துடரும் விமர்சனம் : மோகன்லாலின் மாஸான ஜனரஞ்சக படம், பிரகாஷ் வர்மா மிரட்டல்

தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்துள்ள துடரும் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். விஜய் சேதுபதி ரசிகர்கள் இப்படத்தை தவறவிடாதீர்கள். துடரும் படத்தில் விஜய் சேதுபதியும் இடம்பெற்று இருக்கிறார்.
image

தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் துடரும். எம்புரான் போல் துடரும் பேன் இந்தியா படமல்ல எனினும் பல தமிழ் ஆடியன்ஸிற்கு நிச்சயம் புரியம். பல இடங்களில் தமிழ் வசனங்கள் இடம்பெற்று இருக்கின்றன. ஷோபனா, பிரகாஷ் வர்மா, பினு பப்பு, மேத்யூ தாமஸ், பாரதிராஜா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ட்ரெய்லர் பார்த்தவுடன் பலரும் இதை திரிஷ்யம் படத்துடன் ஒப்பிட்டு பேசினர். ஆங்காங்கே சில சாயல்கள் இருந்தாலும் துடரும் படத்தின் கதை முற்றிலும் வேறு.

துடரும் கதைச்சுருக்கம்

மோகன்லாலின் மகனை காவல் அதிகாரி ஒருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக கொலை செய்துவிடுகிறார். கொலையாளியாக மோகன்லாலை ஜோடிக்க முயற்சிக்கின்றனர். மகனை இழந்த மோகன்லால் காவல் அதிகாரிகளை எப்படி பழிவாங்குகிறார் என்பதே துடரும்.

துடரும் விமர்சனம்

சினிமாவில் சண்டை பயிற்சி கலைஞரான மோகன்லால் கேரளாவில் கார் ஓட்டி வாழ்கிறார். மனைவி ஷோபனா, மகன் மேத்யூ தாமஸ், மகளுடன் அழகான பாதையில் குடும்பம் பயணிக்க திடீரென ஒரு பிரச்னையில் மோகன்லால் சிக்கிக் கொள்கிறார். தனது காரை விடுவிக்க காவல் அதிகாரிகளின் செயல்களுக்கு துணை போகிறார். அங்கு கொலை சம்பவத்திற்கு தனது கார் பயன்படுத்தப்பட்டதை அறிந்ததும் குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார். சம்பவத்தில் இறந்த நபர் தனது மகன் என தெரிந்த பிறகு காவல் அதிகாரிகளை எப்படி பழிவாங்குகிறார் என்பதே துடரும்.

துடரும் படத்தின் பாஸிட்டிவ்ஸ்

  • நீண்ட நாட்களுக்கு பிறகு மாஸ், கிளாஸ் காட்டி அற்புதமாக நடித்திருக்கிறார் மோகன்லால். ஷோபனா மற்றும் இதர கதாபாத்திரங்களும் நன்றாக நடித்துள்ளனர்.
  • வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரகாஷ் வர்மா மிரட்டல். இவருடைய கதாபாத்திரத்திற்காக கட்டாயமாக இந்த படத்தை திரையில் பார்க்கலாம்.
  • முதல் பாதி ஜனரஞ்சக படமாகவும், இரண்டாம் பாதி திருப்பங்களும் அதிரடி காட்சிகளும் நிறைந்த மாஸ் படமாகவும் எடுத்துள்ளனர்.
  • படத்தின் பின்னணி இசை கூடுதல் பலம் சேர்க்கிறது. இரண்டாம் பாதியில் அடித்து துவம்சம் செய்திருக்கின்றனர்.

துடரும் படத்தின் நெகட்டிவ்ஸ்

இறுதிக்காட்சியில் சொல்லப்பட்ட விஷயம் படத்திற்கு தேவையற்றது. காவல் நிலைய மரணங்கள் என்பதை எதற்காக ஆணவக் கொலைகள் என குறிப்பிட்டனர் எனத் தெரியவில்லை.

துடரும் ரேட்டிங் - 3.75 / 5

மோகன்லால் பேன் இந்தியா படங்களை தவிர்த்துவிட்டு திரிஷ்யம், துடரும் போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க வேண்டும் என்பது மலையாளம் மட்டுமல்ல தமிழ் சினிமா ரசிகர்களின் விருப்பமும் கூட.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP