மீண்டும் இணையும் கமல் - லோகேஷ் கூட்டணி; விக்ரம் 2 சூப்பர் அப்டேட் கொடுத்த இயக்குனர்

உலக நாயகன் கமல்ஹாசனை விக்ரம் 2 படத்திற்காக மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்ற அப்டேட் வெளியாகியுள்ளது, அது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
image

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் ஒருங்கிணைந்துள்ளதாக சமீபத்தில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களின் ஒருவர் என்று கூறலாம். விக்ரம், லியோ, கைதி போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஏற்கனவே படங்கள் உருவாக்கியுள்ள இவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இதுவரை இயக்கியுள்ள அனைத்து படங்களும் வெற்றி பெற்றதன் மூலம் அவர் தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக வரவேற்பை பெற்றுள்ளார். அந்த வரிசையில் உலக நாயகன் கமல்ஹாசனை விக்ரம் 2 படத்திற்காக மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்ற அப்டேட் வெளியாகியுள்ளது, அது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ரஜினியுடன் லோகேஷ்:


லோகேஷ் கனகராஜ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத் நகரங்களில் வேகமாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு டிசம்பர் 12 ஆம் தேதி கூலி திரைபடத்தில் இருந்து 'சிக்கிட்டு வைப்' என்ற பாடல் வெளியானது.

rajinikanth-in-coolie-1724766842

விக்ரம் 2 அப்டேட்:


லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு நேர்காணலில் உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து அடுத்த திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர் உலகநாயகன் கமலஹாசனை வைத்து இயக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்தது ஒரு மிகப்பெரிய வரம் என்றும், மீண்டும் அவருடன் பணியாற்றுவதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறினார். இதனால் இது விக்ரம் படத்தின் இரண்டாம் பாகமாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

விக்ரம்:


2022 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, மாயா கிருஷ்ணன், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக இந்த படத்தில் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்த கேமியோ பலரும் எதிர்பாராத அளவு ஹிட் அடித்தது. விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது விக்ரம் படத்தின் இரண்டாம் பாகம் வேலைகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் துவங்கியுள்ளார்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP