herzindagi
image

ஜாதக ரீதியாக முகத்தில் தோன்றும் மச்சங்கள் மூலம் மற்றவர்கள் எண்ண ஓட்டத்தை அறியலாம்

முகத்தில் உள்ள மச்சங்கள் வைத்து மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சொல்ல முடியும். அந்த மச்சங்களைப் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்வோம். இதை அறிந்து உங்களிடம் பழகும் நபர்கள் பற்றி  அறிந்துகொள்ள முடியும்
Editorial
Updated:- 2025-06-19, 19:37 IST

ஒவ்வொருவரின் முகத்திலும் எங்காவது ஒரு மச்சம் இருக்கும். ஆனால் சில மச்சங்கள் அவர்களது மனதில் என்ன நடக்கிறது என்பதை வெளிப்படுத்தும் கண்ணடி போல் செயல்படுகிறது. அவை உங்கள் இயல்பை வெளிப்படுத்துகிறது. ஒரு மனித உடலில் இரண்டு பெட்டகங்கள் உள்ளன, மனம் மற்றும் மூளை. அதில் பல விஷயங்கள் உள்ளன, அவை உங்கள் நடத்தை மூலம் வெளிவருகின்றன. முகத்தில் இருக்கும் மச்சங்கள் நபர்களின் நடத்தையைப் பற்றிச் சொல்கின்றன. அத்தகைய சூழ்நிலையில், இன்று அந்த மச்சங்களைப் பற்றி பார்க்கலாம், அவை மனதில் நடக்கும் நல்ல மற்றும் கெட்ட விஷயங்களை வெளிப்படுத்துகிறது.

புருவங்களுக்கு இடையே தோன்றும் மச்சம்

 

இந்த இடத்தில் மச்சம் இருக்கும் நபர்கள் யோசிப்பது என்னவென்றால் குறைந்த வேலை செய்து அதிக பெயர் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் பல நாட்கள் எதையாவது பற்றி யோசித்துக்கொண்டே இருப்பார்கள். ஏதாவது ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால், அதை வெளிப்படையாகப் பேசுவதற்குப் பதிலாக, அதை மற்றவரிடம் தங்கள் செயலின் மூலம் எப்படி வெளிப்படுத்துவது என்று யோசிப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் அதிகமாகப் பேச விரும்ப மாட்டார்கள். அவர்கள் தங்கள் வேலையை முழு மனதுடன் செய்ய நினைப்பார்கள், ஆதேபோல் மற்றவர்களின் வேலைகளையும் கவனிக்க விரும்புகிறார்கள்.

eyebrow mole on face

மூக்கின் நடுவில் இருக்கும் மச்சம்

 

மூக்கின் நடுவில் மச்சம் இருப்பவர்கள் மிகவும் குறுகிய மனநிலை கொண்டவர்கள். சிறிய விஷயங்களுக்கும் கோபப்படுவார்கள். பல சமயங்களில் கோபத்தை வெளிப்படுத்த முடியாதபோது, மற்றவரின் வேலையை எப்படி கெடுப்பதேன்று நினைப்பார்கள். இந்த நபர்கள் குறிப்பாக முதலில் தங்கள் சொந்த நலனைப் பற்றி மட்டுமே யோப்பார்கள். இருப்பினும், அவர்களின் பேச்சு மிகவும் நன்றாக இருப்பதால், அவர்கள் உங்களைப் பற்றி உள்ளே என்ன நினைக்கிறார்கள் என்பதை நீங்கள் கற்பனை கூட செய்ய முடியாது.

 

மேலும் படிக்க: தொட்டதெல்லாம் துலங்க உங்கள் ராசிக்கு ஏற்ற அதிர்ஷ்ட நிறங்களை தெரிஞ்சுகோங்க

 

கண்ணுக்குள் தோன்றும் மச்சம்

 

வலது கண்ணுக்குள் மச்சம் இருந்தால் நேர்மையானவர்கள், எளிமையானவர்கள். அவர்கள் மனதில் யாருக்கும் எந்தத் தீய எண்ணமும் இருக்காது. அவர்கள் மனதில் என்ன இருக்கிறதோ அதை முகத்தில் சொல்வார்கள். யாரைப் பற்றியும் அதிகமாக யோசித்து நேரத்தை வீணாக்க மாட்டார்கள். ஒவ்வொரு கணமும் உற்பத்தித் திறன் கொண்டவர்களாக இருக்க விரும்புகிறார்கள். அதனால்தான் அத்தகையவர்கள் எல்லாவற்றிலும் எப்போதும் முன்னால் இருப்பார்கள். மறுபுறம், இடது கண்ணுக்குள் மச்சம் இருந்தால், அவர்கள் மிகவும் பாதுகாப்பற்ற வகையைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு எவ்வளவு நல்ல நண்பர் இருந்தாலும், அவருக்கு ஏதாவது நல்லது நடந்தால், அவர்கள் வருத்தப்படுகிறார்கள், அவரை வெல்லும் போட்டியில், எந்த அளவிற்கும் எதையும் செய்ய நினைப்பார்கள்.

eye inside mole on face

கீழ் உதட்டில் தோன்றும் மச்சம்

 

உதட்டில் மச்சம் இருப்பவர்கள் மிகவும் இனிமையாகப் பேசுவார்கள் என்று கூறப்படுகிறது. குறிப்பாக கீழ் உதட்டில் மச்சம் இருப்பவர்கள், அளவிடப்பட்ட வார்த்தைகளில் பேசுவார்கள், யாரையும் புண்படுத்தாத வார்த்தைகள் மற்றும் தெளிவாக பேச நினைப்பார்கள். ஆனால் ஆழமான கருப்பு மச்சம் உள்ளவர்கள் மட்டுமே இதைச் செய்கிறார்கள். லேசான நிறம் கொண்ட மச்சம் உள்ளவர்கள் அரசியல் மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள். அத்தகையவர்களுக்கு யாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் எப்போதும் எல்லாவற்றிலும் தங்கள் சொந்த நலனையே தேடுகிறார்கள். இவர்கள் மிகவும் புத்திசாலிகள்.

 

மேலும் படிக்க: இந்த இரண்டு ராசிகள் நண்பர்களாக இருக்க முடியாது; உங்க ராசி இருக்கானு பாருங்க

 

வலது கண்ணுக்கு அருகில் மச்சம்

 

வலது கண்ணுக்கு அருகில் மச்சம் உள்ளவர்கள் மிகவும் காமவெறி கொண்டவர்கள். அவர்கள் எப்போதும் செக்ஸ் பற்றியே யோசிப்பார்கள். அத்தகையவர்கள் தங்கள் மனதில் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நீங்கள் ஒருபோதும் யூகிக்க முடியாது. அவர்களின் வார்த்தைகள் எப்போதும் இரட்டை அர்த்தத்தைக் கொண்டுள்ளதாக இருக்கும். அவர்களின் செயல்பாடுகளும் அவர்களின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவை.

eye inside mole on face 1

 

இடது கன்னத்தில் மச்சம் இருக்கும் நபர்கள்

 

இடது கன்னத்தில் மச்சம் இருப்பவர் குறைவாகப் பேசுபவர், ஆனால் மனதில் நிறைய விஷயங்கள் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் எப்போதும் தங்கள் பணத்தை எப்படிச் சேமிப்பது, மற்றவர்களைச் செலவு செய்வது என்று யோசிப்பார்கள். எனவே அவர்களிடம் கவனமாக இருங்கள். மற்றவர்களை தங்கள் வார்த்தைகளில் சிக்க வைப்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் ஒரு சில வார்த்தைகளில் பல விஷயங்களைச் சொல்வார்கள், அவர்களை விட யாரும் சிறந்தவர்களாக இருக்க முடியாது என்று நீங்கள் உணருவீர்கள்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com