சிவ பிரகாஷ் இயக்கத்தில் விஜித் பச்சான் நடிப்பில் ஜூன் 5ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பேரன்பும் பெருங்கோபமும். மைம் கோபி, கீதா கைலாசம், அருள்தாஸ், தீபா ஷங்கர், சுபத்ரா ராபர்ட் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஹீரோயின் ஷாலி நிவேகாஸ் கேரளாவை சேர்ந்தவர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சாதி கொடுமை, ஆணவக் கொலை பற்றி பேரன்பும் பெருங்கோபமும் படம் பேசுகிறது. சமூகத்தில் பல ஆண்டுகளாக வேரூன்றி இருக்கும் பிரச்னைக்கு இப்படத்தில் தீர்வு சொல்லி உள்ளனரா ? வாருங்கள் பார்ப்போம்.
பேரன்பும் பெருங்கோபமும் கதைச் சுருக்கம்
அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் ஜிவித் பச்சான் குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்யப்படுகிறார். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன. குற்றம் செய்யாத ஜிவித் பச்சானின் பின்னணி, நோக்கமே இந்த பேரன்பும் பெருங்கோபமும்.
பேரன்பும் பெருங்கோபமும் விமர்சனம்
தேனி மாவட்டத்தில் சாதி கொடுமை தலைவிரித்தாடும் கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஜிவித் பச்சான் செவிலியராக பணியாற்றுகிறார். மருத்துவமனையில் நடக்கும் தவறுகளை பத்திரிகைக்கு கசிய விட்டு நிதீ கிடைக்க முயற்சிக்கிறார். இதற்கிடையில் குழந்தை கடத்தல் வழக்கில் அவரை கைது செய்கின்றனர். அங்கு அவர் மைம் கோபி, அருள்தாஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். இவற்றுக்கு சாதிய தீண்டாமை, ஆணவக் கொலை காரணங்களாக விளக்கப்படுகிறது. இதற்கு தீர்வு உள்ளதா ? இல்லையா ? என்ற கேள்வியை இயக்குநர் நம்மிடம் விட்டுச் செல்வது போல் படத்தை முடித்துள்ளனர்.
பேரன்பும் பெருங்கோபமும் படத்தின் பாஸிட்டிவ்ஸ்
- கிராமங்களில் நிலவும் சாதிய பிரச்னை, ஆணவக் கொலை பற்றி படம் எடுக்க நினைத்து தங்களால் முடிந்தவரை திரையில் காண்பித்துள்ளனர்.
- அறிமுக படத்தில் விஜித் பச்சான் யதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார். நடிகை ஷாலி நிவேகாஸ் அழகாலும், நடிப்பாலும் கவனம் ஈர்க்கிறார். இனி அடிக்கடி தமிழ் படங்களில் பார்க்கலாம்.
மேலும் படிங்கசென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் விமர்சனம் : 2 மணி நேரம் மூச்சு திணற திணற அடிக்கிறாங்க
பேரன்பும் பெருங்கோபமும் படத்தின் நெகட்டிவ்ஸ்
- அழுத்தமாக பேசப்பட வேண்டிய விஷயங்களை இயக்குநர் பட்டும் படாமல் கடத்திச் செல்கிறார். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
- 20 வருடங்களுக்கு பிறகு கொலையாளிகளை பழிதீர்க்கும் ஹீரோ அதை அப்போதே செய்திருக்கலாம் என்ற கேள்வி எழுகிறது.
- சாதி கட்டமைப்பை உடைக்க மூடர்களின் குழந்தையை மாற்றி வைப்பது தீர்வாகாது என்றால் குற்றவாளிகளை தண்டிபதன் நோக்கம் என்ன ?
- பவா செல்லத்துரையின் பின்னணி குரலில் கதை நகர்வதால் படத்தில் எந்த தாக்கமும் இல்லை.
பேரன்பும் பெருங்கோபமும் ரேட்டிங் - 2.25 / 5
நோக்கம் சிறப்பாக இருந்தாலும் அதற்கான தீர்வை சரியாக சொல்ல தவறியதால் எளிதில் கடந்து செல்லக்கூடிய படமாக பேரன்பும் பெருங்கோபமும் மாறிவிடுகிறது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation