குழந்தை நல்லா படிக்கணுமா ? இந்த 7 வழிகளில் பெற்றோர்கள் உதவுணும்

குழந்தை நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் பெற்றோரிடத்தில் இருந்தால் போதாது. குழந்தையின் கல்வியில் அக்கறை காட்டி ஆதரவும், ஊக்கமும் அளிப்பது அவசியம். குழந்தையின் கல்விக்கு பெற்றோர் உதவுவதற்கு முக்கியமான 7 வழிகள் இங்கு பகிரப்பட்டுள்ளது.
image

ஒவ்வொரு குழந்தையின் எதிர்காலத்திற்கும் கல்வி மிக மிக அவசியம். கல்வி என்பது அறிவு சார்ந்த விஷயம் மட்டுமல்ல சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ்வதற்கான ஆயுதமும் கூட. குழந்தையை பள்ளியில் சேர்த்து புத்தகங்களை வாங்கி கொடுப்பதோடு பெற்றோரின் கடமை முடிந்துவிடாது. குழந்தையின் எதிர்காலம் செழித்திட அவர்கள் கல்வி கற்பதற்கு பல்வேறு வழிகளில் உதவ வேண்டும். வீட்டில் தாய், தந்தை என இருவரும் வேலைக்கு சென்றுவிட்டால் பிள்ளையின் படிப்பை யார் கவனிப்பது என்ற கேள்வி எழுகிறது. குழந்தை கல்வி பயில்வதில் பெற்றோரும் அக்கரை காட்டி ஆதரவும், ஊக்கமும் அளிக்க வேண்டும். குழந்தையின் கல்விக்கு பெற்றோர் உதவிட முக்கியமான 7 வழிகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

child education

ஆசிரியர்களுடன் உரையாடல்

குழந்தையின் கல்வி குறித்து கவலைப்படும் பெற்றோர் ஆசிரியர்களுடன் உரையாடுவது அவசியம். இப்படி உரையாடுவதன் மூலமாக கல்வி பயில்வதில் குழந்தையின் முன்னேற்றம், எதிர்கொள்ளும் சவால்கள், தேவைகளை தெரிந்து கொள்ள முடியும். ஆசிரியோடு சேர்ந்து குழந்தையின் கல்விக்கு தேவையானதை பூர்த்தி செய்யுங்கள்.

இலக்கு நிர்ணயம்

குழந்தையின் கல்வி நலனுக்கு இலக்குகளை நிர்ணயிக்கவும். உதாரணமாக உங்கள் குழந்தை 50 மதிப்பெண் மட்டுமே எடுப்பதாக இருந்தால் அடுத்தமுறை 70 மதிப்பெண் அதற்கு அடுத்தமுறை 85 மதிப்பெண் என இலக்குகளை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கவும். அடையக் கூடிய இலக்குளை நிர்ணயித்தால் மட்டுமே குழந்தையை கல்வியில் சரியான திசையை நோக்கி பயணிக்க வைக்க முடியும். குழந்தையின் கல்வியில் பெற்றோருக்கே முழு பொறுப்பு. இலக்குகளை நிர்ணயித்து பயணித்தால் வெற்றி அடைய முடியும்.

வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும்

மொழித் திறன், சிந்தனை, புரிதல் ஆகியற்றுக்கு வாசிப்பு பழக்கத்தை குழந்தையிடம் ஊக்குவிக்கவும். பாடங்களில் நல்ல மதிப்பெண் எடுப்பதற்கான அடித்தளத்தை வாசிப்பு பழக்கம் கொடுக்கும். வாசிப்பு பழக்கம் பள்ளி, கல்லூரி பருவத்தோடு நின்றுவிடாது. வாழ்நாள் முழுவதும் பல விஷயங்களை கற்று கொள்வதற்கு வாசிப்பு பழக்கம் உதவும். குழந்தையுடன் அமர்ந்து நீங்களும் படிக்கலாம்.

படிப்பதற்கு அட்டவணை

வீட்டு பாடம் முடிக்கவும், படிக்கவும் ஒரு அட்டவணையை உருவாக்கி குழந்தையிடம் கொடுத்துவிடுங்கள். அட்டவணை போட்டு படிப்பது குழந்தைக்கு ஒரு விதமான பொறுப்பு போல் தெரியும். நேர மேலாண்மை திறனும் அவர்களிடத்தில் வளரும். தேவையற்ற பதட்டத்தையும் தடுக்கலாம். மேலும் அட்டவணையின் படி குழந்தைகள் வீட்டு பாடம் முடித்தார்களா ? தேர்வுக்கு படித்தார்களா ? என்பதையும் உறுதி செய்யவும்,

எக்ஸ்ட்ரா கரிகுலர்

வகுப்பு நேரம், படிக்கும் நேரம் தவிர விளையாட்டு, இசை, கலை போன்ற எக்ஸ்ட்ரா கரிகுலர் செயல்பாடுகளில் குழந்தைகளை ஈடுபடுத்தவும். இது அவர்களுக்கு புது புது விஷயங்களை கற்றுக் கொடுக்கும். குழந்தைகளின் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

கற்பதற்கு ஏற்ற சூழல்

வீட்டில் கல்வி கற்பதற்கு ஏதுவான சூழலை குழந்தைக்கு ஏற்படுத்தி கொடுப்பது பெற்றோரின் கடமையாகும். அமைதியான சூழலில் குழந்தைகளால் கவனம் செலுத்தி படிக்க முடியும். இது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். கவனம் சிதறாமல் இருக்க குழந்தைக்கு ஏதுவான சூழலை உருவாக்கி கொடுக்கவும். படிக்கும் இடத்தில் டிவி, பாட்டு சத்தம் கேட்காமல் இருக்க வேண்டும்.

கற்றலில் தொழில்நுட்பம்

இந்த டிஜிட்டல் யுகத்தில் கல்வியிலும் தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஆன்லைன் கல்வி முறையையும் குழந்தைக்கு கற்பிக்கவும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP