herzindagi
image

தம்முடு, ஒக்கடு, பவித்ர பந்தம்... நடிகர் விஜய்யின் டாப் 5 தெலுங்கு ரீமேக் படங்கள்

2000ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை விஜய் நடித்த பெரும்பாலான படங்கள் தெலுங்கில் இருந்து உரிமம் பெற்று ரீமேக் செய்யப்பட்டவை. விஜய் நடித்த கில்லி திரைப்படம் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த ஓக்கடு படத்தின் ரீமேக் என பலருக்கும் தெரியும். இதே போல விஜய்யின் எந்தெந்த படங்கள் தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்பட்டவை என்று பார்க்கலாம்.
Editorial
Updated:- 2025-06-21, 19:48 IST

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழும் நடிகர் விஜய் ஜனநாயகன் படத்தோடு திரையுலகிற்கு முழுக்கு போட்டு அரசியலில் கவனம் செலுத்தவுள்ளார். அவருடைய பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதியை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இளைய தளபதி என்ற பட்டத்தை 1994ல் விஜய் பெற்றாலும் அவருக்கு இன்றிருக்கும் ரசிகர் பட்டாளம் 2000களில் உருவானவை. 2000 முதல் 2010 வரை கிட்டத்தட்ட 25 படங்களில் நடித்திருந்தார். பெரும்பாலான 90ஸ் கிட்ஸ் அவருடைய தீவிர ரசிகர்களாக மாறினர். விஜய் நடித்து மெகா ஹிட்டான படம் கில்லி. அது தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த ஒக்கடு படத்தின் உரிமம் பெற்ற தமிழ் ரீமேக் என எல்லோருக்கும் தெரியும். அதே போல நடிகர் விஜய்யின் டாப் 5 தெலுங்கு ரீமேக் படங்களை பார்ப்போம். 

தம்முடு - பத்ரி 

விஜய் பாக்ஸர் அவதாரம் எடுத்த படம் பத்ரி. வெட்டியாக ஊர் சுற்றும் தம்பி இறுதியில் பொறுப்பு உணர்ந்து அண்ணனுக்காக குத்துச்சண்டை போட்டு வெற்றி பெறுவார். பத்ரி படம் தமிழில் 2001ஆம் ஆண்டு வெளியானது. இதன் ஒரிஜினல் வெர்ஷன் தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த தம்முடு ஆகும். 1999ல் தம்முடு படத்தை இயக்கிய அருண் பிரசாத் தமிழில் விஜய்யை வைத்து பத்ரி இயக்கினார்.

ஒக்கடு - கில்லி 

2003ல் ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியான ஒக்கடு திரைப்படம் அதே ஆண்டில் உரிமம் பெற்று தமிழில் ரீமேக் செய்யப்பட்டு 2004 ஏப்ரலில் கில்லி என வெளியானது. தோட்டா தரணி தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப பல மாற்றங்களை செய்திருந்தார். பூமிகா படிக்கும் கல்லூரியில் மகேஷ் பாபு விளையாட செல்வார். அண்ணன் கொல்லப்பட்ட தகவலை பூமிகா கேட்கும் போது மகேஷ் பாபு பார்த்துவிடுவார். அங்கு குர்னூல் இங்கு மதுரை, அங்கு ஐதரபாத் இங்கு சென்னை. இரண்டாம் பாதியில் பிரகாஷ் ராஜை மகேஷ் பாபு கடத்திவிடுவார். பூமிகாவை கண்டுபிடிக்கும் வரை குளிக்காமல் இருப்பார் பிரகாஷ் ராஜ். 

பவித்ர பந்தம் - பிரியமானவளே

பத்ரி, கில்லி படங்களுக்கு முன்பாகவே தெலுங்கு படமான பவித்ர பந்தம் எனும் படத்தை தமிழில் பிரியமானவளே என விஜய் நடித்திருந்தார். பவித்ர பந்தம் 1996ல் வெங்கடேஷ், மறைந்த நடிகை சவுந்தர்யா நடிப்பில் வெளியானது. தமிழில் 2000ல் பிரியமானவளே ரிலீஸ் ஆனது. 

நீதோ - சச்சின்

2002ல் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான படம் நீதோ. பல புதுமுகங்கள் இப்படத்தில் அறிமுகமாகின. மறைந்த ராமோஜி ராவ் அப்படத்தை தயாரித்திருந்தார். படம் தோல்வி அடைந்த போதிலும் தமிழில் விஜய்யை வைத்து 2005ல் சச்சின் ஆக ஜான் மகேந்திரன் ரிலீஸ் செய்தார். சந்திரமுகியுடன் மோதியதால் கவனம் பெறாத சச்சின் சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்த போது வாடி வாடி பாடலுக்காக கொண்டாடப்பட்டது. 

அதனோக்கடே - ஆதி 

தெலுங்கில் 2005ல் வெளியான அதனோக்கடே திரைப்படம் தமிழில் 2006ஆம் ஆண்டு ஆதி என ரீமேக் செய்யப்பட்டது. தமிழ் தெலுங்கு இரண்டிலும் படத்திற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதுமட்டுமல்ல சிறு நவுதோ என்ற தெலுங்கு படம் தமிழில் யூத் என ரீமேக் செய்யப்பட்டது. போக்கிரி படமும் மகேஷ் பாபு நடித்தது.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com