Bhogi 2024 : போகி கொண்டாட்டத்தில் எதை எரிக்கலாம் ? எதை எரிக்க கூடாது ?

போகி பண்டிகை எதற்காக கொண்டாடுகிறோம். பண்டிகையின் போது எதை எரிக்கலாம் எதை எரிக்க கூடாது என இங்கே பகிர்ந்துள்ளோம்

Bhogi Rituals

பொங்கல் கொண்டாட்டத்தின் முன்னோட்டமாகப் போகி பண்டிகையைக் குறிப்பிடலாம். போகி பண்டிகை அன்று என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என பார்க்கலாம். போகி என்று சொன்னாலே தேவையில்லாததை களையனும் தேவையானதை கைக்கொள்ளனும் அது தான் போகி. பழையன கழிதலும் புதியன புகுதலும் போகி என்று சொல்லலாம்.

போகி அன்று பழையதை கழிக்க வேண்டும் என்பதற்காக வீட்டில் இருக்கும் தேவையில்லாத பொருட்களை வாசலில் போட்டு அதை எரித்து அதனால் ஏற்படும் தூசு, மாசு வெளியாகி நாம் இந்த உலகில் மீண்டும் கெட்டதையே செய்கிறோம். அதனால் போகி எப்படி கொண்டாட வேண்டும் என தெரிந்துகொள்வது அவசியம்.

போகி கொண்டாட்டம்

அந்தக் காலத்தில் மக்களின் வாழ்க்கை முறையும் வேறு போகி கொண்டாடிய முறையும் வேறு. அப்போதெல்லாம் போகி அன்று பழைய முறம், உடைந்து போன மரக்கூடை, கிழிந்து பயன்படுத்தவே முடியாத நிலையில் இருக்கும் உடைகள், கோணிப்பை, துடைப்பம் ஆகியவற்றை எரித்தனர். ஆனால் நாம் தற்போது எரிக்கும் பொருட்கள் முற்றிலும் வேறு. டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரித்துக் கொண்டிருக்கிறோம்.

30 - 40 ஆண்டுகளுக்கு முன்பாக காற்று மாசு ஏற்படவில்லை. ஆனால் போகியை கொண்டாடியே தீர வேண்டும் என்பதற்காகத் தற்போது பேப்பரை கிழித்து அதைக் குப்பையாக மாற்றி அதில் தேவையில்லாத பொருட்களைப் போட்டு எரிக்கிறோம். இந்த புகையினால் தான் மாசு உண்டாகிறது. போகி கொண்டாடுவதற்கு குறிப்பிட்ட நேரம் இருக்கிறது.

மேலும் படிங்கMakar Sankranti 2024 : மகர சங்கராத்தியின் முக்கியத்துவம் ! அதன் முழு பின்னணி

இதற்கென ஒரு நேரம் இருக்கிறது. பிரம்ம முகூர்த்தத்தில் தொடங்கி காலை 5.30 மணிக்குள் பழைய பொருட்களை எரித்துக் கொள்ளலாம். சூரிய உதயத்திற்கு பிறகு பொருட்களை எரிக்க கூடாது.

அனைவரிடமும் எதோ ஒரு தீய குணம் இருக்கிறது. நீங்கள் அதிக கோபம் கொண்ட நபர் என்றால் எனது கோபத்தை எரிக்க போகிறேன் என நினைக்கலாம். பகைமை, பொறாமை என நம்மிடம் எரிப்பதற்கு தேவையில்லாத பல விஷயங்கள் உள்ளன. நெருப்பின் முன்பாக நின்று இதையெல்லாம் எரிக்கப் போகிறேன் என முடிவு செய்து கொள்ளுங்கள். இதைப் போகி அன்று நாம் கண்டிப்பாக செய்ய வேண்டும். வீட்டைக் காக்க கூடிய தெய்வதை வீட்டுக்கு அழைக்கும் நாளாகும் போகி இருக்கிறது.

அந்தத் தெய்வத்திற்கு நாம் படையல் போட்டு வரவேற்க வேண்டும். வாழை இலையில் வெள்ளை சாதத்தை வட்டமாக வைத்து அதனுடன் வெத்தலை பாக்கு, துள்ளு மாவு இருக்க வேண்டும்

வெள்ளை சாதத்தில் சிறிய குழு தோண்டி தயிர் ஊற்ற வேண்டும். அதன் பிறகு உங்கள் குல தெய்வம் வீட்டில் நிரந்தரமாக இருந்து வேண்டுதல் செய்யுங்கள்.

தெய்வத்தை வீட்டிலேயே தங்க வேண்டும். வழிபாடு செய்தபிறகு அந்த சாதத்தை பிரசாதமாக எடுத்து சாப்பிடுங்கள். சரியாக மாலை 6 மணிக்கு இதைச் செய்யலாம். ஏனெனில் போகி என்பது இரவு நேர வழிபாடாகும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP