தக் லைஃப் : தப்பிய கன்னடர்கள், சிக்கிய தமிழர்கள்; வச்சு செய்யும் நெட்டிசன்கள்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்திருகும் தக் லைஃப் திரைப்படம் நெட்டிசன்களால் கடுமையாக ட்ரால் செய்யப்படுகிறது. படத்தை பார்த்த பலரும் இந்தியன் 2 படமே பரவாயில்லை என பதிவிடுகின்றனர்.
image

நாயகன் என்ற மாபெரும் படைப்புக்கு பிறகு சுமார் 38 ஆண்டுகள் கழித்து மணிரத்னம் இயக்கத்தில் விண்வெளி நாயகன் கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, திரிஷா, ஜோஜூ ஜார்ஜ், நாசர் நடிப்பில் தக் லைஃப் திரைப்படம் வந்துள்ளது. படத்தின் ப்ரோமோஷனில் தேவையில்லாமல் மொழி சர்ச்சையை உருவாக்கி நீதிமன்றத்தை நாடிய பிறகும் கமல் மன்னிப்பு கேட்க தயங்கியதால் தக் லைஃப் ஒரு வாரம் கழித்தே கர்நாடகாவில் வெளியாகவுள்ளது. தமிழகத்தில் முதல் காட்சி காலை ஒன்பது மணிக்கு திரையிடப்பட்ட நிலையில் வெளிநாட்டில் முன்கூட்டியே படத்தை பார்த்த பலரும் நெகட்டிவ் விமர்சனங்கள் கொடுக்க தொடங்கினர். தமிழ் ரசிகர்களுக்கு இப்படம் நிச்சயம் பிடிக்கும் பாஸிட்டிவான விமர்சனங்களை சொல்வார்கள் என எதிர்பார்த்திருந்த கமல் ரசிகர்களுக்கு பேரிடி காத்திருந்தது.

தக் லைஃப் - கலாய்க்கும் நெட்டிசன்கள்

காலையில் தக் லைஃப் பற்றி வந்த முதல் பதிவில் ரவி மோகனும், துல்கர் சல்மானும் தப்பி விட்டதாக பதிவிட்டிருந்தனர். ஏனெனில் சிம்பு கதாபாத்திரத்தில் ரவி மோகன் நடிக்கவிருந்தார். அதே போல துல்கர் சல்மானும் மணிரத்னத்தை நம்பாமல் படத்தில் இருந்து நல்வாய்ப்பாக தப்பிவிட்டார் என பதிவிட்டுள்ளனர். தக் லைஃப் பார்த்த பலரும் இந்தியன் 2 படமே பரவாயில்லை என்று மீம்ஸ் பகிர்கின்றனர்.

திரிஷாவுக்கு என்ன ஆச்சு ?

ட்ரெய்லரில் ஏற்கெனவே திரிஷா கமல்ஹாசனின் துனைவியாக நடிப்பதாக காண்பித்திருந்தனர். படத்தை பார்த்த ரசிகர்கள் திரிஷா இப்படத்தில் நடிக்க ஏன் ஒப்புக்கொண்டார். தக் லைஃபில் அவருடைய கதாபாத்திரம் ஏனோ தானோ என எழுதப்பட்டு முக்கியத்துவம் இன்றி காணப்படுவதாக ரசிகர்கள் கூறுகின்றனர். எப்போதும் ஒரு படம் வெளியாகும் போது ரசிகர்கள் ஹீரோவின் மாஸான என்ட்ரி காட்சிகளை செல்போனில் படம்பிடித்து பகிர்வார்கள். படத்தின் Thug Life ஹேஷ்டேக்கில் பலரும் திரிஷாவின் கவர்ச்சி காட்சிகளை பகிர்ந்துள்ளனர். சிலருக்கு சுகர் பேபி, முத்து மழை பாடல்கள் முழுமையாக இடம்பெறவில்லை என்ற வருத்தம் வேறு.

மணிரத்னம், கமல்ஹாசன் சகாப்தம் முடிந்ததா ?

மணிரத்னம் தக் லைஃப் படத்தில் சொல்ல வருவது என்ன ? ஓடோடி ஊரெல்லாம் ப்ரோமோஷன் செய்த கமல்ஹாசன் படத்தின் சறுக்கல்களை கண்டறிய தவறியது ஏன் ? வெறும் காட்சி அமைப்பு, கலர் கிரேடிங், மேக்கிங்கிற்காக படம் பார்க்க முடியுமா ? வலுவற்ற திரைக்கதையால் மணிரத்னம் சொதப்பிவிட்டார் என ரசிகர்கள் கொந்தளிக்கின்ற்னர். இந்தியன் 2 தோல்வியில் இருந்து கமல்ஹாசன் மீண்டுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதைவிட மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

நல்ல வேலையாக கன்னடர்களும், கன்னட திரையரங்க உரிமையாளர்களும் தப்பிக் கொண்டதாக பதிவுகளை பார்க்க முடியுகிறது. உங்களுக்கு வந்தா ரத்தம் ? எங்களுக்கு மட்டும் தக்காளி சட்னியா ? கன்னட சகோதரர்ககேள. எங்களையும் சேர்த்து காப்பாற்றி இருக்கலாமே.

சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் அடுத்த படத்திற்காக மணிரத்னம் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாட்டிக்காதீங்க தலைவரே...

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP