ஆலியா பட் கர்ப்பமாக இருந்து வந்த நிலையில் இன்று மதியம் 12:05 மணிக்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆலியா, தனது கணவரும் நடிகருமான ரன்பீர் கபூருடன் மும்பையில் உள்ள HN ரிலையன்ஸ் மருத்துவமனைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே இந்த நல்ல செய்தி வந்துள்ளது. ஆலியாவின் தாயாரும் அவருடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆலியா பட்டுக்கும், ரன்பீர் கபூருக்கும் இந்த வருடம் ஏப்ரல் மாதம் திருமணம் நடந்து முடிந்தது. பிறகு தங்களுக்கு குழந்தை பிறக்க இருப்பதாக சோனோகிராபி புகைப்படங்களை திடீரென்று வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
அக்டோபர் மாதம், கபூர் குடும்பம் ஆலியா அவர்களுக்கு வளைகாப்பு நடத்தியது. இந்த மாபெரும் நிகழ்வில் பல முக்கிய பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். இந்த வளைகாப்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
சமீபத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த பிரம்மாஸ்திரா திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், நாகார்ஜுனா போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு பிறகு ஹாலிவுட்டில் கால் பதிக்கும் ஆலியா பட், ‘ஹார்ட் ஆப் ஸ்டோன்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும் ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ என்ற இந்தி திரைப்படத்திலும் ரன்வீர் சிங்குடன் இணைந்து நடிக்க உள்ளார்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com