ரசிகர்களை மதிக்காத அஜித் ? தள்ளிப்போன விடாமுயற்சி; 2025ன் தொடக்கமே கதறல்

இழுத்த இழுப்புக்கெல்லாம் அஜித்தை பின்தொடர்ந்த ரசிகர்களுக்கு 2025ஆம் புத்தாண்டின் தொடக்கத்திலேயே பேரிடி விழுந்துள்ளது. அரியணை கொடுத்த எங்களை துளியும் மதிக்க தெரியாத அஜித்திற்கு ரசிகனாக இருப்பது மிகவும் தவறு என இணையத்தில் பதிவுகள் பறக்கின்றன.
image

சினிமாவின் மீது ஆர்வமே இல்லாத நடிகரை தலையில் வைத்து கொண்டாடியது மிகப்பெரிய பாவம் என விடாமுயற்சி படத்திற்காக காத்திருந்த அஜித் ரசிகர்கள் 2024ஆம் ஆண்டை கதறல்களோடு நிறைவுசெய்துள்ளனர். விடாமுயற்சி ட்ரெய்லர், பொங்கல் ரிலீஸ் தேதியுடன் போஸ்டர், ஏதாவது அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு 2025ஆம் புத்தாண்டை நிம்மதியாக வரவேற்க முடியாத அளவிற்கு டிச.31ஆம் தேதி இரவு 11 மணிக்கு பேரிடி விழுந்தது. குட் பேட் அக்லி மட்டுமல்ல பொங்கல் வெளியீட்டுக்கு தயாராக இருந்த மற்ற தமிழ் படங்களுக்கும் ஆப்பு வைத்துள்ளது அஜித்தின் அலட்சியப்போக்கு. விடாமுயற்சி ரிலீஸ் விஷயத்தில் அஜித்தின் மீது தமிழக திரையரங்க உரிமையாளர் சங்கம் நடவடிக்கை அவரது ரசிகர்களே வலியுறுத்துகின்றனர்.

விடாமுயற்சி ரிலீஸ்

ஆதிக் ரவிச்சந்தர் இயக்கத்தில் அஜித்தின் நடித்த குட் பேட் அக்லி பட போஸ்டர்கள் முதன் முதலில் வெளியான போது 2025 பொங்கல் ரிலீஸ் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து இறுதிக்கட்ட பணிகளில் இருந்த விடாமுயற்சி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என பேசப்பட்டது. ஆனால் அஜித் பைக்கை எடுத்துக் கொண்டு சென்ற உலக சுற்றுலா, துபாயில் ரேஸிங், திடீரென அறுவை சிகிச்சை உள்ளிட்ட காரணங்களால் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் நிறைவுபெறாமலே இருந்தது. பொங்கல் ரிலீஸை மனதில் வைத்து ஜெட் வேகத்தில் குட் பேட் அக்லி உருவான நிலையில் அஜித் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் பேசி விடாமுயற்சிக்கு முன்னுரிமை அளித்தார். படத்தை முடிக்க வேண்டும் என இசையமைப்பு பணிகளை தேவி ஸ்ரீ பிரசாத்திடம் இருந்து ஜீ.வி. பிரகாஷிடம் ஒப்படைத்த நேரம் அது. அஜித்தின் பேச்சை கேட்டு குட் பேட் அக்லி தயாரிப்பு நிறுவனமும் பொங்கல் ரிலீசில் இருந்து பின்வாங்கியது.

ரசிகர்களை மதிக்காத அஜித் ?

இந்த நிலையில் விடாமுயற்சியின் டீசர் வெளியீட்டுக்கு பிறகும் சூட்டிங் தொடர்ந்தது. ஒரு மாதத்தில் ரிலீசை வைத்துக்கொண்டு படத்தில் விஜே ரம்யா நடிப்பதாக போஸ்டர் வெளியிட்டனர். அடுத்த 10 நாட்களில் பாடல் வெளியானதால் ரசிகர்கள் பொங்கலுக்கு விடாமுயற்சி வெளியாகும் என நம்பினர். ஆனால் 2025 புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராக இருந்த அஜித் ரசிகர்களுக்கு டிச.31ஆம் தேதி இரவு 11 மணிக்கு பேரிடி விழுந்தது. தவிர்க்க முடியாத காரணங்களால் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இதை கண்டு மனம் நொந்து போன ரசிகர்கள் அஜித்திடம் இத்தனை ஆண்டுகளாக காட்டிய விஸ்வாசத்திற்கு இதுவே புத்தாண்டு பரிசு என சுக்கு நூறாக உடைந்தனர்.

பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதோடு விடாமுயற்சியையும் பார்த்துவிடலாம் என வெளிநாட்டில் வசிக்கும் அஜித் ரசிகர்கள் லட்சங்களில் செலவு செய்து டிக்கெட் போட்ட நிலையில் இப்படியான அறிவிப்பு தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து கிடைத்துள்ளது. வெளிநாட்டில் படத்தின் முன்பதிவும் நிறுத்தப்பட்டுள்ளது. அஜித் படத்துடன் மோத வேண்டாம் என பிற தமிழ் படங்களும் விலகியதால் பொங்கலுக்கு தமிழக திரையரங்குகள் வெறிச்சோடி இருக்கப் போகின்றன. தெலுங்கு படமான ராம் சரணின் கேம் சேஞ்சரும், பாலாவின் வணங்கான் மட்டுமே வெளியாகவுள்ளன. ஜனவரி 10 - 19 வரை வார விடுமுறை, பொங்கல் விடுமுறையை பயன்படுத்தி வசூலை குவிக்கலாம் என காத்திருந்த திரையரங்க உரிமையாளர்களும் அப்செட் ஆகியுள்ளனர்.

ரசிகர்களை வெறுக்கும் அஜித் ?

பழைய நேர்காணல்களில் ரசிகர்கள் இல்லையெனில் தான் இந்த நிலையில் இருக்க முடியாது என கூறிய அஜித் கடந்த சில ஆண்டுகளாக அனைத்திற்கும் துணை நின்ற ரசிகர்களின் மனதை நோகடித்து வருகிறார். மன்றம் கலைப்பு, அல்டிமேட் ஸ்டார், தல, கடவுளே என அழைக்க கூடாது, இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க மறுப்பு என எல்லாத்தையும் விட்டுக் கொடுத்த ரசிகர்களுக்காக அஜித் எதையுமே விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என திரையுலகினர் தெரிவிக்கின்றனர். குட் பேட் அக்லி போஸ்டரை கண்டவுடன் காதல் மன்னன் 2 எடுக்கலாமா என புகழ்ந்து தள்ளிய ரசிகர்களுக்கு அஜித் எடையைக் குறைத்து மெருகேற காரணம் அவருடைய ரேஸிங் ஆசையே என்று தற்போது புரிந்துள்ளது.

மேலும் படிங்ககிச்சா சுதீப்பின் மேக்ஸ் திரைப்படம் விமர்சனம்; நம்பி வாங்க சந்தோஷமா போங்க

அஜித் நினைத்திருந்தால் ரிலீஸ் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்திருத்திருக்கலாம். ஆனால் எதைப் பற்றியுமே கவலைப்படாமல் அவர் குடும்பத்துடன் வெளிநாட்டில் புத்தாண்டு கொண்டாடி இருக்கிறார்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP