லப்பர் பந்து விமர்சனம்: சிக்ஸர் அடித்த லப்பர் பந்து, ஹவுஸ்புல் கட்சிகளுடன் வசூல் சாதனை!

அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள லப்பர் பந்து திரைப்படம் எப்படி இருக்கு என்ற விமர்சனம் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.  
image

தமிழ் சினிமாவில் கடந்த சில தினங்களாக சில முக்கிய படங்கள் ஒரே நாளில் தியேட்டரில் வெளியாகி வருகின்றது. அந்த வரிசையில் செப்டம்பர் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கத்தில் அவரே நடித்தும் தயாரித்திருக்கும் ‘கடைசி உலகப்போர்’ திரைப்படம் மற்றும் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடித்திருக்கும் ‘லப்பர் பந்து’ படமும் வெளியானது. இந்த நிலையில் லப்பர் பந்து திரைப்படம் மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தளபதி விஜயின் கோட் திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் தற்போது ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள லப்பர் பந்து திரைப்படம் வார இறுதி நாட்களில் ஹவுஸ்புல் கட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள லப்பர் பந்து திரைப்படம் எப்படி இருக்கு என்ற விமர்சனம் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

லப்பர் பந்து:


தமிழ் சினிமாவில் எப்போதும் விளையாட்டு போட்டிகளை வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். அந்த வரிசையில் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் தான் இந்த லப்பர் பந்து. இந்த படத்தை இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கி இருக்கிறார். இவர் இதற்கு முன்னதாக நெஞ்சுக்கு நீதி, எப்.ஐ.ஆர் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இதில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த லப்பர் பந்து திரைப்படம், தமிழ் சினிமாவில் பெரிய ஸ்போர்ட்ஸ் டிராமா படமாக அமையும் என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

படம் எப்படி இருக்கு?

lubber-pandhu-movie
படத்தின் நாயகன் அட்டக்கத்தி தினேஷ் உள்ளூரில் நடைபெறும் ரப்பர் பந்து கிரிக்கெட் போட்டிகளில் அதிரடி ஆட்டக்காரர். எங்கு கிரிக்கெட் போட்டி நடந்தாலும் தவறாமல் ஆஜராகிவிடுவார். அதே ஊரில் பந்துவீச்சில் கதாநாயகனை திணறடிக்கும் மற்றொரு கிரிக்கெட் வீரர் ஹரிஷ் கல்யாண். இதனால் இவர்கள் இருவருக்கும் ஈகோ வளர்கிறது. ரப்பர் பந்து 15 ரூபாய்க்கு விற்கும் காலத்தில் தொடங்கும் இந்த கதை, 55 ரூபாய்க்கு ரப்பர் பந்து விற்கும்போது முடிகிறது.

கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் தமிழ் சினிமாவில் வந்திருந்தாலும், கிராமங்களில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் என்னென்ன அலப்பறைகள் நடைபெறும் என்பதை அழகாகக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார் இந்த படத்தின் இயக்குனர் தமிழரசு பச்சைமுத்து. கிரிக்கெட், காதல், சாதிய பாகுபாடு என இரண்டரை மணி நேரத்தில் வெரைட்டியான சிக்ஸர்களை விளாசியுள்ளது இந்த லப்பர் பந்து. அந்த வரிசையில் கண்டிப்பாக குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம் இது.

இப்படம் 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் இப்படத்தால் பெரும் லாபம் கண்டுள்ளனர்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP