herzindagi
best part time work

கல்லூரி மாணவிகளுக்கான ‘பார்ட் டைம் வேலை’ எளிதாக சம்பாதிக்கலாம்

போஸ்டர்களை பார்த்து பகுதி நேர வேலையில் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க முடியும் என ஏமாற வேண்டாம். நம்பத்தகுந்த வேலைகளில் அதிகபட்சம் 5 முதல் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்.
Editorial
Updated:- 2024-04-22, 07:29 IST

விற்கும் விலைவாசிக்கு எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என்ற பட்சத்தில் பகுதி நேர வேலை பார்த்து இதர செலவுகளை சமாளிக்கலாம் என்பதே பலரின் மனநிலையாக உள்ளது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக ஊடகங்களை பயன்படுத்த தெரிந்திருந்தால் மாதத்திற்கு குறைந்தபட்சம் 3 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியும். நீங்கள் படிக்கும் மாணவராக இருந்தாலும் 3 முதல் 4 மணி நேரம் பகுதி நேர வேலை செய்து அதிகபட்சம் 5 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும். அதற்கான வழிகளை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.

part time job

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்

இது மாணவர்களுக்கு கிடைக்கும் எளிய பகுதி நேர வேலைகளில் ஒன்றாகும். நீங்கள் ஆங்கிலத்தில் உயர்நிலைப் பள்ளி முடித்திருந்தால், அடிப்படை தகவல் தொடர்பு மற்றும் தட்டச்சு திறன், மைக்ரோசாப்ட்-ல் பணி செய்ய தெரிந்தால் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வேலை செய்யலாம். இதற்கு பல அதிகாரப்பூர்வ தளங்கள் உள்ளன.

டெலிமார்க்கெட்டிங்

வேலை செய்து பணம் சம்பாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு மற்றொரு சிறந்த வழி என்றால் அது பகுதி நேர வேலையான டெலி மார்கெட்டிங் தான். வாடிக்கையாளர்களின் அழைப்புகளை ஏற்று அவர்களின் தேவையை பூர்த்தி செய்வது டெலிமார்க்கெட்டிங் வேலையின் ஒரு பகுதியாகும்.

சமூக ஊடக மேலாளர்

தொழில் செய்யும் பலருக்கு சமூக ஊடகத்தில் அதை சரியாக புரோமோஷன் செய்ய போதிய நேரம் கிடைப்பதில்லை. அவர்கள் செய்யும் தொழிலுக்கு சமூக ஊடகங்கள் வழியாக உதவிட நீங்கள் சமூக ஊடக மேலாளராக பணி செய்யலாம்.

எழுத்தாளர்

உங்களுக்கு நன்கு எழுத தெரியும் என்றால் நிறுவனங்களுக்கு பகுதி நேர எழுத்தாளராக நீங்கள் பணி செய்து நல்ல வருமானம் ஈட்டலாம்.

வீடியோ எடிட்டர்

வீடியோ எடிட்டர் என்பது மாணவர்களுக்கு ஒரு நல்ல பகுதி நேர வேலையாகும். கொடுக்கப்படும் வீடியோவில் மாற்றங்கள், இசை, ஒலி விளைவுகள் மற்றும் விஷுவல் எஃபெக்ட்கள் சேர்த்து அதை தரமான வீடியோவாக மாற்றுவதற்கு நல்ல தொகை கிடைக்கும்.

டியூஷன் டீச்சர்

நீங்கள் கணக்கு பாடத்தில் தேர்ந்தவர் என்றால் 10,12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கணக்கு பாடம் எடுக்கலாம். மாதத்திற்கு சனி, ஞாயிறுகளில் மட்டும் கூட வகுப்புகள் நடத்தி நீங்கள் வருமானம் ஈட்டலாம்.

ஃபோட்டோஷாப்

ஃபோட்டோஷாப், அடோப் போன்றவற்றை நீங்கள் நன்கு அறிந்திருந்தால், கிராஃபிக் டிசைனராக பகுதி நேர வேலை செய்யலாம்.

மொழிபெயர்ப்பாளர்

உங்களுக்கு ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் எழுத படிக்க தெரிந்திருந்தால் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றி மாதம் 10 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

நிகழ்ச்சி மேலாளர்

பகுதி நேர பணியாளராக நீங்கள் ஒரு நிகழ்வு மேலாண்மை நிறுவனத்தில் பணியாற்றலாம். வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப நிகழ்ச்சிகளை திட்டமிட்டு, ஒருங்கிணைத்து அதை வெற்றிகரமாக நடத்தி கொடுத்தால் நல்ல தொகை கிடைக்கும்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com