உதிரக்கசிவு என்பது இரண்டு மாதவிடாய் காலத்திற்கு இடையே ஏற்படும் உதிரப்போக்கு ஆகும். (அதாவது 15வது நாள், 21வது நாள் போன்ற இடைப்பட்ட நாட்களில் ஏற்படும்). அதிகப்படியான பெண்கள் இந்த பிரச்சனைக்கு ஆளாகிக் கொண்டு இருக்கின்றனர். இதை எப்படி சரி செய்வது மற்றும் எப்போது மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது என்பதை பற்றி பார்போம்
சண்டிகரில் இருக்கும் க்ளௌடினைன் மருத்துவ குழுவின் துணை இயக்குநர், மகப்பேறு மருத்துவர் டாக்டர் ரிதம்பரா பல்லாவிடம் இந்த பிரச்சனைக்கு காரணம் மற்றும் தீர்வை கேட்டு தெரிந்து கொண்டோம்.
ஒழுங்கற்ற உதிரப்போக்கு எதனால் ஏற்படுகிறது?
பெரும்பாலும், மகப்பேறு மருத்துவர்கள் கொடுக்கும் கருத்தடை மாத்திரைகள் குறைந்த வீரியம் கொண்டதாக இருக்கும். நம் உடலுக்கு அதிக வீரியம் கொண்ட மாத்திரை தேவைப்படும் பட்சத்தில், சீரற்ற உதிரப்போக்கு ஏற்படும். இந்த சமயத்தில், நிச்சயம் மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
இப்பிரச்சனைக்கு இன்னொரு காரணம் என்னவென்றால் கருப்பைக்குள்ளும், கருப்பைக்கு வெளியே அல்லது யோனிக்குழாயில் தொற்று ஏற்பட்டு இருந்தால் இந்த பிரச்சனைகள் ஏற்படும். இச்சமயத்தில், உதிரப்போக்கு லோசாக இருக்கும். பாதிக்கப்பட்ட பெண்கள் நிச்சயம் உடனடியாக ஒரு மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும் என்று டாக்டர் பல்லா கூறுகிறார்.
ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலோ, கருத்தடை மாத்திரை சாப்பிட்டு வந்தாலோ, அதிகபடியான உதிரப்போக்கிற்கான மாத்திரை சாப்பிட்டு வந்தாலோ, நீர்க்கட்டிகள் இருந்தாலோ இவ்வகையான பிரச்சனைகள் உருவாகும். சமீபத்தில் நீங்கள் காப்பர் டி அல்லது வேறு ஹார்மோன் கருப்பை சாதனம் கருப்பைக்குள் பொருத்தி இருந்தாலும் இந்த பிரச்சனைகள் நிகழும்.
இதுவும் உதவலாம்:மாதவிடாய் வலியைப் போக்கும் ஆயுர்வேத ரெசிபி!!
ஒழுங்கற்ற மாதவிடாயின் அறிகுறிகள் என்னென்ன?
இரு மாதவிடாய் சுழற்சி காலத்திற்கு இடையே உதிரப்போக்கு இருப்பது மட்டும் அல்லாமல், லேசான உதிரப்போக்கு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். ஒரு வேளை உங்களுக்கு அதிகமான வயிற்று பிடிப்பு, முதுகு வலி போன்ற பிரச்சனைகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். திட்டு திட்டான உதிரப்போக்கு பிரச்சனைக்கு பலரும் ஆளாகின்றனர்.
இடைப்பட்ட உதிரப்போக்கு எப்போது நிற்கும்? உதிரப் போக்கின் காரணத்தை பொருத்து வேறுபடும். இடைப்பட்ட காலத்தில் ஐபில் எடுத்து கொண்டால், இப்பிரச்சனை சில நாட்கள் நீடிக்கும். இதில் உதிரப்போக்கு லேசாக இருக்கும்.
இப்பிரச்சனையை எண்ணி எப்போது கவலை பட வேண்டும்? உதிரப்போக்கு ஏழு நாட்களுக்கு மேல் இருந்தால் அல்லது அடிக்கடி உதிரப்போக்கு இருந்து கொண்டே இருந்தால், மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டிய சூழலில் இருக்கிறீர்கள், நீங்கள் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
ஒழுங்கற்ற உதிரப்போக்கு என்பது கர்ப்பத்திற்கான அறிகுறியா?
இல்லை, மாறாக கருத்தடை முறை சரியாக இல்லை என்பதற்கான அறிகுறி. தேவையற்ற கர்ப்பத்தைத் தடுக்கும் ஹார்மோன் மாத்திரைகள் மற்றும் IUD சரியாக செயல்படவில்லை என்பதையும் குறிக்கிறது என்று டாக்டர் பல்லா கூறுகிறார். உங்கள் கருத்தடை முறை உண்மையில் செயல்படுகிறதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் அறிகுறிகளில் ஒன்று தான் அடிக்கடி ஏற்படும் உதிரக்கசிவு.
இதுவும் உதவலாம்: மாதவிடாய் வலியை எளிதில் போக்க என்ன குடிக்கலாம்?
இந்த பிரச்சனைக்கு என்ன சிகிச்சைகள் உள்ளன?
சில சமயம் கருத்தடை மாத்திரைகள் அளவு குறைவாக இருந்தாலும் டாக்டர் அதை அதிகரிப்பார். தொற்று என்றால் சில பரிசோதனைகள் செய்ய சொல்வார்கள்.ட்ரான்ஸ் வஜைனல் பரிசோதனை, பெல்விக் பரிசோதனை அல்லது பாப் ஸ்மியர் பரிசோதனை போன்ற ஒரு சில பரிசோதனை செய்து முடித்த பிறகு, அது எப்படிப்பட்ட தொற்று என்று தெரிந்து கொண்டு அதற்கேற்ற மருத்துகளை பரிந்துரைப்பார்கள்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation