
ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜவான் படத்தின் மூலம் இயக்குனர் அட்லீ பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கிறார். இந்த படத்தில் லீட் ரோலில் நடிகை நயன்தாரா மற்றும் சன்யா மல்ஹோத்ரா நடித்துள்ளனர். அட்லீ போல நயன்தாரா மற்றும் இசையமைப்பாளர் அனிருத்தும் பாலிவுட்டில் அறிமுகம் ஆகின்றனர். ஸ்பெஷல் ரோலில் தீபிகா படுகோன், வில்லனாக விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கின்றனர். கடந்த மாதம் வெளியான ஜவான் ட்ரெய்லர் பெரும் பாராட்டுக்களை வாங்கி ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது.
அட்லீ ஜவான் படத்தை முழுக்க முழுக்க ஆக்ஷன் பேக் நிறைந்ததாக எடுத்துள்ளதாகவும், ஹாரூக்கான் இதில் இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் 7ஆம் தேதி ஜவனா திரைப்படம் 3 மொழிகளில் வெளியாகிறது. அதே போல் சென்னையில் அடுத்த சில நாட்களில் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவும் நடைப்பெறவுள்ளதாம். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் அழைக்கப்பட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே ஜவான் படத்தில் இருந்து2 பாடல்கள் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. அட்லீயுடன் ஷாரூக்கான் சேர்ந்து நடனமாடிய எடம் பாடல் மற்றும் நயன்தாராவுடன் சேர்ந்து ஆடிய ரொமான்ஸ் பாடலான ஹையோடா பாடல் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இந்நிலையில் ஜவான் படத்தில் இருந்து 3 வது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாட் ராமையா வஸ்தாவையா என தொடங்கும் இந்த பாடல் நாளை வெளியாகிறது. இதுக் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஏற்கெனவே 1955ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ராமையா வஸ்தாவையா பாடல் இன்று வரையும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட் ராமையா வஸ்தாவையா என பெயரில் ஜவானில் இந்த பாடல் ரீமேக் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பாடல் குறித்த டீசரை நடிகர் ஷாரூக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், நடிகர் விஜய் சேதுபதியும் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இன்று டீசர் வெளியாக, நாட் ராமையா வஸ்தாவையா முழு பாடல் நாளை வெளியாகிறது. ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதுப்போன்ற சினிமா பதிவுகளுக்கு மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com