Sankranthiki Vasthunam movie review: ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சங்கராந்திக்கு வஸ்துனாம்; நகைச்சுவையில் மூழ்கிப்போன ரசிகர்கள்

இந்த வருட பொங்கலுக்கு வெளியாகியுள்ள சங்கராந்திக்கு வஸ்துனாம் திரைப்படம் எப்படி இருக்கு என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
image

அணில் ரவிப்பொடி இயக்கத்தில் டகுபதி வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுதரி நடிப்பில் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள தெலுங்கு திரைப்படம் சங்கராந்திக்கு வஸ்துனாம். இந்த படத்தில் விடிவி கணேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விக்டரி வெங்கடேஷ் என்று தெலுங்கு சினிமாவில் அழைக்கப்படும் பிரபல நடிகர் வெங்கடேஷ் டகுபதி பேமிலி என்டேர்டைனர் படங்களுக்கு பெயர் பெற்றவர். கடந்த ஆண்டு வெளியான சைந்தவ், முதல் தெலுங்கு சினிமாவில் வெளியாகி வெற்றிபெற்றF2, F3, திரைப்படங்கள் வரை அவர் நடித்த எல்லாமே குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்கள் தான். அந்த வரிசையில் இந்த வருட பொங்கலுக்கு வெளியாகியுள்ள சங்கராந்திக்கு வஸ்துனாம் திரைப்படம் எப்படி இருக்கு என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பல திரைப்படங்களும் பல மொழிகளில் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி உள்ளது. தமிழ் சினிமாவில் ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை, விஷால் நடிப்பில் மதகஜ ராஜா, மட்ராஸ்காரன் உள்ளிட்ட பல படங்கள் வெளியாகியுள்ளது. மறுபுறம் தெலுங்கு சினிமாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர், பாலகிருஷ்ணா நடிப்பில் டாக்கு மகாராஜா மற்றும் வெங்கடேஷ் நடிப்பில் சங்கராந்திக்கு வஸ்துனாம் திரைப்படம் வெளியாகியுள்ளது. அந்த வரிசையில் சங்கராந்திக்கு வஸ்துனாம் திரைப்படம் குறித்து இங்கு பார்க்கலாம்.

239809919_venkatesh-4-1

இந்த திரைப்படம் கடத்தல் நாடகம் சம்பந்தப்பட்ட ஒரு பக்கா காமெடி திரைப்படம். இது ஒரு வழக்கமான டெம்ப்ளேட் என்றாலும் இயக்குனர் அணில் ரவிப்பொடி இதை வித்தியாசமான முறையில் அணுகியுள்ளார். நேர்மையான போலீஸ் அதிகாரி ஒய். டி. ராஜுவாக நடித்துள்ள வெங்கடேஷ் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். பிறகு ஒரு கடத்தல் விஷயத்தில் ஈடுபட தெலுங்கானா முதலமைச்சரால் வேலைக்கு அழைக்கப்படுகிறார். ராஜுவின் மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கோபக்கார மகன் புல்லி ராஜுவின் நடிப்பு இந்த திரைப்படத்தில் நகைச்சுவைக்கு ஒரு முக்கிய ப்ளஸ் ஆக அமைகிறது. கதாநாயகன் ராஜுவின் முன்னாள் காதலியாக மீனாட்சி சவுதரி நடித்துள்ளார்.

117223121

காட்சி ரீதியாக, சங்கராந்திகி வாஸ்துனாம் ஆந்திரப் பிரதேச மாவட்டங்களில் சங்கராந்தி பண்டிகைகளுடன் இணைந்து வண்ணங்களின் ஒரு கலவரமாகும். 2 மணிநேரம் 40 நிமிடம் உள்ள இந்த திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் தேவையான இடங்களில் சில சண்டை காட்சிகளையும் கொண்டுள்ளது. படம் எந்த ஒரு இடத்திலும் போர் அடிக்காமல் வேகமாக நகர்கிறது என்று தான் கூறவேண்டும். பீம்ஸ் செசரோலியோவின் கவர்ச்சிகரமான பாடல்கள், குறிப்பாக ‘கோதாரி கட்டு’, படத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது.

37e32077d4d03128e73aa2209020ffdc1736807121251313_original

படத்தின் சில காட்சிகளில், பின்னணி இசை அனிருத் ரவிச்சந்தரின் படங்களை நினைவூட்டுகிறது. இந்த திரைப்படத்தில் நூறு கோடி பட்ஜெட் இல்லை, பான் இந்தியா நடிகர்களும் இல்லை, ஆனாலும் 3 மாதங்களில் படப்பிடிப்பை முடித்து அடுத்த 6 மாதங்களில் ரிலீசுக்கு தயார் ஆகியுள்ளது. உங்கள் பொங்கல் விடுமுறையை குடும்பத்தோடு கொண்டாட இந்த சங்கராந்திக்கு வஸ்துனாம் திரைப்படத்தை தியேட்டரில் கண்டு ரசிக்கலாம். இது தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிளாக்பஸ்டர் பொங்கல் தான்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP