போகி 2025 : தீய குணங்கள், பழக்கங்களை தீயிட்டு கொழுத்தும் கொண்டாட்டம்

பொங்கல் பண்டிகைக்கு முன்னோட்டமாக அமைந்திருக்கும் போகியை கொண்டாடுவது எப்படி ? போகி அன்று மாலை நேரத்தி செய்ய வேண்டிய வழிபாடு, போகி நாளில் எதை எரிக்க வேண்டும் உள்ளிட்ட தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
image

தமிழர் திருநாளான பொங்கலின் முன்னோட்டமாக போகி பண்டிகை ஜனவரி 13ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொதுவாக போகி என்றால் தேவையில்லாததை களைந்து தேவையானதை கை(யில்) கொள்வது. அதாவது பழையன கழிதலும், புதியன புகுதலும் பண்டிகை நாளே போகி. இந்த கொண்டாட்டத்தின் பின்னணியில் வரலாற்று கதைகளும் உள்ளன. அன்றைய காலக்கட்டத்தில் மக்களின் வாழ்க்கை முறை காரணமாக போகி கொண்டாட்டம் வேறு விதமாக இருந்தது.

bhogi 2025

போகி கொண்டாட்டம்

அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஆரம்பித்து காலை 5 மணிக்குள் வீட்டில் தேவையில்லாத பழைய பொருட்களை கழித்து எரித்து விடுவது நல்லது. சூரிய உதயத்திற்கு பிறகு போகி நாளில் பொருட்களை நாம் எரிக்க கூடாது. மூங்கில் மரத்தால் செய்யப்பட்ட பழைய கூடை, முறம், மரச்சாமான் பொருட்கள், வைக்கோல், பயனில்லாத துணி, கிழந்த சாக்கு மூட்டை, துடைப்பம் ஆகியவற்றை எரிப்பார்கள்.

போகி நாளில் எரிக்க வேண்டியவை

பழைய பொருட்களை மட்டுமல்ல போகி அன்று நம்மிடம் உள்ள தீய பழக்கங்கள், மனதில் தேவையின்றி தேக்கி வைத்துள்ள குப்பைகள், துர்குணங்களை எரிக்கவும். அதாவது நம்மை பாதிக்கும் கோபம், பகைமை, வஞ்சனை, பொறாமை ஆகிய குணங்களை எரித்துவிடுங்கள். நல்ல விஷயங்களை மட்டுமே செய்ய வேண்டும் என்ற உத்வேகத்துடன் பயணியுங்கள்.

போகி வழிபாடு

போகி அன்று மாலை நேரத்தில் வீட்டில் வழிபாடு செய்யும் வழக்கத்தை நம் முன்னோர்காள் சொல்லி தந்துள்ளனர். முதலில் வீட்டு வாசலில் கூரைப்பூ வைக்கவும். பொங்கல் பண்டிகைக்கு வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்து வெள்ளை அடித்து பழையதை கழிப்பார்கள். எனவே போகி நாளில் மாலை 6 மணிக்கு மேல் 9 மணி வரை இந்த வழிபாடு செய்யலாம். வீட்டிற்கு இஷ்ட தெய்வம், குல தெய்வம், காக்கும் தெய்வத்தை அழைத்து வந்து நிரந்தரமாக தங்குவதற்கே இந்த வழிபாடு.

சாமி சிலை அல்லது படத்தின் முன்பாக வாழை இலை போட்டு வெள்ளை சாதம் படைக்கவும். இதில் உப்பு இருக்க கூடாது. இதன் அருகே துள்ளு மாவு வையுங்கள். அடுத்ததாக சாதத்தின் நடுவே குழியிட்டு தயிர் ஊற்றுங்கள். இப்போது ஒரு வாழைப்பழத்தை மூன்று பகுதியாக வெட்டி சாதத்தில் ஒரு வாழைப்பழ துண்டு, ஒரு துண்டு அச்சு வெல்லம், ஒரு பழ துண்டு, ஒரு துண்டு அச்சு வெல்லம், ஒரு பழ துண்டு, ஒரு துண்டு அச்சு வெல்லம் என அடுக்குங்கள். இப்போது சாமியிடம் மனதளவில் உங்களுடைய குடும்பத்தை பாதுகாக்குமாறு வேண்டவும்.

மேலும் படிங்கBhogi 2024 : போகி கொண்டாட்டத்தில் எதை எரிக்கலாம் ? எதை எரிக்க கூடாது ?

போகி வரலாறு

போகி பண்டிகை மழை கடவுள் என்றழைக்கப்படும் இந்திர பகவானுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது. இந்திர பகவானை வேண்டினால் நிலத்தில் விவசாயத்திற்கு தேவையான மழை பொழிந்து செல்வ செழிப்பு உண்டாகும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை. இதன் காரணமாகவே போகி கொண்டாட்டம் ஆரம்பித்ததாக வரலாற்று தகவல்கள் கிடைக்கின்றன.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP