LGM movie release : மிகப்பெரிய எதிர்பார்ப்பு! LGM ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

தோனி நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் படமான எல்ஜிஎம் படத்தில் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. 

lgm update tamil

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டனுமான தோனி, தயாரிப்பு நிறுவனம் ஒன்ரை தொடங்கியுள்ளார். தோனியின் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தோனியின் மனைவி சாக்‌ஷி தோனி கவனித்து கொள்வார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு தோனி என்டெர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடேட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் தோனி நிறுவனம் தமிழ் படத்தை முதன் முதலாக தயாரிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தில் LGM lets get married என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது.

இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். படத்தின் டீசர், ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தனது காதலி ஆசைக்காக , காதலியின் குடும்பம் மற்றும் அம்மாவுடன் டூர் செல்லும் ஹரிஷ் கல்யாண் அங்கு சந்திக்கும் பிரச்சனைகள் தான் படத்தின் மையக்கரு என்பது ட்ரெய்லர் மூலம் தெரிய வந்துள்ளது. கண்டிபாக குடும்பத்துடன் சென்று ரசிக்கும்படியான ஃபீல் குட் மூவியாக இது இருக்கும் என்ப படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

new release

படத்தில் மிர்ச்சி விஜய், யோகி பாபு, உள்ளிட்ட பலர் நடித்துளள்னர். தளபதி விஜய்யின் அடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளது ரசிகர்களுக்கு கூடுதல் சர்ப்ரைஸ். படத்தின் ரிலீஸ் தேதி குறித்த ஆறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. வரும் ஜூலை 28 அன்று படம் தியேட்டர்களில் வெளியாகிறது.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: instagram

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP