விமரிசையாக கொண்டாடப்படும். குறிப்பாக ஜவஹர்லால் நேருவும் குழந்தைகளும், குழந்தைகளின் உரிமைகள் ஆகிய தலைப்புகளில் பேச்சு போட்டி நடத்தப்படும். இந்த நிகழ்வில் வழங்கப்படும் நேரத்திற்குள் என்ன பேச வேண்டும் எதை பேச வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

குழந்தை தின பேச்சு (1 நிமிடம்)

அனைவருக்கும் காலை வணக்கம், இன்று நாம் கொண்டாடும் குழந்தைகள் தினம் குழந்தைகளை கெளரவிப்பதற்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும். ஜவஹர்லால் நேருவின் நினைவாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. நேரு குழந்தைகளை ஆழகமாக காதலித்தவர். குழந்தைகளே இந்தியாவின் எதிர்காலம் என நம்பினார். குழந்தைகள் மிகப்பெரிய கனவு காணவும், அன்பாகவும் இருக்க அறிவுறுத்தினார். இந்த நாளில் ஒவ்வொரு குழந்தையும் தனித்துவம் கொண்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதே போல அன்பு செலுத்தி மரியாதை அளித்து சமூகத்தில் வளர்வதற்கு உதவிடுவது முக்கியம். ஒவ்வொரு குழந்தையும் செழித்திடும் வகையில் உலகினை உருவாக்கிவிடுவோம் என்ற உறுதியை ஏற்போம். அனைவருக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள். நன்றி!

childrens day speech

குழந்தைகள் தின பேச்சு போட்டி (2 நிமிடம்)

அனைவருக்கும் காலை வணக்கம். குழந்தைகள் தினத்தை நாம் மிகுந்த மகிழ்ச்சியோடும், அன்போடும் கொண்டாடி வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் நினைவாக குழந்தைகள் தினத்தை கொண்டாடுகிறோம். நேரு குழந்தைகளை எதிர்கால இந்தியாவின் அடித்தளமாக கருதினார். அவர் எப்போதும் குழந்தைகள் என்ற மொட்டுக்களை மலர வைக்க கவனிப்பும், பாதுகாப்பான சுற்றுச்சுழலை கொடுக்க வேண்டும் எனக் கூறுவார். ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான சூழலை வழங்கினால் அவர்கள் மிகப்பெரிய கனவு கண்டு திறன் வாய்ந்தவர்களாகவும், சக்திபடைத்த தனி நபர்களாகவும் உருவாகுவார்கள் என்று நம்பினார். எனது அருமை நண்பர்களே நீங்கள் எப்போதும் சிறப்பானவர்கள் மற்றும் தகுதியுடைவர்கள் என நம்ப வேண்டும். உலகம் முழுவதும் உங்களுக்கு வாய்ப்புகள் நிறைந்திருக்கின்றன. குழந்தைகள் தினத்தை மகிழ்ச்சியுடனும் நன்றி உணர்வுடனும் கொண்டாடுவோம். மேலும் ஒவ்வொரு குழந்தையும் எதிர்காலத்தில் முழு திறனை அடைந்திட ஒன்றாக பாடுபடுவோம். அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள். நன்றி.

மேலும் படிங்க ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுவதற்கு காரணம் என்ன ?

குழந்தைகள் தின பேச்சின் முக்கிய குறிப்புகள்

  • குழந்தைகள் மீது நேரு காட்டிய அன்பை பிரதிபலிக்கும் விதமாக நேரு மாமா என்றழைக்கவும்.
  • அவர் குழந்தைகளின் கல்வி மற்றும் நலனுக்காக செயல்படுத்திய திட்டங்களை குறிப்பிடவும்.
  • வளமான தேசத்திற்கு குழந்தைகளே அடித்தளம் என நேரு குறிப்பிடுவதற்கு காரணம் என்ன என்பதை தெளிவாக விளக்கவும்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com