அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன் நடித்துள்ள "டூரிஸ்ட் ஃபேமிலி" படம் மே 1 வியாழன் அன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் வெளியான நாளிலிருந்தே படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் கண்டிப்பாக ஹிட் ஆகும் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். இந்த மாபெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படம் ரசிகர்களின் நம்பிக்கையை நிறைவேற்றியதா இல்லையா என்று பார்க்கலாம்.
டூரிஸ்ட் ஃபேமிலி:
இந்த படத்தில் சசிகுமார், சிம்ரன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். சசிகுமார் சிம்ரனின் மகன்களாக நடித்த மிதுன் மற்றும் கமலேஷ் இருவரின் நடிப்பும் படத்தில் மிகச் சிறப்பு. குறிப்பாக சிறுவன் கமலேஷின் நடிப்பு பாராட்டுக்குரியது. அதே போல எம். எஸ். பாஸ்கர், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி, யோகி பாபு, பகவதி, சுதர்ஷன், ரமேஷ் திலக் போன்றோரின் நடிப்பும் இந்த படத்திற்கு வலுவூட்டுகிறது. ஷான் ரோல்டன் இசையில் படத்தின் ஒரு சில காட்சிகள் ரசிகர்களை கண் கலங்க வைக்கிறது. சசிகுமார் தன்னம்பிக்கை கொண்ட கணவர் மற்றும் பொறுப்பான தந்தையாக இருக்க சிம்ரன் ஒரு வலிமையான குடும்பத் தலைவியாக, தன் கதாபாத்திரத்தைச் சிறப்பாக ஏற்று நடித்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.
இந்த படம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்தின் அறிமுக இயக்கம் என்று சொன்னால் நம்புவதே கடினம். அழகான எதார்த்தமான இயக்கம், மனதில் ஆழமான தாக்கம் கொண்ட கதை, நம் உணர்ச்சிகளைத் தொடும் காட்சிகள் ஆகியவற்றுடன் "டூரிஸ்ட் ஃபேமிலி" படம் பார்ப்பவர்களை ஒரு அழகான பயணத்தில் கொண்டு செல்கிறது.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் கதைச் சுருக்கம்:
இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சசிகுமார், சிம்ரன் தங்கள் குடும்பத்துடன் தமிழ்நாட்டுக்கு ஒரு படகில் ஏறி தப்பித்து வருகிறார்கள். ராமேஸ்வரம் வரும் அவர்கள் கடற்கரையில் தமிழக போலீஸாரால் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். ஆனால் போலீஸ் அதிகாரி ரமேஷ் திலக் அவர்களின் நிலையைப் புரிந்துகொண்டு சசிகுமார் மற்றும் குடும்பத்தை விடுவிக்கிறார். இதற்க்கு பிறகு சிம்ரனின் அண்ணன் யோகி பாபுவின் உதவியுடன் அவர்கள் சென்னைக்கு வருகிறார்கள். இந்நிலையில் ராமேஸ்வரத்தில் திடீரென ஒரு குண்டுவெடிப்பு நடக்க, இதற்கு யார் காரணம் எனத் தெரியாத நிலையில், இலங்கையில் இருந்து வந்த சசிகுமாரின் குடும்பத்தின் மீது போலீஸார் சந்தேகம் கொள்ள சென்னையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் இவர்களை தேடி போலீஸ் வருகிறது. போலீஸ் அவர்களை தேடி கண்டுபிடித்தார்களா? சசிகுமார் குடும்பத்தினருக்கு என்ன ஆச்சு என்பது தான் மீதி கதை.
படத்தின் முதல் காட்சியிலிருந்தே இந்த படம் விறுவிறுப்பாகத் தொடங்குகிறது. யோகிபாபுவின் காமடி காட்சிகள், சிம்ரனின் காம்பேக் என்று இந்த படத்தில் நிறைய பிளஸ் உள்ளது. குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய ஒரு படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி.
Image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation