herzindagi
image

தொட்டதெல்லாம் துலங்க உங்கள் ராசிக்கு ஏற்ற அதிர்ஷ்ட நிறங்களை தெரிஞ்சுகோங்க

உங்கள் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான நிறம் இருக்கும். ஆனால் உங்கள் ராசிக்கு ஏற்ற அதிர்ஷ்ட நிறம் பற்றி உங்களுக்கு தெரியுமா ? ராசிக்கு ஏற்ற நிறங்களில் ஆடை அணிவது, பொருட்கள் வாங்குவது அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.
Editorial
Updated:- 2025-06-04, 20:06 IST

ஒவ்வொரு ராசிக்கும் ஏற்ற அதிர்ஷ்ட நிறங்கள் இருக்கும். உங்கள் ராசிக்கு ஏற்ற நிறத்தில் உடைய அணிவது அல்லது பொருட்களை பயன்படுத்துவது போன்ற செயல்களால் உங்கள் வாழ்க்கையில் பல நேர்மறையான விளைவுகளை காணலாம். உங்கள் வாழ்க்கை பயணத்தை எளிதாக்கவும், கடினமான நாட்களை கடந்து வரவும், எல்லா செல்வ வளங்களை பெற்று சுகமாக வாழவும் உங்கள் ராசிக்கு ஏற்ற நிறத்தை தெரிந்துகொள்ளுங்கள்.

lucky colors for zodiac signs

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் மென்மையான குணம் உடையவர்கள் மற்றும் கொள்கை ரீதியாக செயல்படக் கூடியவர்கள். நேர்மையாகவும், அப்பாவியாகவும் இருப்பார்கள். இவர்களுடைய அதிர்ஷ்ட நிறம் நீலம் மற்றும் அடர் சிவப்பு நிறம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் நம்பகத்தன்மை உடையவர்கள். உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய நிறங்கள் லைட் பிரவுன், பச்சை மற்றும் கிரீம் நிறம் ஆகும்.

மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்கள் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பார்கள். ஆனால் ஒரு சில நேரங்களில் கணிக்க முடியாத வகையில் செயல்பட கூடியவர்கள். வெளிர் மஞ்சள் மற்றும் பச்சை நிறம் மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.

கடகம்

கடக ராசியில் பிறந்தவர்கள் மென்மையான பண்புகளை கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய நிறங்கள் வெளிர் நீளம் மற்றும் ஊதா நிறம் ஆகும்.

சிம்மம்

அன்பு மற்றும் அங்கீகாரத்திற்காக ஏங்கும் சிம்ம ராசிக்காரர்களே, உங்களுக்கான அதிர்ஷ்ட நிறங்கள் தங்கம், ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு ஆகும். இந்த நிறங்களில் ஆடை அணியவும்.

கன்னி

கடினமாக உழைக்கும் கன்னி ராசியினரே உங்களுக்கு அடர்ந்த மற்றும் பச்சை நிறம் அதிர்ஷ்டத்தை பெற்று தரும்.

துலாம்

அன்புக்கும், பண்புக்கும் சொந்தக்காரரான நீங்கள் பிடித்தவர்களுக்காக எதையும் செய்ய துணிந்தவர்கள். உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் பிங்க் ஆகும்.

விருச்சிகம்

நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக தேவை இல்லாமல் கவலைப்படுபவர்கள். மற்றவர்களிடம் நல்ல பெயர் வாங்குவதே இவர்களின் இலக்காக இருக்கும். இவர்களுடைய அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் மெரூன் ஆகும்.

தனுசு

சுயமாக சிந்தித்து சிறப்பாக முடிவெடுக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு ஆகும்.

மகரம்

யார் பற்றியும் குறை கூறாமல் அமைதியாக வாழும் உங்களுக்கு அதிர்ஷ்ட நிறம் அடர்ந்த பச்சை மற்றும் நீலம் ஆகும்.

கும்பம்

நியாயத்தின் பக்கம் நிற்கும் நீங்கள் சண்டை போட்டாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும் உங்களுக்கு பச்சை கலந்த நீல நிறம் அதிர்ஷ்டம் தரும்.

மீனம்

தன்னலமற்ற உள்ளம் கொண்ட மீன ராசியினரே உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் நீலம் மற்றும் வெளிர் பச்சை ஆகும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com